Published:Updated:

இறுதிப்போட்டியில் சேப்பாக் vs திண்டுக்கல்... ஜெயிக்கப்போவது யார்? #TNPL

கார்த்திகா ராஜேந்திரன்

லீக் சுற்றில் 6/7 போட்டிகளை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்ற திண்டுக்கல் டிராகன்ஸுக்கு, குவாலிஃபையர் 1-ல் சேப்பாக் கில்லீஸ் செக் வைத்தது.

Dindigul Dragons
Dindigul Dragons ( TNPL )

டிஎன்பிஎல் குவாலிஃபையர் 2-ல் திண்டுக்கல் - மதுரை அணிகள் மோதின. 2018 டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி மதுரை அணி சாம்பியனானது. சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு, இந்த சீசனின் குவாலிஃபையரில் இரு அணிகளும் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் இணை 101 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்றது.

இந்த சீசனில் நாராயண் ஜெகதீசன்- இதுவரை!

Narayan Jagadeesan
Narayan Jagadeesan
TNPL
9 போட்டிகள் - 448 ரன்கள் - 50's (4) - 100's (1)

பேட்டிங்கில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், பெளலிங்கில் சிலம்பரசன், ரோஹித் ஆகியோரின் ஃபார்ம் திண்டுக்கல் அணிக்கு சாதகம். லீக் சுற்றில் 6/7 போட்டிகளை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றது. ஆனால், குவாலிஃபையர் 1-ல் திண்டுக்கல் டிராகன்ஸுக்கு சேப்பாக் கில்லீஸ் செக் வைத்தது.

5 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் வெற்றிபெற, மூன்றாவது முறையாக டிஎன்பிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது. முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய திண்டுக்கல் அணிக்கு, குவாலிஃபையர் 2 வாய்ப்பு கிடைக்க, இம்முறை விட்டதைப் பிடித்தது.

Abhinav - Silambarasan
Abhinav - Silambarasan
TNPL

175 ரன் இலக்கை சேஸ் செய்த மதுரை பேட்ஸ்மேன்களை சுழற்பந்துவீச்சாளர்கள் அபினவ், சிலம்பரசன் பெவிலியனுக்கு அனுப்பினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மதுரை அணி, 19.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. 45 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற திண்டுக்கல், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆகஸ்டு 15 - இறுதிப்போட்டி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்

மாலை 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது