Election bannerElection banner
Published:Updated:

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சஞ்சனாவை மணந்தார் ஜஸ்பிரித் பும்ரா!

பும்ரா - சஞ்சனா
பும்ரா - சஞ்சனா

தமிழரான சஞ்சனா கணேசன், கடந்த பல ஆண்டுகளாக புனேவில் வசித்துவருகிறார். 2014-ல் மிஸ் இந்தியா ஃபைனலிஸ்ட்டாகத் தேர்வுபெற்றவர், மூன்று ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.

''இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன்'' என லீவ்லெட்டர் கொடுத்த ஜஸ்பிரித் பும்ராவின் திருமணம் இன்று நடைபெற்றது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை மணந்திருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.

தமிழரான சஞ்சனா கணேசன், கடந்த பல ஆண்டுகளாக புனேவில் வசித்துவருகிறார். 2014-ல் மிஸ் இந்தியா ஃபைனலிஸ்ட்டாகத் தேர்வுபெற்றவர், மூன்று ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.

2019 கிரிக்கெட் உலகக்கோப்பை முதல் பல்வேறு கிரிக்கெட் நிகழ்வுகளுக்கு பேட்டியாளராகப் பணியாற்றிய சஞ்சனா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போதும் பல அணியின் உரிமையாளர்களையும் பேட்டி எடுத்தார்.

பும்ரா - சஞ்சனா
பும்ரா - சஞ்சனா

29 வயதான சஞ்சனா, பும்ராவைவிட இரண்டு வயது பெரியவர். ஐபிஎல் போட்டிகளின்போது நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்து நண்பர்களானாவர்கள், ரகசியமாகக் காதல் வளர்த்திருக்கிறார்கள்.

பும்ரா - சஞ்சனாவின் திருமணம் இன்று கோவாவில் நடந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பும்ரா, கோவாவில் இருந்து இந்தமாத இறுதியில் சென்னைக்கு வந்து மும்பை இந்தியன்ஸ் அணியோடு இணைய இருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு