Published:Updated:

நம்ம பசங்க... நம்ம கெத்து!

சிலம்பரசன்
பிரீமியம் ஸ்டோரி
சிலம்பரசன்

புதிய திறமைசாலிகளைக் கண்டெடுப்பதில் இந்திய அணிக்கு IPL எப்படியோ, அப்படித் தமிழக அணிக்கு TNPL!

நம்ம பசங்க... நம்ம கெத்து!

புதிய திறமைசாலிகளைக் கண்டெடுப்பதில் இந்திய அணிக்கு IPL எப்படியோ, அப்படித் தமிழக அணிக்கு TNPL!

Published:Updated:
சிலம்பரசன்
பிரீமியம் ஸ்டோரி
சிலம்பரசன்
நம்ம பசங்க... நம்ம கெத்து!

ந்த முறையும் பரபரப்பும் விறுவிறுப்பும் குறைவில்லாமல் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இம்முறை அசத்திய இளம் வீரர்களைச் சந்தித்துப் பேசினேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிலம்பரசன்

“ஒன்பதாவது வரை ரப்பர் பாலில்தான் விளையாடிக்கொண்டிருந்தேன். நான் பள்ளியில் விளையாடுவதைப் பார்த்த ஜெகன் சார் (பயிற்சியாளர்), என்னைப் பயிற்சிக்கு வரச் சொன்னார். என் வீட்டிலும் அவரே அனுமதி கேட்டார். ஆனால், எங்கள் வீட்டில் அனுமதிக்கவில்லை. நமக்காக இவ்வளவு தூரம் கேட்கிறாரே என, ‘ஸ்பெஷல் கிளாஸ்’ என்று பொய் சொல்லிவிட்டுப் பயிற்சிக்குப் போனேன். பின்னர், எங்கள் வீட்டில் தெரிந்துவிட, என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு அனுமதித்துவிட்டனர்.” இப்படித்தான் தொடங்கியது சிலம்பரசனின் கிரிக்கெட் பயணம். 14 வயதுவரை ரப்பர் பந்து வீசிக்கொண்டிருந்தவர், இப்போது டிஎன்பிஎல் தொடரின் முன்னணி பௌலர்.

நம்ம பசங்க... நம்ம கெத்து!

பிங்கர் ஸ்பின்னர்கள் டி-20 போட்டிகளில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாது என்று உலகம் சொல்லிக்கொண்டிருக்க, அதைப் பொய்யாக்கிக்கொண்டிருக்கின்றனர் TNPL வீரர்கள். அதில் மிக முக்கியமானவர் சிலம்பரசன். ஒரு பக்கம் மிகவும் சிக்கனமாகப் பந்து வீசுவார். மற்றொரு பக்கம் முக்கியமான விக்கெட்டுகளையும் ஸ்கெட்ச் போட்டு வீழ்த்திவிடுவார். திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வினே, முக்கியமான ஓவர்களை சிம்புவுக்குக் கொடுத்துவிட்டு, அதன்பின்னர்தான் பந்துவீச வருகிறார். அந்த அளவுக்கு நம்பிக்கையைச் சம்பாதித்திருக்கிறார் இந்த வாலாஜா இளைஞர்.

நம்ம பசங்க... நம்ம கெத்து!

“அஷ்வின் போன்ற ஒரு சீனியர் வீரருடன் விளையாடுவதால், தினமும் நிறைய கற்றுக்கொள்கிறேன். அனைவரையும்போல், தமிழ்நாடு அணிக்கு விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் நானும் இருக்கிறேன். ஆனால், 22 வயதிற்குள் ரஞ்சிக் கோப்பையில் ஆடிவிட வேண்டும் என்ற இலக்கு வைத்திருக்கிறேன். அது கட்டாயம் நடைபெறும் என்றே நினைக்கிறேன்” என்று மிகவும் நம்பிக்கையோடு பேசுகிறார் சிலம்பரசன்.

