Published:Updated:

ENGvWI: `நோ செலிபிரேஷன்; ரசிகர்களின் எனர்ஜி..?’ -இது நியூ நார்மல் கிரிக்கெட்

காலி மைதானம்
காலி மைதானம் ( Mike Hewitt )

``கிரிக்கெட் பார்க்கும்போது நமக்கும் சரி, வீரர்களுக்கும் சரி ரசிகர்களின் ஆரவாரம் கொடுக்கும் எனர்ஜியே வேறலெவல்தான். ஆனால், தற்போது அதற்கும் வாய்ப்பு இல்லை.”

சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளுக்கு வைரஸ் பரவ ஆரம்பித்தது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், உலக அளவில் பல துறைகள் கடுமையான பாதிப்புகளை சந்ததித்து. அப்படி பாதிப்புகளைச் சந்தித்த துறையில் விளையாட்டுத்துறையும் ஒன்று.

மாஸ்குடன் வீரர்
மாஸ்குடன் வீரர்
Mike Hewitt

சம்மர் கால விளையாட்டு தொடர்கள் பொதுவாகக் களைகட்டும். ஆனால், இந்த முறை வந்த தகவல்கள் அனைத்துமே விளையாட்டை ஒத்தி வைப்பது தொடர்பாகக்தான் இருந்தது. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி சிட்னியில் காலி மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி 100 நாள்களுக்கு மேல் நடைபெறாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில் 117 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெற உள்ளது. ஆம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது வெஸ்ட்இண்டீஸ் அணி. இவ்விரண்டு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது. இதனை நியூ நார்மல் கிரிக்கெட் போட்டி என்றுதான் சொல்ல வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரை... ஐபிஎல் விவகாரத்தில் அமைதிகாக்கும் பிசிசிஐ!

நோ செலிபிரேஷன்

கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகளவில் புதுமையான விதிகளுடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது என்றுதான் கூற வேண்டும். இதற்கான முழு கிரெடிட்ஸ் கொரோனாவையேச் சேரும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ள விதிகளின் படி, இந்தப் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் நடுவர்கள் உரிய தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

பவுலர்கள் பந்து வீசும் போது தங்களது தொப்பி, கண்ணாடி மற்றும் கைக்குட்டை போன்றவற்றை நடுவர்களிடம் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை அப்படி வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

வீரர்கள் அவுட் எடுத்தாலோ, வெற்றி பெற்றாலோ ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டாடுவது வழக்கம். தற்போது அதற்கும் தடை. தண்ணீர் பாட்டில்களைப் பகிர்ந்துகொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டர்சன்
ஆண்டர்சன்
Twitter

பந்தில் எச்சிலைத் தேய்த்தால் பெனால்டி

பந்து வீச்சாளர்களுக்கு இந்த டாஸ்க் மிகவும் கடினமானது எனலாம். பந்தை `ஸ்விங்’ செய்ய பவுலர்கள் தங்களது எச்சிலைத் தொட்டு பந்தில் தேய்ப்பது காலம்காலமாகத் தொடரும் வழக்கம். கொரோனா பரவும் நேரத்தில் இந்த விஷயம் மிகவும் ஆபத்தானது என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பந்தில் எச்சிலைத் தொட்டு தேய்த்தால், 2 முறை எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அதையும் மீறினால் 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது கொரோனாவால் வீரர்கள் பாதிப்படைந்தால், அதற்கு மாற்றாக வீரர்களை களமிறக்கலாம் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

கிரிக்கெட் பார்க்கும்போது நமக்கும் சரி, வீரர்களுக்கும் சரி ரசிகர்களின் ஆரவாரம் கொடுக்கும் எனர்ஜியே வேறலெவல்தான். ஆனால், தற்போது அதற்கும் வாய்ப்பு இல்லை. ரசிகர்களுக்கு அனுமதி அளித்தால் தனிமனித இடைவெளிகள் பாதிக்கப்படும். அதுமட்டுமல்ல ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது என்பதால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களும் பாதிப்படையக் கூடாது என்பதற்காக ஸ்டேடியத்தின் அருகிலேயே வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளும் அவர்களுக்கு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தேவையான அனைத்துவிதமான மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியில் ஸ்டோக்ஸ்
பயிற்சியில் ஸ்டோக்ஸ்
Adrian DENNIS

கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதுவரை ஏறக்குறைய 45,000 பேர் கொரோனா வைரஸால் அங்கு இறந்துள்ளனர். தொடர்ந்து பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய கடினமான சூழலில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி நெருக்கடியான சூழலில் நடைபெறும் போட்டியைக் காணவும் கிரிக்கெட் ரசிகர்கள் வெயிட்டுங் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது மழை காரணமாகத் தாமதமாக தொடங்குகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

டி20 கிரிக்கெட்: `அது அடித்து ஆடுவதற்கான லைசென்ஸ்!’ - கங்குலி ஷேரிங்க்ஸ்
அடுத்த கட்டுரைக்கு