Published:Updated:

Dhoni : விளம்பர விதிமுறை மீறல் தோனிக்கு முதலிடம்; சர்ச்சைப் பின்னணி!

தோனி

விளம்பர தரநிலை கவுன்சில் (Advertising Standards Council of India) விளம்பர விதிமுறைகளை மீறியவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

Published:Updated:

Dhoni : விளம்பர விதிமுறை மீறல் தோனிக்கு முதலிடம்; சர்ச்சைப் பின்னணி!

விளம்பர தரநிலை கவுன்சில் (Advertising Standards Council of India) விளம்பர விதிமுறைகளை மீறியவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

தோனி
பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் விளம்பரம் மூலம் தங்கள்  பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தும்போது சில விதிமுறைகளைப்  பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் நிறுவனங்கள்  மீது சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும். 

விளம்பரத்தில் நடிக்கும் பிரபலங்களும் விளம்பரத்தின் உண்மை நிலையை அறியாமல் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு நடித்தால் அவர்கள் மீதும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தோனி
தோனி

அந்தவகையில் விளம்பர தரநிலை கவுன்சில் (Advertising Standards Council of India) விளம்பர விதிமுறைகளை மீறியவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அந்தவகையில் தோனியின் பெயர் அப்பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் யூ- டியூப்பரான Bhuvan Bam  பெயரும் இடம்பெற்றள்ளது.  தோனி மீது 10 புகார்களும்,  புவன் மீது 7 புகார்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபலங்கள் மீது கடந்த ஆண்டு 55 புகார்கள் வந்த நிலையில், தற்போது 503 ஆக அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்கள். நடப்பாண்டில் அதாவது ஜனவரி முதல் தற்போது வரை  8,951 புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றும் இதன் மூலமாக 7,928 விளம்பரங்கள் விதியை மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதில் நான்கில் மூன்று பங்கு டிஜிட்டல் மீடியா மூலமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.