Published:Updated:

சென்னை ஐபிஎல் ஏலத்துக்கு 'நோ' சொன்ன தோனி... தொடரும் தென்னாப்பிரிக்க சர்ச்சை!

தோனி, ஸ்ரீனிவாசன்

ஒவ்வொரு அணியில் இருந்தும் 13 பேருக்கு ஐபிஎல் ஏல அரங்குக்குள் நுழைய அனுமதி என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 8 பேர் மட்டுமே வட்ட மேஜையில் உட்காரமுடியும். மீதி 5 பேர் பார்வையாளர்கள் பகுதியில் உட்காரவேண்டும்.

Published:Updated:

சென்னை ஐபிஎல் ஏலத்துக்கு 'நோ' சொன்ன தோனி... தொடரும் தென்னாப்பிரிக்க சர்ச்சை!

ஒவ்வொரு அணியில் இருந்தும் 13 பேருக்கு ஐபிஎல் ஏல அரங்குக்குள் நுழைய அனுமதி என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 8 பேர் மட்டுமே வட்ட மேஜையில் உட்காரமுடியும். மீதி 5 பேர் பார்வையாளர்கள் பகுதியில் உட்காரவேண்டும்.

தோனி, ஸ்ரீனிவாசன்

ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2021போட்டிகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்காக எல்லா ஐபிஎல் அணியின் உரிமையாளர்களும், முக்கிய ஆலோசகர்களும் சென்னை கிராண்ட் சோழா ஓட்டலுக்கு நேற்றே வந்து சேர்ந்துவிட்டனர்.

அனைவரும் தற்போது க்வாரன்டைனில் இருக்கிறார்கள். ஒவ்வொரு அணியில் இருந்தும் 13 பேருக்கு ஐபிஎல் ஏல அரங்குக்குள் நுழைய அனுமதி என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 8 பேர் மட்டுமே வட்ட மேஜையில் உட்காரமுடியும். மீதி 5 பேர் பார்வையாளர்கள் பகுதியில் உட்காரவேண்டும்.

இந்த 13 பேருக்கும் கொரோனா டெஸ்ட் 18-ம் தேதி காலை எடுக்கப்பட இருக்கிறது. யாருக்கெல்லாம் டெஸ்ட் நெகட்டிவோ அவர்கள் மட்டுமே ஏலம் நடைபெறும் ராஜேந்திரா ஹாலுக்குள் நுழைய முடியும்.

டுப்ளெஸ்ஸி, எங்கிடி
டுப்ளெஸ்ஸி, எங்கிடி

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் இருவருமே ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள சென்னை வரவில்லை. தோனி நெருங்கிய நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்வதால் சென்னை வரவில்லை எனத்தெரிகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கிபான்ட்டிங்கும் இந்தமுறை ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை.

சென்னையில் 292 வீரர்கள் ஏலத்தில் விடப்பட இருக்கிறார்கள். இதில் 164 உள்நாட்டு மற்றும் 128 வெளிநாட்டு வீரர்கள் அடக்கம். இந்தமுறை ஏலத்தில் யார் அதிக விலைக்கு எடுக்கப்படுவார்கள் என்கிற பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதற்கிடையே கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தானுடன் 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரை அறிவித்திருக்கிறது. ஏப்ரல் 2 முதல் 16-ம் தேதி வரை இப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கின்றன. ஆனால், ஐபிஎல் 2021 ஏப்ரல் 9-ம் முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தமுறை குவாரன்டைன், கொரோனா டெஸ்ட் எனப் பல விஷயங்கள் இருப்பதால் வீரர்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்ததும் உடனடியாக அணியினருடன் கலந்து விளையாடமுடியாது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டுப்ளெஸ்ஸி, லுங்கி எங்கிடி, டெல்லியில் ரபடா, நார்க்கியா என முக்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் அணிகளில் இருக்கிறார்கள். இதுத்தவிர கிறிஸ் மோரிஸ், வான் டர் டஸன், வெய்ன் பார்னெல், ஹென்ட்ரிக்ஸ், விலோஜன் என 14 தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் ஏலப் பட்டியலில் பங்கேற்கிறார்கள். பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா போட்டிகளை அறிவித்துள்ளதால் தென்னாப்பிரிக்க வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டுமா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.