Published:Updated:

Dhoni: `இப்படியே பந்துவீசிக்கொண்டிருந்தால்...' சர்ப்ரைஸ் கொடுத்த பிட்ச்; பெளலர்களை எச்சரித்த தோனி!

தோனி

போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் வெற்றி குறித்து அகமகிழ்ந்த தோனி சில அதிருப்திகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. அவர் பேசியது இதோ!

Published:Updated:

Dhoni: `இப்படியே பந்துவீசிக்கொண்டிருந்தால்...' சர்ப்ரைஸ் கொடுத்த பிட்ச்; பெளலர்களை எச்சரித்த தோனி!

போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் வெற்றி குறித்து அகமகிழ்ந்த தோனி சில அதிருப்திகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. அவர் பேசியது இதோ!

தோனி
சென்னை மற்றும் லக்னோ இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் வெற்றி குறித்து அகமகிழ்ந்த தோனி சில அதிருப்திகளையும் வெளிக்காட்டியிருந்தார்.

தோனி
தோனி

தோனி பேசியவை, 'இது ஒரு பெர்ஃபெக்ட்டான முதல் ஆட்டம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக மைதானம் நிரம்ப இத்தனை ரசிகர்கள் மத்தியில் சேப்பாக்கத்தில் ஆடியதில் மகிழ்ச்சி. இங்கேதான் பல நாட்களாக பயிற்சி செய்து வருகிறோம். ஆனால், பிட்ச்சை பார்க்கையில் கொஞ்சம் ஆச்சர்யமாகவே இருந்தது. இவ்வளவு அதிக ரன்களை எடுக்க முடியுமென நினைக்கவில்லை. பிட்ச் போகப்போக மெதுவாகுமென நினைத்தேன். ஆனால், லக்னோ பேட்டிங் செய்த சமயத்திலுமே பந்து பேட்டுக்கு நன்றாக வந்திருந்தது.' என்றார்.

Tushar
Tushar
வேகப்பந்து வீச்சாளர்களின் சொதப்பல் பற்றி பேசிய தோனி 'வேகப்பந்து வீச்சாளர்கள் எக்ஸ்ட்ராக்களை வீசுவதை குறைக்க வேண்டும். இப்படியே வீசிக்கொண்டிருந்தால் எனக்குதான் ஆபத்து. அவர்கள் வேறு கேப்டனின் கீழ் ஆட வேண்டியதாகிவிடும்' என்றார்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டியை முடிக்க இயலவில்லையெனில் அணியின் கேப்டன் சில போட்டிகளில் ஆடுவதற்கு தடைவிதிக்கப்படலாம் என்பதைத்தான் தோனி இவ்வாறு ஜாலியாக குறிப்பிட்டிருந்தார்.MS