Published:Updated:

"தோனி அணியில் இருப்பதால்தான் இதெல்லாம் எங்களுக்கு நடக்கிறது!"- கான்வே சொல்லும் காரணம்

தோனி, கான்வே

போட்டி முடித்த பிறகு சி.எஸ்.கே வீரர்கள் சிலர் தோனியைப் புகழ்ந்து பேசியிருந்த நிலையில் கான்வேவும் தோனி குறித்துப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

Published:Updated:

"தோனி அணியில் இருப்பதால்தான் இதெல்லாம் எங்களுக்கு நடக்கிறது!"- கான்வே சொல்லும் காரணம்

போட்டி முடித்த பிறகு சி.எஸ்.கே வீரர்கள் சிலர் தோனியைப் புகழ்ந்து பேசியிருந்த நிலையில் கான்வேவும் தோனி குறித்துப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

தோனி, கான்வே

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். போட்டி முடித்த பிறகு சி.எஸ்.கே வீரர்கள் சிலர் தோனியைப் புகழ்ந்து பேசியிருந்தனர்.

அந்த வகையில் சி.எஸ்.கே-வின் தொடக்க வீரர் தேவான் கான்வேவும் தோனி குறித்துப் புகழ்ந்து பேசியுள்ளார். “சென்னை அணியில் உள்ள கலாசாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனால்தான் சி.எஸ்.கே அணியால் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடிகிறது. அணியில் தோனியும் அவருக்கென்று தனி ரசிகர்களும் இருப்பதால்தான் நாட்டில் எங்குச் சென்று விளையாடினாலும் ஒவ்வொரு போட்டியும் சொந்த மைதானத்தில் விளையாடுவது போன்ற ஓர் உணர்வை எங்களுக்குத் தருகிறது" என்று பேசியிருக்கிறார்.  

Conway
Conway
CSK

அதன்பின் போட்டி குறித்துப் பேசிய கான்வே, “ருதுராஜ் உடன் கூட்டணி அமைத்து விளையாடுவது என்னுடைய பதற்றத்தைக் குறைக்கிறது என்று நினைக்கிறேன். முடிந்தவரைத் தெளிவாக விளையாட முயற்சி செய்து வருகிறேன். எனக்கு வரும் பந்தை எதிர்கொள்வதில் எனக்கு பிரச்னை இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அதை தற்போது சமாளித்து வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.