டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் அவர்களின் கடைசி லீக் போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானததில் நடைபெற்று வருகிறது.
டெல்லி அணி ஏற்கெனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் சென்னை அணி இந்தப் போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் களமிறங்கியது.
இந்தப் போட்டிக்கான டாஸை சென்னை அணியின் கேப்டன் தோனி வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக தோனி அறிவித்தார்.

இந்த டாஸ் நிகழ்வை டேனி மோரிசன் தொகுத்து வழங்கினார். தோனியின் கையில் மைக் சென்றவுடன் மைதானத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் தோனி...தோனி என ஆராவாராம் செய்ய,
'என்னால் எதையும் கேட்க முடியவில்லை....' என மோரிசன் ஜாலியாக கமெண்ட் அடிக்க தொடங்கினார். 'அராம்சே...அராம்சே...' என ஹிந்தியில் பேசி ரசிகர்கர்களை நிதானத்துக்கு கொண்டு வந்த மோரிசன் தோனியிடம் பேச தொடங்கினார்.
தோனி பேசியவை, 'முதல் போட்டியிலிருந்தே வெல்ல வேண்டும், ப்ளே ஆப்ஸ்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. இந்தப் போட்டிக்கு ஒன்றும் புதிதாக இல்லை. அதே ப்ளேயிங் லெவனோடுதான் ஆடப்போகிறோம். அணி ஒரு மாதிரியாக செட் ஆகி சமநிலையோடு இருக்கிறது. இதை அப்படியே தொடர விரும்புகிறோம். இப்படியான தொடர்களின் போது வலுவான மனநிலை வேண்டும்.

வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்விகளிலிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். இதைதான் இளம் வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.' என்றார்.
சென்னை அணி டெல்லியை வீழ்த்தி ப்ளே ஆப்ஸ்க்கு தகுதிப்பெறுமா? கமென்ட் பண்ணுங்க