பாபா அபராஜித்

சில ஆண்டுகளுக்கு முன், ராக்கெட் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது அபராஜித்தின் கிரிக்கெட் பயணம். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை, சென்னை சூப்பர் கிங்ஸ், புனே அணிகளோடு ஐபிஎல் என வேகமாக வளர்ந்துகொண்டிருந்தவருக்கு, அதற்குப் பிறகான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. ஆனால், எந்த இடத்திலும் தேங்கிவிடாமல் இன்னும் தன்னை நிரூபிக்கப்போராடிக்கொண்டே இருக்கிறார். இந்த டிஎன்பிஎல் தொடரில், காஞ்சி வீரன்ஸ் அணியை வழிநடத்தியவர், தனி ஆளாகப் போட்டிகளை வென்றுகொடுத்தார். பலவீனமான மிடில் ஆர்டரில், ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பொசிஷனில் இறங்கி அணியைத் தாங்கிக்கொண்டிருந்தார்.

பாபா அபராஜித்
பாபா அபராஜித்

“போன ரஞ்சி சீஸன் எதிர்பார்த்த மாதிரி இல்லை. முந்தைய சீஸன்ல ரொம்ப நல்லா விளையாடினேன். ஆனால், போன முறை கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டுவிட்டது. அதன்பிறகு, மிகவும் தீவிரமாகப் பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விதமான போட்டிக்கு ஏற்பவும் தயாராகிக்கொண்டிருக்கிறேன். இந்த சீஸன் நிச்சயம் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது” என்று பாசிட்டிவாகப் பேசுகிறார்.

சாய் கிஷோர்

திருச்சி வாரியர்ஸ் அணியை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் 22 வயதேயான சாய் கிஷோர். எதிரணி பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும்போது ஆக்ரோஷமாகப் பந்தைச் சுழற்றுபவர், கேப்டன் அவதாரம் எடுத்தபின் அமைதி... அமைதி... அமைதியோ அமைதிதான். `‘இந்த வயதிலேயே கேப்டன் பதவி ஏற்றிருக்கிறீர்களே’’ என்று கேட்டால், “வயது ஒரு பெரிய விஷயமே இல்லை. எத்தனை வருடமாக விளையாடிக்கொண்டிருக்கிறோம், எவ்வளவு அனுபவம் பெற்றிருக்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்று சொல்லிச் சிரிக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழக அணியில் இடம்பெற்றிருக்கும் இந்த இடது கை ஸ்பின்னர்தான், 2018-19 ரஞ்சி சீஸனில் தமிழக அணியின் டாப் விக்கெட் டேக்கர்.

சாய் கிஷோர்
சாய் கிஷோர்

“தமிழ்நாடு அணிக்காக ஆடுகிறோம் என்பதை நான் எப்போதுமே பெருமையாக நினைப்பேன். மற்ற போட்டிகளைவிட அந்தப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும்போது, இன்னும் அதிகமாகப் பெருமைப்படுவேன்” என்கிறார் சாய் கிஷோர். “தொடக்கத்தில் என் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. அடி வாங்கத் தொடங்கியதும், என்னவெல்லாம் செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டேன். இந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய கற்றிருக்கிறேன். அந்த அனுபவம்தான் எனக்குக் கைகொடுத்துக்கொண்டிருக்கிறது” என்று முதிர்ச்சியோடு பேசும்போதே, ஏன் அவருக்குக் கேப்டன் பதவி வழங்கப்பட்டது என்று நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

