Published:Updated:

Ind vs WI: ஆட்டத்தை மாற்றிய அந்த இரண்டு ஓவர்கள்; 100-வது டி20 வெற்றியை ருசித்த டீம் இந்தியா!

Ind vs WI

இந்தியாவின் அப்போதைய ரன்-ரேட் பனி கொட்டும் அந்த வேளையில் பந்து வீசுவதற்கு நிச்சயம் பத்தாது. அதுவும் ஈடன் கார்டன் போன்ற சிறிய மைதானதிலெல்லாம் சொல்லவே தேவையில்லை.

Ind vs WI: ஆட்டத்தை மாற்றிய அந்த இரண்டு ஓவர்கள்; 100-வது டி20 வெற்றியை ருசித்த டீம் இந்தியா!

இந்தியாவின் அப்போதைய ரன்-ரேட் பனி கொட்டும் அந்த வேளையில் பந்து வீசுவதற்கு நிச்சயம் பத்தாது. அதுவும் ஈடன் கார்டன் போன்ற சிறிய மைதானதிலெல்லாம் சொல்லவே தேவையில்லை.

Published:Updated:
Ind vs WI

இரண்டாவது இன்னிங்ஸின் 19-வது ஓவரை வீச வருகிறார் புவனேஷ்வர் குமார். மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு தேவை 29 ரன்கள். களத்தில் நிகோலஸ் பூரன் மற்றும் ரோமன் பாவெல். தன் முந்தைய ஓவரில்தான் பாவெல் கொடுத்த எளிய கேட்ச் ஒன்றை கோட்டைவிட்டிருந்ததால் புவனேஷ் குமார் மீதே சற்று கூடுதல் பிரஷர் இருந்தது. லோ-ஃபுல் டாஸாக வீசப்பட்ட முதல் பந்தினை பாவெல் சிங்கிள் தட்ட 100 ரன்கள் பார்ட்னெர்ஷிப்பை தொடுகிறது அந்த ஜோடி. ப்ராண்டான் கிங்கின் விக்கெட்டிற்கு பிறகு அமைந்த இந்த ஜோடிக்கும் முதல் இன்னிங்ஸில் கோலியின் விக்கெட்டிற்கு பிறகு அமைந்த பன்ட்-வெங்கடேஷ் ஐயர் ஜோடிக்கும் அத்தனை வித்தியாசம் ஒன்றும் இல்லை. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சூழலில் தான் இந்த இரண்டு ஜோடிகளும் களத்தில் இணைந்தன.

Ind vs WI
Ind vs WI

வெங்கடேஷ் ஐயர் களமிறங்கியபோது இந்திய அணியின் ஸ்கோர் 106 ஆக இருந்தாலும் கிட்டத்தட்ட 14 ஓவர்கள் முடிந்திருந்தன. விராட் கோலி தன் அரை சதத்தை கடந்திருந்தாலும் 40 பந்துகளுக்கு மேல் ஆடியிருந்தார் அவர். ராஸ்டன் சேஸின் பந்தில் அவர் அவுட்டானதுபோலதான் ரோஹித் மற்றும் சூர்யகுமார் ஆகியோரும் அவரின் சுழலுக்கே இரை ஆகியிருந்தனர். ஒப்பனராக இறங்கியிருந்த இஷன் கிஷனும் முதல் ஆட்டம் போலவே தன் பழைய டச்சிற்கு திரும்ப முடியாமல் 10 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்னோடு வெளியேறியிருந்தார். இந்தியாவின் அப்போதைய ரன்-ரேட் பனி கொட்டும் அந்த வேளையில் பந்து வீசுவதற்கு நிச்சயம் பத்தாது. அதுவும் ஈடன் கார்டன் போன்ற சிறிய மைதானதிலெல்லாம் சொல்லவே தேவையில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை நன்கு உணர்ந்த பன்ட்-வெங்கடேஷ் ஜோடி தொடக்கத்திலேயே கியரை மாற்றியது. வெங்கடேஷ் கிரீஸுக்கு வந்த அடுத்த 14 பந்துகளில் மட்டும் 7 ஃபோர்கள் அடிக்கப்பட்டன. அடுத்த 54 ரன்களுக்கு வெறும் 4 ஓவர்களே தேவைப்பட்டது. 35 பந்துகளை சந்தித்த அந்த ஜோடி 76 ரன்களை அடித்தது. இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது.

Ind vs WI
Ind vs WI

அடுத்து சேஸ் செய்த மேற்கிந்திய தீவுகளின் முதல் இரண்டே விக்கெட்டுகளும் இந்திய ஸ்பின்னர்களிடமே தான் சென்றன. ஒன்பதாவது ஓவரில் பூரன்-பாவெல் ஜோடி சேர்ந்த போது அணியின் ஸ்கோர் 59 மட்டுமே. இவர்களும் தொடக்கத்திலேயே கியரை மாற்றி ஆக்சிலேட்டரை அழுத்த சீரிய இடை வெளிகளில் பவுண்டரிக்கள் வந்த வண்ணம் இருந்தன. கூடவே ‘டியூ’வும் உதவ அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து இவர்களின் பார்ட்னெர்ஷிப் 100-ஐத் தொட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது 19-வது ஓவரின் இரண்டாவது பந்து. ஸ்ட்ரைக்கில் இருப்பவர் பூரன். அக்ராஸ் தி ஆங்கிள் பந்தை மெதுவாக வீச டாட் பால். இதே போன்றொரு பந்தை இப்போது நக்குல் பாலாக வீச பூரனின் பேட்டில் ஸ்லைஸ் ஆகி விண்ணை நோக்கி செல்கிறது பந்து. ஆனால் முன்பு புவனேஷ்வர் குமார் தவறவிட்டதைப்போல இல்லாமல் சரியாகப் பிடிக்கிறார் பிஷனாய். அடுத்த மூன்று பந்துகளிலும் ஒவ்வொரு ரன்கள் மட்டுமே போனது. வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மிகச் சிறந்த முறையில் பெனல்டிமேட் ஓவரை வீசி முடித்தார் புவனேஸ்வர் குமார்.

கடைசி ஓவர் வெற்றிக்கு தேவை 25 ரன்கள். பந்துவீச வருகிறார் ஹர்ஷல் பட்டேல். முதல் பந்தை யார்கராகவும், அடுத்த பந்தில் ஃபுல்லர் வைடாகவும் வீச இரண்டு ரன்கள். இப்போது நான்கு பந்துகளுக்கு 23 ரன்கள் தேவை. போட்டி முடிந்துவிட்டது என்று இந்திய ரசிகர்கள் பெருமூச்சுவிட்ட வேளையில் அடுத்தது இரண்டு சிக்ஸர்கள் பாவெலின் பேட்டில் இருந்து பறந்தன. இப்போது 11 ரன்கள் தேவை 2 பந்துகளில். லைன், லெந்தில் மிக லேசான தவறு செய்தாலும் பந்து வெளியே பறந்துவிடும் என்ற நிலை. அதை தெரிந்தும் துணிந்து அவுட்-சைட் ஆஃபில் ஃபுல்லராக வீசுகிறார் ஹர்ஷல். ஆனால் 137, 139 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட தன் முந்தைய இரண்டு பந்துகளை போல அல்லாமல் வெறும் 109 கி.மீ வேகத்தில் அற்புதமாக வீசுகிறார். சிங்கிள் மட்டுமே. அடுத்த பந்தில் தன் 100-வது டி20 வெற்றியை ருசித்தது இந்திய அணி. வாழ்த்துகள் டீம் இந்தியா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism