Published:Updated:

6/6 போட்டிகளில் வெற்றி.. கோப்பையைக் குறிவைக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ்!

2018 டி.என்.பி.எல் இறுதிப்போட்டியில் கோப்பையை நழுவவிட்ட திண்டுக்கல் டிராகன்ஸ், இம்முறை விட்டதைப்பிடிக்கும் முனைப்பில் விளையாடி வருகிறது..

2019 டி.என்.பி.எல் டி-20 தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய ஆறு அணிகள் போட்டாபோட்டியில் உள்ளன. திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், கடைசி இடத்துக்கு காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் போட்டியிடுகின்றன. நேற்று நடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் காஞ்சி வீரன்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கடினமாகியுள்ளது.

நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதிய போட்டியில், டாஸ் வென்ற காஞ்சி அணி, பேட்டிங் தேர்வு செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் விஷால் வைத்யா அரை சதம் கடந்து காஞ்சி அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். 5-வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் கடந்திருந்த காஞ்சி அணி, அடுத்து 50 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

விஷால் வைத்யாவைத் தொடர்ந்து வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். திண்டுக்கல் டிராகன்ஸ் லெக் ஸ்பின்னர் அபினவ், மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். விஷால் வைத்யா, அருண், பாபா அபாரிஜித் என டாப் ஆர்டரை காலி செய்த அபினவ், காஞ்சி அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினார். ஏழாவதாக களமிறங்கிய லோகேஷ்வர் 20 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்தது காஞ்சி வீரன்ஸ் அணி.

Abhinav M
Abhinav M
TNPL

எளிதான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு, ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஹரி நிஷாந்த், நாராயண் ஜெகதீசன் 40 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய ஹரி நிஷாந்த் அரை சதம் கடந்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 8-வது ஓவரில் ஹரீஷ் பந்துவீச்சில் ஜெகதீசன் அவுட்டாக, சுமந்த் ஜெயின் களமிறங்கினார். காஞ்சி வீரன்ஸ் பந்துவீச்சாளர் திவாகர் வந்த வேகத்தில் சுமந்த்தை பெவிலியன் அனுப்பினார். நான்காவதாக களமிறங்கிய அஷ்வினும் திவாகரின் ஓவரில் வெளியேற 3-வது விக்கெட்டை இழந்தது திண்டுக்கல் அணி. எனினும், விக்கெட் இழப்பு திண்டுக்கல் டிராகன்ஸை பாதிக்கவில்லை. சிறப்பான ஓப்பனிங் கைகொடுக்க, 18.1 ஓவரிலேயே இலக்கை அடைந்த திண்டுக்கல் டிராகன்ஸ் போட்டியை வென்றது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவை, காஞ்சி... டி.என்.பி.எல் ப்ளே ஆஃப் நுழைவது யார்?!

தோல்வியே இல்லை..

2019 Points Table
2019 Points Table
TNPL

அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெறுவதை எந்த அணியாலும் தடுக்க முடியவில்லை. லீக் சுற்றில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள திண்டுக்கல், அனைத்துப் போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. 2018 டி.என்.பி.எல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற திண்டுக்கல் டிராகன்ஸ், 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரையிடம் கோப்பையை நழுவவிட்டது. இந்த சீசனில், கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டும் திண்டுக்கல் டிராகன்ஸ், லீக் சுற்றில் அசத்தி வருகிறது. பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் பலம் வாய்ந்த திண்டுக்கல் அணி, இதேபோல ப்ளே ஆஃப் சுற்றிலும் அசத்தினால் கோப்பை நிச்சயம்!

``ஒரு வருடத்துக்கு முன்பு எனக்கே அந்த சந்தேகம் இருந்தது!’’  – அஷ்வின் #VikatanExclusive

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான கடைசி இடத்துக்கு இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள், தலா மூன்று வெற்றிகளுடன் களத்தில் உள்ளன. அதனால், மீதமிருக்கும் கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றால் மட்டுமே காஞ்சி வீரன்ஸ் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு