Published:Updated:

`எனக்கும் கோபம் வரும்; விரக்தி ஏற்படும்.. ஆனால்..!’ - தோனி ஷேரிங்ஸ்

தோனி

தனி ஒருவரால் வெற்றியைத் தேடித் தர முடியாது ஓர் அணியாகத்தான் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும் என தோனி பேசியுள்ளார்.

Published:Updated:

`எனக்கும் கோபம் வரும்; விரக்தி ஏற்படும்.. ஆனால்..!’ - தோனி ஷேரிங்ஸ்

தனி ஒருவரால் வெற்றியைத் தேடித் தர முடியாது ஓர் அணியாகத்தான் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும் என தோனி பேசியுள்ளார்.

தோனி

மகேந்திர சிங் தோனிக்கு`புன்னகை மன்னன்’ என்று பட்டம் கொடுக்கலாம். வெற்றியோ, தோல்வியோ எல்லாவற்றையும் ஒரு புன்னகையுடன் கடந்துவிடுவார். இக்கட்டான சூழலை சமாளிப்பதில் தோனி கைதேர்ந்தவர். அதனால்தான் `கூல் கேப்டன்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். இவருக்கு கோபமே வராதா, டென்ஷன் ஆக மாட்டாரா என அவரது ரசிகர்களுக்கே சந்தேகம் வரும்.

 `எனக்கும் கோபம் வரும்; விரக்தி ஏற்படும்.. ஆனால்..!’ - தோனி ஷேரிங்ஸ்

அதனால்தான் தோனி டென்ஷன் ஆனதே தலைப்புச் செய்தியானது. இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையேயான போட்டியின்போது நோபால் சர்ச்சை எழுந்தது. அப்போது தோனி கோபமாக மைதானத்துக்குள் சென்று நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம், போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதத்தை அபராதமாக அறிவித்தது.

தோனி ஆக்ரோஷமாக மைதானத்துக்குள் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. `அருணாச்சலம்' படத்தில் வரும் `சிங்கம் ஒன்று புறப்பட்டதே...!' பாட்டைப் போட்டு தோனிக்கு மாஸ் கூட்டினர் சிஎஸ்கே ரசிகர்கள். இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோனியிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில், `உணர்வுகளைக் கட்டுப்படுத்தி உங்களால் எப்படி களத்தில் செயல்பட முடிகிறது' எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

 தோனி
தோனி

இதற்குப் பதிலளித்தவர், ``எனக்கும் களத்தில் விரக்தி, கோபம், ஏமாற்றம் எல்லாம் ஏற்படும். ஆனால், அதை களத்தில் வெளிப்படுத்தினால் அது தவறாக முடிந்துவிடும். அந்தச் சுழலில் அடுத்து என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்த தருணத்துக்கு என்ன தேவை என்பதை யோசிக்க வேண்டும். அடுத்து என்ன என்பதை நான் திட்டமிடுவேன். நான் அந்தப் பணிகளில் தீவிரமாகிவிட்டால் என்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்திவிட முடியும். எனது உணர்ச்சிகளை மற்ற சில நபர்களைவிட சற்று சிறப்பாக கட்டுப்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன்.

டெஸ்ட் போட்டியாக இருந்தால் உங்களுக்கு இரண்டு இன்னிங்ஸ்கள் இருக்கும். அதற்கு ஏற்றவாறு உங்கள் அடுத்த நகர்வைத் திட்டமிடலாம். ஆனால், டி-20 போட்டி அப்படியில்லை. எல்லாம் விரைவாக நடந்துவிடும். அப்போது உங்களது தேவை வேறுஒன்றாக இருக்கும். தனி ஒருவர் தவறு செய்தாலோ அல்லது மொத்த அணியும் தவறு செய்திருந்தாலும். அல்லது திட்டமிட்டபடி செயல்படாமல் இருத்தல் எதுவாக இருந்தாலும் சரி. ஒரு அணியாக தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான் அனைவரின் இலக்காக இருக்கும். அது நீண்ட நாள் இலக்கு. அதை சிறிய பகுதிகளாகப் பிரித்துச் செயல்படுத்த வேண்டும்'' என்றார்.

தோனி
தோனி

நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் ஒவர் சர்ச்சை எழுந்தது. பவுண்டரிகள் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு நடந்த டி-20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி சமனில் முடிந்தபோது போல்ட் - அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்தியா வெற்றிபெற்றது. அதற்கு இந்திய அணி எப்படி தயாரானது எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த தோனி, ``நாங்கள் பிராக்டீஸ் செய்யும்போது வழக்கமாக தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ இதுபோல் பயிற்சி செய்வோம். அந்தப் போட்டியின்போது அந்த முறை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. அந்தச் சூழலில் நாங்கள் எங்கள் வழக்கமான பந்துவீச்சாளர்களை பந்துவீச அழைக்கவில்லை. எங்களுக்கு நல்ல முடிவுகளை யார் கொடுப்பார்களோ அவர்களை அழைத்தோம். பயிற்சியின்போது யார் அதிகமுறை ஸ்டெம்புகளை தகர்த்தார்களோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனி ஒருவரால் வெற்றியைத் தேடித் தர முடியாது. ஓர் அணியாகத்தான் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும். 2007-ம் ஆண்டு நாங்கள் வென்றதற்கு அதுதான் காரணம். நல்ல ரன் அவுட்டுகள், அற்புதமான கேட்சுகள் அந்தத் தருணங்கள்தான் அணியாக செயல்படுவதற்கான சான்றுகள்'' என்றார்.