சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸில் தோனி மீண்டும் தனது ஓய்வு பற்றி ஜாலியாகப் பேசியுள்ளார்.
டாஸை தோனியே வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தார். இதன்பிறகு பேசிய தோனி, 'களச்சூழலையும் வானிலையையும் பொறுத்துதான் முடிவெடுக்க வேண்டும். இப்போதைய சூழலுக்கு முதலில் பந்துவீசுவதே சரியாக இருக்கும். தீபக் சஹார் முழு உடற்தகுதியையும் எட்டிவிட்டார். அதனால் இந்தப் போட்டியில் ஆகாஷ் சிங்கிற்கு பதிலாக தீபக் சஹார் களமிறங்குவார்.' என அறிவித்தார்.

இதன்பிறகு நெறியாளர் டேனி மோரிசன், 'உங்களின் கடைசி சீசன் என்பதால் ரசிகர்கள் வெகுவாக திரண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியா?..' என்றார். இதற்கு தோனி ஜாலியாக சிரித்துக் கொண்டே, 'நீங்கள்தான் என்னுடைய கடைசி சீசன் முடிவெடுத்து விட்டீர்கள்.....' என ஒரு ஜாலி சிரிப்பு சிரித்தார். உடனே டேனி மோரிசன் ரசிகர்களை நோக்கி 'தோனி அடுத்த சீசனுக்கும் உங்களை சந்திக்க வரப்போகிறார்...' என கூற ரசிகர்கள் ஆராவாரம் செய்யத் தொடங்கினர். தோனி அதே சிரிப்போடு அப்படியே அந்த டாஸ் நிகழ்விலிருந்து விடைபெற்றார்.
2020 சீசனில் தோனி 'Definitely Not' என சொன்னபோது தோனியிடமிருந்து அந்த சிறப்புமிக்க பதிலை வாங்கியதும் டேனி மோரிசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.