Published:Updated:

100, 60, 57... நாட் அவுட் வார்னரின் வெறித்தனங்கள்! #DavidWarner

Warner

இலங்கையின் கனவுகளில் ஆட்டம் பாம்களை வீசி 3-0 என ஆஸ்திரேலியாவுக்குக் கோப்பையை வென்று தந்திருக்கிறார் வார்னர். இந்த சீரிஸில் மலிங்கா, பிரதீப், உடானா, டிசில்வா, ஷனகா, சன்டகன் என எந்த இலங்கை பெளலராலும் வார்னரை அவுட் ஆக்கமுடியவில்லை.

100, 60, 57... நாட் அவுட் வார்னரின் வெறித்தனங்கள்! #DavidWarner

இலங்கையின் கனவுகளில் ஆட்டம் பாம்களை வீசி 3-0 என ஆஸ்திரேலியாவுக்குக் கோப்பையை வென்று தந்திருக்கிறார் வார்னர். இந்த சீரிஸில் மலிங்கா, பிரதீப், உடானா, டிசில்வா, ஷனகா, சன்டகன் என எந்த இலங்கை பெளலராலும் வார்னரை அவுட் ஆக்கமுடியவில்லை.

Published:Updated:
Warner

ஆஷஸில் அவமானகர இன்னிங்ஸ்கள் ஆடி அவுட் ஆஃப் ஃபார்முக்குப் போன வார்னர் இஸ் பேக். சாதாரணமாக அல்ல... வெறித்தனமாக... இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் வார்னர் வெடித்தவை அத்தனையும் வாணவேடிக்கைகள்.

சுமாரான அணிதான் என்றாலும் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவுக்குப் போய் இறங்கியது இலங்கை. காரணம் பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலுமே தொடர் வெற்றி. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த இளம் அணியோடு கேப்டன் மலிங்கா, பெரேரா, மென்டிஸ் என சீனியர்களும் சேர்ந்துகொள்ள ஆஸ்திரேலியாவை அசைத்துப்பார்க்கலாம் என ஆசையோடு இருந்தார்கள்.

warner
warner

ஆனால், இலங்கையின் கனவுகளில் ஆட்டம் பாம்களை வீசி 3-0 என ஆஸ்திரேலியாவுக்குக் கோப்பையை வென்று தந்திருக்கிறார் வார்னர். இந்த சீரிஸில் மலிங்கா, பிரதீப், உடானா, டிசில்வா, ஷனகா, சன்டகன் என எந்த இலங்கை பெளலராலும் வார்னரை அவுட் ஆக்கமுடியவில்லை. மூன்று போட்டிகளிலுமே 100, 60, 57 என நாட் அவுட் பேட்ஸ்மேனாக இலங்கையை நாக் அவுட் செய்தார் வார்னர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் டி20 ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில். முதலில் பேட் செய்தது ஆஸ்திரேலியா. அன்று வார்னரின் 33–வது பிறந்தநாள். ரஜிதா எனும் இலங்கை வேகப்பந்து பெளலரை விரட்டி விரட்டி அடித்தார் வார்னர். அவர் போட்ட 4 ஓவர்களில் மட்டும் 75 ரன்கள் அடித்தது ஆஸ்திரேலியா. 20–வது ஓவரில் 100 ரன்கள் அடித்து தனக்குத்தானே பிறந்தநாள் பரிசைக் கொடுத்துக்கொண்டார் வார்னர். 3 மாத ரன் வறட்சிக்கு அன்று முடிவு கட்டப்பட்டது.

T20 போட்டிகளில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது. அதையும் வார்னர் சிறப்பாகவே செய்தார்.

warner
warner

2–வது மற்றும் 3–வது டி20 போட்டிகளில் முதல் பேட்டிங் ஆடிய இலங்கை 117 மற்றும் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ரன்கள் ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கே பத்தவில்லை. முதல் போட்டியில் ஆக்ரோஷமாக ஆடினார் என்றால் மற்ற இரண்டு போட்டிகளிலும் விவேகமாக ஆடினார் வார்னர். விக்கெட்டை கொடுக்காமல் பவுண்டரிகள் அடித்தும் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தும், தனது வின்டேஜ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது டி20-யில் 60 ரன்கள் நாட் அவுட். 9 பவுண்டரிகள். மீதி 24 ரன்களும் ஓடி ஓடி எடுத்தவை.

மூன்றாவது டி20 போட்டியிலும் அடக்கமான ஆட்டம்தான். 50 பந்துகளில் 57 ரன்கள். 1 பவுண்டரி, நான்கே சிக்ஸர்கள். மற்றவை எல்லாம் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டே சேகரித்த ரன்கள். 20/20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில்தான் நடக்க இருக்கிறது. சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்திருக்கிறார் வார்னர். இனி ஆஸ்திரேலியாவுக்கு வசந்தகாலம்தான்.

இலங்கை ஒன்றும் இப்போது பெரிய டீம் இல்லையே... புள்ளப்பூச்சிகளை அடித்தெல்லாம் பெரிய விஷயமா என்றால் ரன்களைத் தேடிக்கொண்டுருந்த வார்னருக்கு இந்த சீரிஸ் மிகப்பெரிய எனர்ஜி பூஸ்டர். பழுதுபட்டுக் கிடந்த குதிரையின் கால்கள் சீர்செய்யப்பட்டு மீண்டும் களத்துக்கு பந்தயம் வெல்லும் குதிரையாகத் திரும்பியுள்ளது. இனிவரும் போட்டிகளில் வார்னர் என்ற குதிரையிடம் பல டொயோட்டா ஜம்ப்களை எதிர்பார்க்கலாம்.

ஆமாம்... இப்போது ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் காலடி எடுத்துவைத்திருக்கிறது. ஸ்டார்ட் மியூசிக்!