கிரிக்கெட்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

அன்பு வணக்கம்!

ஆசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசிரியர்

ஆசிரியர்

அன்பு வணக்கம்!

மீண்டும் ஒரு முறை நாக் அவுட் போட்டியில் தோல்வியடைந்து உலகக்கோப்பையை இழந்திருகிறது இந்தியா. ஆனால், இந்தத்தோல்விக்கு ஒட்டுமொத்தமாக கேப்டன் கோலி மீது பழியைப்போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறதுசாஸ்திரி கேம்ப்.

நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் நான்காவது வீரராக தோனியைக் களமிறக்காமல் அவரை ஏழாவது இடத்தில் களமிறக்கியது கேப்டன் செய்த மிகப்பெரிய தவறு. பன்ட், பாண்டியா என ஒவ்வொருவராக பெவிலியன் வந்துகொண்டிருக்க, தோனியின் முடிவு குறித்து பயிற்சியாளர் சாஸ்திரியிடம் கடுமையாக விவாதித்துக்கொண்டிருந்தார் கோலி. கேப்டன் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் பயிற்சியாளர் முடிவெடுத்தால் இதுதான் நடக்கும். இதற்கு முழுக் காரணமும் கோலியே. பயிற்சியாளர் சாஸ்திரிக்கு அதிகபட்ச சுதந்திரம் வழங்கியிருக்கிறார் கோலி. அந்த சுதந்திரம்தவறாகப் பயன்படுத்தப்பட்டது. விளைவு மோசமான தோல்வி. இப்போது விமர்சிக்கப்படுவது சாஸ்திரி அல்ல கோலி மட்டுமே.

அன்பு வணக்கம்!

வெற்றி- தோல்வி என இரண்டுக்குமே பொறுப்பேற்க வேண்டியவர் கேப்டன்தான். அதை நிச்சயம் இப்போது உணர்ந்திருப்பார் கோலி. சாஸ்திரி குழப்பம், ரோஹித் விவகாரம் என எல்லாவற்றையும் மறந்து கோலி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது. அடுத்தாண்டு அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்கிவிடும். முழுமையாக இன்னும் 1 வருடம் இருக்கிறது. உலகக்கோப்பைக்கான அணியை கோலி தயார் செய்யவேண்டும். இந்த உலகக்கோப்பையில் கற்றுக்கொண்ட பாடத்தில் இருந்து அவர் பல மாற்றங்களைச் செய்யவேண்டும். சரியானப் ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எந்த பேட்ஸ்மேன் எந்தப் பொசிஷனுக்காக அணியில் எடுக்கப்படுகிறாரோ அதில் அந்த பேட்ஸ்மேனைத் தொடர்ந்து நிறுத்திப் பயிற்சியளிக்கவேண்டும். சில வீரர்கள் ஒருபோட்டியில் சொதப்பினாலே அணியைவிட்டு ஓரங்கட்டுவது, சிலர் எவ்வளவு சொதப்பினாலும் அணியில் தக்கவைப்பது என்கிற போக்கை உடனடியாக நிறுத்தவேண்டும்.

2020 டி20 உலகக்கோப்பை கோலி கையால் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வரவேண்டும். அதற்கு கோலியின் கவனம் கிரிக்கெட்டில் இருக்கவேண்டும். கோலியை கிரிக்கெட்டின் மீது கவனம் செலுத்தவிடுவோம்!

– ஆசிரியர்