Published:Updated:

பிரிஸ்பேன் ஹீட்ஸை தோற்கடித்த 7 சிக்சர்கள்... வாணவேடிக்கை காட்டிய ஆல்ரவுண்டர் சாம்ஸ்! #BBL

#BBL

லின் 69 ரன்களில் அவுட் ஆக, கடைசி 3 ஓவரில் வில்டர்முத் வெறியாட்டம் ஆடினார். இந்த டெத் ஓவர்களில் மட்டும் 4 சிக்சர்களை விளாசி 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார் வில்டர்முத். இதன்மூலம் பிரிஸ்பேன் அணி 178 ரன்களை சேர்த்தது.

பிரிஸ்பேன் ஹீட்ஸை தோற்கடித்த 7 சிக்சர்கள்... வாணவேடிக்கை காட்டிய ஆல்ரவுண்டர் சாம்ஸ்! #BBL

லின் 69 ரன்களில் அவுட் ஆக, கடைசி 3 ஓவரில் வில்டர்முத் வெறியாட்டம் ஆடினார். இந்த டெத் ஓவர்களில் மட்டும் 4 சிக்சர்களை விளாசி 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார் வில்டர்முத். இதன்மூலம் பிரிஸ்பேன் அணி 178 ரன்களை சேர்த்தது.

Published:Updated:
#BBL

சிட்னி தண்டர்ஸ் அணிக்கும் பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற லீக் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணி ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸின் அதிரடியால் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-ல் பெங்களூர் அணிக்காக சொதப்பிய ஃபிலிப்பே நேற்று சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக 95 ரன்களை அடித்து துவம்சம் செய்திருந்தார். அதேமாதிரி டெல்லி அணிக்காக ஒரு சில போட்டிகளில் ஆடி சொதப்பிய ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் இன்று சிட்னி தண்டர்ஸ் அணிக்காக 7 சிக்சர்களை பறக்கவிட்டு ஒரு வெறித்தனமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார்.

க்றிஸ் லின் தலைமையிலான பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் சார்பாக, ஹெசல்ட்டும் ப்ரையன்ட்டும் ஓப்பனர்களாக களமிறங்கினர். ஆஃப் ஸ்பின்னர் க்றிஸ் கிரீன் வீசிய முதல் ஓவரிலேயே தொடர்ந்து 3 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார் ஹெசல்ட். அடுத்தடுத்த ஓவர்களில் ப்ரையன்ட்டும் பவுண்டரிகளை டார்கெட் செய்து வேகமாக ரன்கள் சேர்த்தனர். கடந்த போட்டியில் இதே மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக இதே கூட்டணிதான் முதல் 4 ஓவர் பவர்ப்ளேவை உருட்டித்தள்ளி சொதப்பியிருந்தது. இந்த போட்டியில் அதை சரி செய்யும் பொருட்டு முதலிலேயே வேகமாக ரன்கள் சேர்த்தனர். முதல் 3 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தது இந்த கூட்டணி. சாம்ஸ் வீசிய 4-வது ஓவரில் ஹெசல்ட் ஸ்கொயர் லெக்கில் தூக்கியடித்து கேட்ச் ஆகி வெளியேறினார். நம்பர் 3-ல் கேப்டன் லின் உள்ளே வந்தார். லின் ஸ்பின்னுக்குத் திணறுவார் எனத் தெரிந்தே தன்வீர் சங்கா-வையும், குக்கையும் அடுத்தடுத்து வீச வைத்தார் சிட்னி தண்டர்ஸின் கேப்டன் ஃபெர்குசன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
#BBL
#BBL

லின்னுக்கு எதிராக தண்வீர் சங்கா வீசிய முதல் பந்தே ஒரு செமயான லெக் பிரேக்காக அமைந்தது. கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் ஸ்டம்ப்பை பறிகொடுத்திருப்பார் லின். இந்த டெலிவரியிலிருந்து தப்பித்த லின் இதன் பிறகு மிகவும் ஜாக்கிரதையாக ஸ்பின்னர்களை எதிர்கொண்டார். ஸ்கோர் மெதுவாக உயர்ந்தாலும் ப்ரையன்ட் மற்றும் லின் கூட்டணி கொஞ்சம் நின்று விளையாடியது. 9-வது ஓவரில் குக், லின்னுக்கு ஸ்கெட்ச் போட்டு வீச ப்ரையன்ட் அவசரப்பட்டு இன்சைட் அவுட் ஷாட் ஆட முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார். முதல் 10 ஓவர்களில் பிரிஸ்பேன் அணி 79 ரன்களை எடுத்தது. கடந்த போட்டியில் லின் சீக்கிரமே பவர் சர்ஜை எடுக்காமல் சொதப்பி அவுட் ஆகியிருப்பார். இந்த முறை அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக 11 ஓவர் முடிந்த உடனே பவர் சர்ஜை எடுத்தார் லின். டேனியல் சாம்ஸ் வீசிய 12வது ஓவரில் லின் ஒரு சிக்சர் அடிக்க 11 ரன்கள் கிடைத்தன. லின்னை காலி செய்ய தன்வீர் சங்காவை மீண்டும் கொண்டு வந்தார் ஃபெர்குசன். ஆனால், இது பவர் சர்ஜ் என்பதால் தைரியமாகவே ஸ்பின்னரை எதிர்கொண்டு இரண்டு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 16 ரன்களை எடுத்து அரைசதத்தையும் கடந்தார் லின். பிக்பேஷ் லீகில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையையும் இதற்கிடையில் அடைந்தார் லின்.

