Published:Updated:

முன்னாள் கிரிக்கெட்டர்களை கெளரவிக்கும் சிஎஸ்கே... இன்று மாலை சென்னையில் விழா!

தோனி, ஸ்ரீனிவாசன்
தோனி, ஸ்ரீனிவாசன்

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை வரவேற்றிருக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகம், தங்கள் அணி சார்பிலும், தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 7 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 85 ஆண்டுகளில் தமிழகத்தில் பல கிரிக்கெட் வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்காக பல வருடங்கள் கிரிக்கெட் விளையாடி கிரிக்கெட்டுக்காக தங்களை அர்ப்பணித்த பல முன்னாள் வீரர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். தற்போது இருப்பது போல 50,60'களில் கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டதில்லை. அவர்கள் கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை மனதில்கொண்டு தமிழகத்துக்காக ஆடிய வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சார்ந்த வேலைகளில் தங்கள் பங்களிப்பைச் செய்தவர்ளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு இந்த முன்னெடுப்பை தமிழக கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை வரவேற்றிருக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகம், தங்கள் அணி சார்பிலும், தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 7 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. 2021-ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முன்னாள் வீரர்கள் யார், யார்?

TNPL | டிஎன்பிஎல்
TNPL | டிஎன்பிஎல்

கே.ஆர்.ராஜகோபால்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராஜகோபால் 60'களில் தமிழ்நாட்டிற்காக விளையாடியவர். 1967-ம் ஆண்டு ரஞ்சி சீசனில் மட்டும் 800 ரன்களுக்கு மேல் அடித்திருந்தவருக்கு சர்வதேச வாய்ப்பு கிடைக்காமலேயே போனது.

நஜாம் உசேன்

1960களில் மைசூர், மெட்ராஸ் மற்றும் ஜாலி ரோவர் அணிகளுக்காக விளையாடியவர் நஜாம் உசேன். மைசூருக்கும், ஐதராபாத்துக்கும் இடையே நடந்து உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்த போட்டியில் சதம் அடித்தவர் நஜாம் உசேன். அந்த டெஸ்ட்டில் இரு அணிகளின் 20 விக்கெட்டுகளுமே கேட்ச் முறையில் ஆட்டம் இழந்ததுதான் அந்த உலக சாதனை.

வி.எஸ்.மணி

1960-களில் தமிழ்நாட்டிற்காக விளையாடியவர் விஎஸ் மணி. இந்திய டெஸ்ட் அணியின் ரிசர்வ் வீரராக இருந்தார்.

ஆர்.பிரபாகர்

ஆல்ரவுண்டரான பிரபாகர் தமிழ்நாட்டுக்காக பல முக்கிமான பர்ஃபாமென்ஸ்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு போட்டியில் 160 ரன்களுக்கும் மேல் குவித்து 16 சிக்ஸர்களை விளாசியவர் பிரபாகர்.

கே.பார்த்தசாரதி

1973 முதல் 2013 வரை 40 ஆண்டுகாலம் சென்னை சேப்பாக்கம் பிட்ச்சின் க்யூரேட்டராக இருந்தவர் கே.பார்த்தசாரதி. இவர் அமைத்த பிட்ச்சில்தான் 40 ஆண்டுகளாக சென்னையில் போட்டிகள் நடந்தன. 1986-ல் சென்னை ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே டை- ஆன டெஸ்ட் போட்டிக்கான பிட்ச்சும் இவர் தலைமையின் கீழ் உருவானதுதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு