Election bannerElection banner
Published:Updated:

58 ரன்னுக்குள் 5 விக்கெட், சாதித்த தாக்கூர், சுந்தர், நடராஜன்... இனி எல்லாம் பேட்ஸ்மேன்கள் கையில்!

நடராஜன்
நடராஜன் ( Tertius Pickard )

274 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா.

பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட்டின் இரண்டாவது நாளின் முதல் செஷனிலேயே ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்தியா. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனுபவமே இல்லாத பெளலர்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸை 369 ரன்களுக்குள் முடித்திருக்கிறது. இரண்டு அறிமுக வீரர்கள், இதற்கு முன் ஒரே டெஸ்ட்டில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர் என மூன்றே வீரர்களின் கதையைக்கொண்டே ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடிக்கப்பட்டிருக்கிறது.

274 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா. பெய்ன் - கிரீன் கூட்டணி பலமாகி 300 ரன்களுக்கு மேல் ஆஸ்திரேலியா குவிக்க, 50 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த பெய்னின் விக்கெட்டை வீழ்த்தி 'காலை வணக்கம்' வைத்தார் ஷர்துல் தாக்கூர். பெய்ன் - கிரீன் கூட்டணி 98 ரன்கள் குவித்திருந்தது. பெய்ன் அவுட் ஆன அடுத்த ஓவரிலேயே கிரீனை க்ளீன் போல்டாக்கினார் வாஷிங்டன் சுந்தர். அடுத்த ஓவரில் மீண்டும் தாக்கூரே பேட் கம்மின்ஸின் விக்கெட்டை எடுத்தார். கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து ஆடிய நாதன் லயானின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, கடைசி விக்கெட்டாக ஜோஷ் ஹேசில்வுட்டின் விக்கெட்டை நடராஜன் கைப்பற்றினார். இன்று 58 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா.

ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூர்
Tertius Pickard

நடராஜன், சுந்தர், தாக்கூர் என மூவரும் மூன்று விக்கெட்கள் எடுக்க, சிராஜ் மட்டும் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். டெய்ல் எண்டர்களின் விக்கெட்களை வீழ்த்த இந்திய பெளலர்கள் தடுமாறுகிறார்கள் என்கிற விமர்சனங்களையும் இந்தக்கூட்டணி உடைத்திருக்கிறது.

அனுபவமே இல்லாத பெளலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை 369 ரன்களுக்குள் சுருட்டியிருக்கிறார்கள். இனி அனுபவம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன்களின் கையில்தான் இந்தியாவின் வெற்றியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு