Published:Updated:

`புதிய அனுபவத்திற்குத் தயாராகுங்கள்' - வியாகாம் 18 நிறுவனத்தின் விளம்பரத் தூதராக தோனி ஒப்பந்தம்!

தோனி

இனி இப்படியான டிஜிட்டல் ஒளிபரப்புகள்தான் எதிர்காலமாக இருக்கப்போகிறது. அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன் - தோனி

Published:Updated:

`புதிய அனுபவத்திற்குத் தயாராகுங்கள்' - வியாகாம் 18 நிறுவனத்தின் விளம்பரத் தூதராக தோனி ஒப்பந்தம்!

இனி இப்படியான டிஜிட்டல் ஒளிபரப்புகள்தான் எதிர்காலமாக இருக்கப்போகிறது. அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன் - தோனி

தோனி
வியாகாம் 18 நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தோனி
தோனி

தற்போது நடைபெற்று வரும் வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஆகிய தளங்கள் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றன. அதேபோல வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரும் ஜியோ சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 இணையதளங்களில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதற்காகத்தான் வியாகாம் 18 நிறுவனம் இப்போது மகேந்திர சிங் தோனியை தங்களின் விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்திருக்கிறது. கூடிய விரைவில் வியாகாம் 18 நிறுவனம் ஐ.பி.எல் சார்ந்து ஒளிபரப்பவிருக்கும் விளம்பரங்களிலும் மகேந்திர சிங் தோனி நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

'ரசிகர்கள் தங்களது இல்லத்தில் ரொம்பவே சௌகரியமாக இருந்துக்கொண்டு தங்களக்கு தேவையான வடிவில் தங்களுக்குத் தேவையான வசதியுடன் இதுவரை இல்லாத வகையில் கிரிக்கெட்டை அனுபவித்துப் பார்க்க முடியுமென உறுதியாக நம்புகிறேன். ரசிகர்களுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்தும் வகையில் ஜியோ சினிமா ஒளிபரப்பை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறது.

தோனி
தோனி

இனி இப்படியான டிஜிட்டல் ஒளிபரப்புகள்தான் எதிர்காலமாக இருக்கப்போகிறது. அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்' என்று மகேந்திர சிங் தோனி வியாகாம் 18 இன் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டது குறித்து தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்திருக்கிறார்.