Published:Updated:

Dhoni : `15 வருடத்தில் இதுதான் முதல் முறை; ரசிகர்கள்... ' - சேப்பாக்கத்தில் நெகிழ்ந்த தோனி!

தோனி | Dhoni

3 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. டாஸ் முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சேப்பாக்கம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. டாஸ் முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேசியவை.

சென்னை மற்றும் லக்னோ இடையேயான இந்தப் போட்டியில் டாஸ் காயினை தோனி சுண்டி விட லக்னோ கேப்டன் ராகுல் டாஸை வென்றார். டாஸை வென்ற ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 'எங்களுக்கு டார்கெட் எவ்வளவு எனத் தெரிந்துவிட்டால் போட்டியை அணுகுவது எளிதாக இருக்கும்' என சிம்பிளாக பேசி முடித்தார் ராகுல்.

தோனி
தோனி

அடுத்ததாக மைதானம் அதிர கமெண்டேட்டர் இயான் பிஷப் தோனியிடம் மைக்கை நீட்டினார். முதல் கேள்வியாகவே 'சேப்பாக்கத்திற்கு கம்பேக் கொடுத்திருப்பதை பற்றி உணர்வுரீதியாக என்ன நினைக்கிறீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு தோனி

'ஐ.பி.எல் 2008 லேயே தொடங்கிவிட்டது. 15 சீசன் கடந்துவிட்டது. ஆனால் நாங்கள் முழுமையாக 6-7 சீசன்கள்தான் இங்கே சேப்பாக்கத்தில் ஆடியிருப்போம். அப்போதும் கூட இங்கே சில ஸ்டாண்ட்டுகள் காலியாக இருக்கும். இந்த முறைதான் மைதானம் முழுமையாக நிரம்பப்போகிறது. ரசிகர்கள்சூழ இப்படி ஒரு மைதானத்தில் ஆடுவதே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது' என்றார். மைதானத்தில் தோனி பேசப்பேச விசில் சத்தம் எகிறிக்கொண்டே சென்றது.

முதலில் பேட் செய்வதை பற்றி தோனி பேசுகையில் 'சூழலைப் பொறுத்து எங்களின் டார்கெட்டை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இறுதியில் ஒரு நல்ல டார்கெட்டை செட் செய்ய முடியும்' என்றார்.