Published:Updated:

Dhoni: 45 நிமிட பேட்டிங், கீப்பிங்கிற்கு நோ; காயத்தால் அவதியுறுகிறாரா தோனி? | CSK Practice Session

Dhoni

ஒருவேளை தோனிக்கு ஏதேனும் சிரமம் ஏற்படும்பட்சத்தில் அவருக்குப் பதில் கான்வே கீப்பிங் செய்வதற்கான முன் ஏற்பாடாகக் கூட இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.

Published:Updated:

Dhoni: 45 நிமிட பேட்டிங், கீப்பிங்கிற்கு நோ; காயத்தால் அவதியுறுகிறாரா தோனி? | CSK Practice Session

ஒருவேளை தோனிக்கு ஏதேனும் சிரமம் ஏற்படும்பட்சத்தில் அவருக்குப் பதில் கான்வே கீப்பிங் செய்வதற்கான முன் ஏற்பாடாகக் கூட இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.

Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை முன்னிட்டு சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் பயிற்சி செஷனில் கான்வே அதிகநேரம் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட தோனி அவருக்கு கீப்பிங் சார்ந்த அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். இதனால் சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் தோனி கீப்பிங் செய்வாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.
Chahar
Chahar

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கான பயிற்சி செஷன் மாலை 4:30 மணி முதல் திட்டமிடப்பட்டிருந்தது. மெயின் கிரவுண்டுக்கு வெளியே வலைப்பயிற்சிக்காக மட்டுமே உள்ள MAC B மைதானத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிலரும் ஆல்ரவுண்டரான பிரெட்டோரியஸூம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பிரெட்டோரியஸ் பேட்டிங் ஆட சிமர்ஜித் சிங் அவருக்குப் பந்துவீசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பார்க்கையில் நமக்கு முக்கியமான அப்டேட் ஒன்றும் கிடைத்தது.

ஆம், காயம் காரணமாக சில போட்டிகளில் ஆடாமல் இருந்த தீபக் சஹாரும் இந்தப் பயிற்சி செஷனுக்கு வந்திருந்தார். தனி வலையில் வெறும் ஸ்டம்புகளை மட்டுமே நோக்கி ஓட்டமும் நடையுமாக ரொம்பவே மெதுவாகப் பந்துவீசிக் கொண்டிருந்தார்.
Chahar
Chahar

காயத்திற்குப் பிறகு தீபக் பங்கேற்கும் முதல் பயிற்சி செஷன் இதுதான். தீபக் சஹாரின் செயல்பாடுகளை பார்க்கையில் அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகத் தெரியவில்லை. ஆயினும், ஓரளவுக்கு தேறி போட்டிக்குத் திரும்புவதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் என்றே தெரிகிறது. வெளியே பந்துவீசி முடித்த தீபக் சஹார். மெயின் கிரவுண்ட்டில் கொஞ்ச நேரம் கேட்ச்சிங் பிராக்டீஸிலும் ஈடுபட்டிருந்தார்.

பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்டோக்ஸ் கொஞ்ச நேரம் பந்தும் வீசியிருந்தார். முடித்துவிட்டு கொஞ்சம் மைதானத்தைச் சுற்றி ஓடி தன்னை வார்ம் அப் செய்துகொண்டார். இந்தச் சமயத்தில்தான் ஒரு முக்கியமான விஷயத்தையும் பார்க்க முடிந்தது.

வழக்கமாகத் தீவிரமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் கான்வே இந்த முறை கொஞ்சம் தீவிரமாக கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். களத்தில் தோனி வேறு இல்லை என்பதால், ஒருவேளை தோனி காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறாரோ என்று தோன்றியது.
CSK Practice Session
CSK Practice Session

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே தோனியும் களத்திற்குள் வந்தார். கீப்பிங் செய்து கொண்டிருந்த கான்வேக்கு சில அறிவுரைகளைக் கூறிவிட்டு பேடுகளை கட்டி பேட்டிங் ஆடத் தயாரானார். மைக் ஹஸ்ஸி தோனிக்கு த்ரோக்களை வீச, தோனி வழக்கம்போல ஸ்ட்ரைட்டாகவும் மிட் விக்கெட்டிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார். பேட்டிங் ஆடிய தோனி கான்வேயை ஏன் அத்தனை நேரம் கீப்பிங் செய்ய வைத்தார் என்பது ஒரு கேள்வி. ஏற்கெனவே தோனிக்கு முட்டியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அத்தோடுதான் தோனி போட்டிகளில் ஆடிவருகிறார். ஒருவேளை ஏதேனும் சிரமம் ஏற்படும்பட்சத்தில் தோனிக்கு பதில் கான்வே கீப்பிங் செய்வதற்கான முன் ஏற்பாடாகக் கூட இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு பக்கம் ருத்துராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு போன்றோர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் எதிர்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், மார்கோ யான்சன் என முக்கியமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி ப்ராக்டீஸ் செய்து கொண்டே இருக்க பயிற்சியை முடித்துவிட்ட ஸ்டோக்ஸூம் ஜடேஜாவும் நெட்டுக்கு வெளியே கூலாகப் படுத்துக்கொண்டு தோனி பேட்டிங் ஆடுவதை கதை பேசியபடியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

Dhoni
Dhoni
இறுதியாக 45 நிமிட பேட்டிங்கிற்கு பிறகு தோனி களத்திலிருந்து வெளியேறினார்.

சன்ரைசர்ஸ் அணி இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை. நாளை இரு அணிகளுமே பயிற்சியில் ஈடுபடக்கூடும்.