லின் 69 ரன்களில் அவுட் ஆக, கடைசி 3 ஓவரில் வில்டர்முத் வெறியாட்டம் ஆடினார். இந்த டெத் ஓவர்களில் மட்டும் 4 சிக்சர்களை விளாசி 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார் வில்டர்முத். இதன்மூலம் பிரிஸ்பேன் அணி 178 ரன்களை சேர்த்தது.

#BBL
#BBL

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர்ஸ் அணி களமிறங்கியது. பேட்டிங்கின் போது டெத் ஓவரில் வந்து சிக்சர்களை பறக்கவிட்டு ஹீரோவான வில்டர்முத் இந்த முறை சூப்பர் ஓவரில் சிட்னி அணியின் டாப் 3 விக்கெட்டுகளை எடுத்து ஹீரோவானார். முதல் ஓவரிலேயே ஓப்பனர் ஹேல்ஸை போல்டாக்கிய வில்டர்முத் அதே ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் ஃபெர்குசனின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அடுத்து 3-வது ஓவரில் இன்னொரு ஓப்பரான கவாஜாவின் விக்கெட்டையும் எட்ஜ் எடுத்து கீப்பர் கேட்ச் மூலம் வீழ்த்தினார் வில்டர்முத். மேட்ச் அவ்வளவுதான்... இனிமேல் எல்லாம் சம்பிரதாயம்தான்... அப்புறம் என்னப்பா மேன் ஆஃப் மேட்ச்சை தூக்கி வில்டர்முத் கையில் கொடுத்துட்டு ஆட்டத்த முடிச்சிவிடுங்க என்கிற ரேஞ்சில்தான் ஆட்டம் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில்தான் 11-வது ஓவரில் டேனியல் சாம்ஸும், கட்டிங்கும் கூட்டணி போட்டனர். ஆட்டம் அப்படியே மாறத் தொடங்கியது. ஓவருக்கு இரண்டு மூன்று பவுண்டரிக்கள் அடித்து தொடர்ந்து சேஸிங்கை உயிர்ப்போடே வைத்திருந்தது இந்தக் கூட்டணி. ஒரு கட்டத்தில் கடைசி 5 ஓவர்களுக்கு 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. கட்டிங் 18-வது ஓவரில் அவுட் ஆக, கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. ஆட்டம் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலையில் 19-வது ஓவரை வீசினார் லாஃப்லின். முதல் பந்தையே இவர் நோபாலாக வீச சிக்சருக்கு பறக்கவிட்டார் சாம்ஸ். கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என இருந்தால் சுலபமாக சாம்ஸ் அடித்துவிடுவார் என நினைக்க, அதெல்லாம் எதுக்கு... இந்த ஓவர்லயே ஆட்டத்த முடிச்சிருவோம் என்கிற மனநிலையில் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து 19 வது ஓவரிலேயே மேட்ச்சை முடித்து வைத்தார் சாம்ஸ். 25 பந்துகளில் 65 ரன்களை அடித்த சாம்ஸ் 7 சிக்சர்களையும் 3 பவுண்டரிகளை அடித்திருந்தார். மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய சாம்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பிரிஸ்பேன் கடந்த போட்டியில் மெல்பர்னுக்கு எதிராக 124 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்தப் போட்டியில் பேட்டிங்கில் செய்த தவறுகளையெல்லாம் இந்த போட்டியில் முழுமையாக தீர்த்துக்கொண்டு சிறப்பாக ஆடிய பிரிஸ்பேன் அணி இந்த முறை பௌலிங்கில் கோட்டைவிட்டுவிட்டது. டாப்-3 விக்கெட்டுகளை சீக்கிரம் எடுத்தும் அந்த அணித் தோல்வியை தழுவியிருக்கிறது. தோற்றிருந்தாலும் ஆறுதல் பரிசாக Bash Boost புள்ளியை வென்றிருக்கிறது பிரிஸ்பேன் அணி.