Published:Updated:

CSK Practise Session Updates: `இந்தப் பக்கம் தோனி; அந்தப் பக்கம் சாம்சன்' களத்திற்குள் பென் ஸ்டோக்ஸ்

Dhoni ( Satheesh )

சேப்பாக்கத்தில் கடந்த போட்டிக்கு முன்பாக தோனி ஆடிய ஷாட்களைவிட நேற்றைய பயிற்சியில் தோனி ஆடிய ஷாட்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தன.

Published:Updated:

CSK Practise Session Updates: `இந்தப் பக்கம் தோனி; அந்தப் பக்கம் சாம்சன்' களத்திற்குள் பென் ஸ்டோக்ஸ்

சேப்பாக்கத்தில் கடந்த போட்டிக்கு முன்பாக தோனி ஆடிய ஷாட்களைவிட நேற்றைய பயிற்சியில் தோனி ஆடிய ஷாட்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தன.

Dhoni ( Satheesh )
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்தப் போட்டியை முன்னிட்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் என இரண்டு அணி வீரர்களுமே சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் இங்கே.

சென்னை அணிக்கு மாலை 5 மணி முதலும் ராஜஸ்தான் அணிக்கு மாலை 6 மணி முதலும் பயிற்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன. வாலாஜா ரோடில் அந்த பெரிய மைதானத்துக்கு அருகேயே குட்டியாக MAC B ஸ்டேடியம் என ஒன்று இருக்கும். அதில்தான் முதலில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியைத் தொடங்கினர். இந்த செஷனில் `கேப்டன்' தோனி பங்கேற்கவில்லை. அவரைத் தவிர சில முக்கியமான வீரர்கள் பங்கேற்றிருந்தனர். மொயின் அலி, சிவம் துபே, மகாலா போன்றோரைக் காண முடிந்தது. மொயீன் அலி கொஞ்சம் பேட்டிங்கும் ஆடியிருந்தார்.

Practice
Practice
Sathish Kumar

ஆக, கடந்த போட்டியில் ஆடாத மொயின் அலி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை பெரிதாக பந்துவீசிடாத சிவம் துபே பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். வீரர்கள் திடீர் திடீரென காயமடைவதால் ஒரு தற்காப்புக்கு சிவம் துபேவையும் தயாராக வைத்திருக்கவே அவரை பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட வைத்திருக்கலாம். புதிதாக இணைந்திருக்கும் மகாலா கொஞ்சம் தாமதமாக இந்த வலைப்பயிற்சிக்கு வந்திருந்தார். தொடர்ச்சியாக பந்துவீசிக்கொண்டே இருந்தார். சிவம் துபேவுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். ஹங்கர்கேக்கர், சிமர்ஜித் சிங் ஆகியோரும் வலைக்குள் தங்கள் வேகத்தை காட்டிக்கொண்டிருந்தனர்.

Stokes
Stokes
Sathish Kumar
இப்படி சிஎஸ்கே வீரர்கள் கடுமையாக பயிற்சி செய்து கொண்டிருந்த போது பென் ஸ்டோக்ஸ் ஓரமாக உட்கார்ந்து பயிற்சிகளை கூர்மையாக கவனித்துக் கொண்டு மட்டுமே இருந்தார். ஒருவேளை அவருடைய காயம் குணமடையவில்லையோ என தோன்றியது. ஆனால், சற்றுநேரத்திலேயே தனது கிட் பேக்குடன் கிளம்பியவர் மெயின் க்ரவுண்ட்டில் நடந்த வலைப்பயிற்சிக்கு முதல் ஆளாக வந்தவர் தீவிரமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுருந்தார்.

மைக் ஹஸ்ஸி அவருக்கு த்ரோக்களை வீசிக்கொண்டிருந்தார்.

சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்கையிலேயே மெதுவாக 6 மணிக்கு மேல் ராஜஸ்தான் வீரர்களும் MAC B ஸ்டேடியத்திற்கு வந்து சேர்ந்தனர். சங்ககரா சில பேட்டர்களோடும் மலிங்கா சில பௌலர்களோடும் பயிற்சியை தொடங்க ஆயத்தமாகினர். க்ரவுண்ட் ஸ்டாஃப்களிடம் சங்ககரா தாமாக சென்று பேச்சுக் கொடுத்து புன்னகையை உதிர்த்தது அந்தத் தருணத்தை அழகாக்கியது. ஸ்டம்ப்பை குறிவைத்து தாக்கும் வகையிலான பயிற்சிகளை மலிங்கா ராஜஸ்தான் பௌலர்களுக்கு வழங்கினார். சில கூம்புகளை ஸ்டம்ப் லைனில் வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு அந்த லைனுக்குள் சரியாக வீச பௌலர்களை கட்டளையிட்டார். ராஜஸ்தான் அணியின் நெட் பௌலர்களில் 'விஜயகாந்த் வியாஸ்காந்த்' என்ற இலங்கை ஸ்பின்னரையும் பார்க்க முடிந்தது. அவர் ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழர். லங்கா ப்ரீமியர் லீக் மூலம் பெரும் வெளிச்சம் பெற்றவர். அஷ்வின் ரசிகரான வியாஸ்காந்த் அவரை நேரில் சந்தித்தாலே போதும் என ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இப்போது அஷ்வின் ஆடும் அதே அணியில் நெட் பௌலராக வியாஸ்காந்த் ஆடி வருகிறார்.

ராஜஸ்தான் அணியின் பல வீரர்களும் MAC B ஸ்டேடியத்தில் ஆடிக்கொண்டிருக்க, மெயின் க்ரவுண்ட்டில் சஞ்சு சாம்சன் மட்டும் தனியாக பேட்டிங் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

Samson
Samson
Sathish Kumar
சாம்சன் வழக்கத்தைவிட கூடுதல் நேரத்தை பேட்டிங்கிற்காக செலவிட்டதை போன்று இருந்தது. வலையை விட்டு வெளியே வந்த பிறகும் கூட வெளியே நின்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார்.

இதேநேரத்தில் மலிங்காவும் மைதானத்திற்குள் எண்ட்ரி கொடுத்தார். மலிங்காவுடன் சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் சில நிமிடங்கள் முகம் மலர உரையாடிக் கொண்டிருந்தார்.

மற்ற வீரர்கள் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கும் போதே தோனியும் வந்துவிட்டார். வலைக்கு வெளியே ஃப்ளெம்மிங்குடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார். ஃப்ளெம்மிங் நகரவும் தோனியும் பேடை மாற்றிக் கொண்டு வலைக்குள் வந்தார். சேப்பாக்கத்தில் கடந்த போட்டிக்கு முன்பாக்ச் தோனி ஆடிய ஷாட்களை விட நேற்றைய பயிற்சியில் தோனி ஆடிய ஷாட்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தன.

தோனி
தோனி
Sathish Kumar
அன்றைய பயிற்சியில் பெரும்பாலும் லாங் ஆன் லாங் ஆஃபை குறிவைத்து ஹார்ட் ஹிட்டிங் ஷாட்களை ஆடியிருந்தார். ஆனால், நேற்று இந்த ஷாட்கள் மட்டுமில்லாமல், முன்னங்காலை மட்டும் தூக்கி பேட்டை மடக்கி ஸ்கொயர் லெகில் ஆடும் ஷாட்களை அதிகமாக ஆடிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மேலும் ஆஃப் சைடிலும் பாயின்ட்டுக்கும் தேர்டு மேனுக்கும் இடையில் ஸ்லாஷ் செய்து கொஞ்சம் மென்மையாக பவுண்டரி எடுக்கக்கூடிய ஷாட்களையும் தோனி அடிக்கடி ஆட முயன்றார். இடையிடையே ட்ரேட் மார்க் லாங் ஆன் சிக்சர்களையும் பறக்கவிட்டார். தோனியோடு ப்ரெட்டோரியஸூம் பெரிய பெரிய சிக்சர்களை பறக்கவிட்டு பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

தோனி ஆடுகையில் வலைக்கு வெளியே ப்ராவோவும் ருத்துராஜூம் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தனர். மொத்த வலைப்பயிற்சியிலும் கவனிக்க வேண்டிய விஷயமாக அமைந்தது, இந்த செஷனில் தீபக் சஹார் பங்கேற்காததே. கடந்த போட்டியில் காயமுற்றிருந்த தீபக் சஹார் இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை போல!