2023 ஜனவரியில், தென் ஆப்பிரிக்காவில் தொடங்கும் புதிய டி20 கிரிக்கெட் லீக்கில் மொத்தம் ஆறு அணிகள் விளையாட உள்ளன. ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களே இந்த ஆறு அணிகளையும் வாங்கியிருக்கிறார்கள். அதன் விவரங்கள் இதோ...

1. ஜோஹன்னஸ்பர்க் - சென்னை சூப்பர் கிங்ஸ்
2. எம்.ஐ கேப்டவுன் - மும்பை இந்தியன்ஸ்
3. டர்பன் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
4. போர்ட் எலிசபெத் (ஜூபெர்ஹா) - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
5. பார்ல் ராயல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
6. ப்ரிடோரியா கேப்பிடல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்
இதில் தற்போது சி.எஸ்.கே அணியில் உள்ள நட்சத்திர ப்ளேயரான மொயின் அலி, துபாய் கிரிகெட் லீக் போட்டியிலும் இருப்பதால் அவர் போட்டியில் கலந்துக்கொள்வாரா என்று குழப்பம் எழுந்த நிலையில், தற்போது அவரை 79 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது சி.எஸ்.கே அணி. அதே போல தற்போது ஐபிஎல்லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸுகாக விளையாடி வரும் ஃபாஃப் டு ப்ளெஸ்ஸியை ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸின் கேப்டனாக நியமித்துள்ளது சி.எஸ்.கே நிர்வாகம். ஜோஹன்னஸ்பர்க் அணியின் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளெமிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கேவின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஆல்பி மொர்கலை பௌலிங் கோச்சாக நியமித்துள்ளார்கள்.
சி.எஸ்.கே ஜோஹனன்ஸ்பர்க் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்:
1. ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி (கேப்டன்) - தென் ஆப்பிரிக்கா
2. மொயின் அலி - இங்கிலாந்து
3. மஹீஸ் தீக்சனா - இலங்கை
4. ரொமாரியோ செப்பர்ட் - வெஸ்ட் இண்டீஸ்
5. கெரால்டு காஸ்ட்ஸி - தென் ஆப்பிரிக்கா

மும்பையைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே அவர்கள் அணியில் ஐந்து வீரர்களை அறிவித்துவிட்டார்கள்.
1. ககிஸோ ரபாடா - தென் ஆப்பிரிக்கா
2. டிவால்ட் ப்ரிவீஸ் - தென் ஆப்பிரிக்கா
3. ரஷீத் கான் - ஆப்கானிஸ்தான்
4. லியம் லிவிங்ஸ்டன் - இங்கிலாந்து
5. சாம் கரண் - இங்கிலாந்து
இது குறித்து மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவிக்கும் போது, "இந்தப் புதிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை மும்பை குடும்பத்திற்கு வரவேற்கிறேன். நாங்கள் நினைத்தது போலவே ஒரு நல்ல வலுவான அணி எங்களுக்கு அமைந்தது. இந்த முறை தென் ஆப்பிரிக்காவில் துவங்கவிருக்கும் எங்கள் போட்டி பயணம் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்குமென நம்புகிறோம்" என்று தெரிவித்தார். தற்போது மும்பை அணியின் மற்ற நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் இடம்பெறுவார்களா என சி.எஸ்.கே ரசிகர்களைப் போல மும்பை அணி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இது தவிர மற்ற அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரங்கள்.
டர்பன் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்):
1. குவின்டன் டி காக் - தென் ஆப்பிரிக்கா
2. ஜாசன் ஹோல்டர் - வெஸ்ட் இண்டீஸ்
3. கைல் மெயர்ஸ் - வெஸ்ட் இண்டீஸ்
4. ரீஸ் டொப்லி - இங்கிலாந்து
5. ப்ரெனலென் சுப்ரயென் - தென் ஆப்பிரிக்கா
ப்ரிடோரியா கேப்பிடல்ஸ் (டெல்லி கேப்பிடல்ஸ்):
1. அன்ரிச் நார்க்கியா - தென் ஆப்பிரிக்கா
2. மிகைல் பிரிடோரியஸ் - தென் ஆப்பிரிக்கா
பார்ல் ராயல்ஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
1. ஜோஸ் பட்லர் - இங்கிலாந்து
2. டேவிட் மில்லர் - தென் ஆப்பிரிக்கா
3. ஒபெட் மெக்காய் - வெஸ்ட் இண்டீஸ்
4. கோர்பின் போஸ்ச் - தென் ஆப்பிரிக்கா