Published:Updated:

`டி20 உலகக் கோப்பையில் தோனி ரோலில் செயல்பட விருப்பம்!' - வாய்ப்பை எதிர்நோக்கும் தினேஷ் கார்த்திக்

டொமெஸ்டிக் போட்டிகளில் எனது இந்த ஃபார்மைத் தொடர்ந்தால் நிச்சயமாக உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் & பேட்ஸ்மேன், தினேஷ் கார்த்திக். தமிழகத்தைச் சேர்ந்த இவர், உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தார். அந்தத் தொடரில் சரியாக சோபிக்காததால், அதன்பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கத் தொடரில் இடம்பெறவில்லை. இருந்தாலும் விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணியில் விளையாடிவரும் இவர், சிறப்பான ஃபார்மில் உள்ளார். 6 போட்டிகளில் 349 ரன்கள், 87.25 ஆவரேஜ் என சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

இதற்கிடையே, அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 தொடரில், தோனியின் இடம் தனக்குக் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈஎஸ்பிஎன் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``என்னுடைய அடுத்த இலக்கு, டி20 உலகக்கோப்பை தொடர்தான். அதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. எனினும் டொமெஸ்டிக் போட்டிகளில் எனது இந்த ஃபார்மைத் தொடர்ந்தால், நிச்சயமாக உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சர்ச்சையான டி-ஷர்ட் போட்டோ!-தினேஷ் கார்த்திக்கிற்கு `show cause' நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ!

இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்துள்ளேன் என நினைக்கிறேன். கடந்த உலகக் கோப்பையில் நான் சரியாக விளையாடவில்லை. ஆனால், அதைவைத்து டி20 போட்டியில் இருந்தும் என்னைத் தூக்கிவிட்டார்கள். தோனி விளையாடிய ரோலுக்கு தற்போது நான் பொருத்தமாக இருப்பேன் என நினைக்கிறேன்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

அப்படி விளையாடினால், நான் ஏதாவது செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், தமிழகம் மற்றும் கே.கே.ஆர் அணிக்காக அதைச் செய்துவருகிறேன். எனக்கான கதவு திறந்தால் நிச்சயம் முன்னேறிச்செல்வேன். டி20 உலகக் கோப்பை தொடர், நிச்சயமாக நான் விளையாட விரும்பும் ஒன்று" என்று கூறியுள்ளார்.

Vikatan