Published:Updated:

`டான் பிராட்மேனின் 100-வது சதம்; இந்திய பௌலரின் கனெக்ஷன்!' - 7 கோடி ரூபாய் கேள்வி சுவாரஸ்யம்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தும் நிகழ்ச்சியில் இந்த ஆண்டில் ஒரு கோடி ரூபாய் வென்ற முதல் நபர் என்ற பெருமையை பீகாரைச் சேர்ந்த சனோஜ் ராஜ் பெற்றிருக்கிறார்.

Don Broadman
Don Broadman ( Cricket.com.au )

தனியார் தொலைக்காட்சியில் அமிதாப் தொகுத்து வழங்கும் பிரபல விநாடி வினா நிகழ்ச்சி கேபிசி. இந்த ஆண்டு 11வது சீஸனாக ஒளிபரப்பாகி வருகிறது. ரூ.7 கோடி ரூபாயை அதிகபட்ச பரிசுத் தொகையாகக் கொண்ட அந்த நிகழ்ச்சியில், 7 கோடி ரூபாய்க்கான கேள்விக்கு விடை தெரியாததால் சனோஜ் ராஜ், ஒரு கோடி ரூபாயோடு திருப்திப்படுவதாகக் கூறி வெளியேறினார். 7 கோடி ரூபாய்க்கான கேள்வியாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் டான் பிராட்மேனைப் பற்றியது.

amitabh bachchan, sanoj
amitabh bachchan, sanoj
Twitter

லாலா அமர்நாத் தலைமையிலான இந்திய அணி 1947-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது சிட்னி மைதானத்தில் டான் பிராட்மேன், முதல்தரப் போட்டிகளில் தனது 100 வது சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். எந்த இந்திய பௌலரின் பந்துவீச்சில் ஒரு ரன் எடுத்து பிராட்மேன், முதல்தர போட்டிகளில் 100வது சதத்தை அடித்தார் என்ற கேள்வியே சனோஜ் குமாரிடம் 7 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான கேள்வியாக முன்வைக்கப்பட்டது. அவருக்கு புக்கா ஜலானி, சி ரங்காச்சாரி, கிஷன்சந்த் மற்றும் கன்வர் ராய்சிங் ஆகிய 4 பதில்கள் கொடுக்கப்பட்டன. இந்தக் கேள்விக்குத்தான் விடை தெரியாமல் நிகழ்ச்சியில் இருந்து முந்தைய பரிசுத் தொகையுடன் வெளியேறுவதாக சனோஜ் கூறியிருந்தார்.

பிராட்மேனின் 100வது சதம்

பிராட் மேனின் 100வது முதல் தர சதம் அடிக்கப்பட்ட போட்டி குறித்து அதிகம் வெளியில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தச் சம்பவம் நிகழ்ந்தது 1947-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி. அன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய லெவன் அணிக்கெதிராக இந்தியன்ஸ் என்ற பெயரில் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது.

Don Broadman
Don Broadman
Cricket.com.au

அன்றைய போட்டியில் சதமடித்தால், முதல்தர போட்டிகளில் பிராட்மேனின் 100வது சதமாக அது அமையும் என்பதால் போட்டி நடைபெற்ற சிட்னி மைதானத்தில் பெரிய அளவில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்திய அணி முதல் பேட் செய்யவே, பிராட்மேன் பேட்டிங் செய்ய இரண்டாவது நாளில்தான் வாய்ப்புக் கிடைத்தது.

பிராட்மேன், 99 ரன்கள் எடுத்திருந்தநிலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எல்லைக்கோட்டில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கிஷன்சந்தைப் பந்துவீச அழைத்தார் கேப்டன் லாலா அமர்நாத். அவரது பந்துவீச்சில் ஒரு ரன் எடுத்து, தனது 100வது முதல்தரப் போட்டி சதத்தை நிறைவு செய்தார் பிராட்மேன். ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்தநிகழ்வை வெகுவாகக் கொண்டாடினர்.

Lala Amarnath
Lala Amarnath
navhindtimes.in
எம்.இ, எம்.டெக் படிப்பு மட்டும் போதாது! பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்குப் புதிய தகுதிப் படிப்பு

இதுகுறித்து பிராட்மேன், தனது சுயசரிதையான `Farewell to Cricket' என்ற புத்தகத்தில், ``கிஷன்சந்தை பந்துவீச லாலா அமர்நாத் அழைத்தபோது, அவர் எப்படி பந்துவீசுவார் என்ற ஒரு ஐடியாவே எனக்கு இல்லை. அந்தப் போட்டியில் அவர் அதற்கு முன்பாகப் பந்துவீசவும் இல்லை. மிகவும் கவனமாக அவரது பந்துவீச்சை எதிர்க்கொண்ட நான், ஒரு ரன் எடுத்து அந்த மகிழ்வான தருணத்தைப் (முதல்தர போட்டிகளில் 100வது சதம்) பெற்றேன்'' என்று நினைவுகூர்ந்திருக்கிறார்.

சுதந்திரத்துக்குப் பிறகான முதல் சுற்றுப் பயணம்

1947-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரை 0 - 4 என்ற கணக்கில் இழந்தது. நாடு சுதந்திரம் பெற்றபிறகான இந்திய அணியின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் அது. பிராட்மேன் 100வது முதல்தர சதமடித்த அந்தப் போட்டியில் இந்திய அணி வென்றது. 4 நாள்கள் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் வினு மன்கட், இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் உட்பட 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Vikatan

பேட்டிங்கில் கலக்கிய கிஷன்சந்த், முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களும் எடுத்தார். 1947-ம் ஆண்டு சுற்றுப் பயணத்தில் இந்திய அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது.

News Credits: TOI