ஜெகதீசன்

ந்த TNPL தொடரின் சிறந்த பேட்ஸ்மேன். தொடர்ந்து மூன்று அரைசதங்கள், அடுத்த போட்டியில் சதம், லீக் சுற்றில் சுமார் 400 ரன்கள் எனப் பட்டையைக் கிளப்பினார் கோவையில் பிறந்த ரன் மெஷின் ஜெகதீசன். லீக் சுற்றின் முதல் ஆறு போட்டிகளையும் திண்டுக்கல் டிராகன்ஸ் வெல்வதற்கு இவரது பேட்டிங் மிகமுக்கிய காரணம். டி-20 போட்டிகள் என்பதால், வெறும் பவுண்டரிகளாக அடிக்க நினைக்கும் பேட்ஸ்மேன் இல்லை இவர். ஸ்டிரைக் ரொட்டேட் செய்வதில் கில்லி. முடிந்தவரை டாட் பால்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வார். அதனால்தான் 23 வயதிலேயே மூன்று ஃபார்மட்டிலும் தமிழக அணியின் முக்கிய வீரராக வளர்ந்து நிற்கிறார்.

ஜெகதீசன்
ஜெகதீசன்

சாம்பியன் வீரர்களுக்கே உண்டான வெற்றித் தாகம் ஜெகதீசனிடம் நிறையவே இருக்கிறது. அதனால்தான், அவரால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பிடிக்க முடிந்தது. ஒரு முன்னணி அணியில், சீனியர் வீரர்களுடன் இருக்கும் அனுபவம் பற்றிக் கேட்டபோது, “சென்னை அணியில் நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறேன். ஹஸ்ஸியிடம் பேட்டிங் பற்றி நிறைய பேசுவேன். நான் கீப்பர் என்பதால் தோனியிடம் சில டெக்னிக்கலான சந்தேகங்கள் கேட்பேன். மிகவும் நல்ல அனுபவமாக இருக்கிறது. சூப்பர் கிங்ஸுக்காக முதல் போட்டியில் ஆடவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், தோனி போன்ற ஒரு கேரக்டரை ரீப்ளேஸ் செய்வது என்பது நினைத்துப்பார்க்க முடியாதது!” என்று சிரிக்கிறார் ஜக்கி!

ஷாரூக் கான்

2014-ம் ஆண்டு தமிழக அணியில் அறிமுகம். ஆனால், அதன்பின் தொடர்ச்சியான வாய்ப்புகள் இல்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பின், 2018-ல் முதல் ரஞ்சி வாய்ப்பு. 81/5 என்ற நிலையில் முதல் முறையாக ரஞ்சி அரங்கில் களமிறங்குகிறார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 92 ரன்கள். கடந்த இரண்டு சீஸன்களில் தமிழகம் வென்ற ஒரே ரஞ்சிப் போட்டி அதுதான்! ரஞ்சியில் மிடில் ஆர்டர், டி-20 போட்டிகளில் ஓப்பனிங் என அணிக்குத் தேவையான இடத்தில், தேவையான நேரத்தில் தன்னுடைய பங்களிப்புகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் ஷாரூக் கான். “டிஎன்பிஎல் போட்டிகளில் இரண்டு சீஸன்களாக ஓப்பனிங்கில் ஆடுவது மிகவும் உதவியாக இருக்கிறது.

நம்ம பசங்க... நம்ம கெத்து!

பெரிய இன்னிங்ஸ் ஆடினால்தான் ஒரு நம்பிக்கை கிடைக்கும். ஓப்பனிங்கில் இறங்குவதால், பெரிய இன்னிங்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது” என்று சொல்லும் ஷாரூக், இன்சமாம் உல் ஹக்கின் அதிதீவிர ரசிகர்! இந்த டிஎன்பிஎல் சீஸனின் தொடக்கத்தில் அப்படியான பெரிய இன்னிங்ஸ்கள் ஆடத் தவறியவர், நாக் அவுட் சுற்று நெருங்க நெருங்க தன் முழுத்திறனையும் காட்டத் தொடங்கினார். அதிக அரை சதங்கள் அடிக்காவிட்டாலும், பவர்பிளே ஓவர்களில் பட்டையைக் கிளப்பி எதிரணிகளைத் திக்குமுக்காடச் செய்தார்.