Published:Updated:

“முரளி விஜய், புஜாரா போன்ற வீரர்களை யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை”- அஷ்வின் ஆதங்கம்

ரவிச்சந்திரன் அஷ்வின்

தமிழக வீரரான முரளி விஜய் மற்றும் புஜாரா போன்ற வீரர்களை யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை என்று சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

“முரளி விஜய், புஜாரா போன்ற வீரர்களை யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை”- அஷ்வின் ஆதங்கம்

தமிழக வீரரான முரளி விஜய் மற்றும் புஜாரா போன்ற வீரர்களை யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை என்று சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வீரர்கள் தொடர்பான பல விஷயங்களை தொடர்ந்து பேசி வருகிறார்.

அந்தவகையில் தற்போது தமிழக வீரரான முரளி விஜய், புஜாரா போன்ற வீரர்களை  யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

முரளி விஜய்
முரளி விஜய்

இதுதொடர்பாக பேசிய அவர், “2011- 2015 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் முரளி விஜய். என்னைப் பொறுத்தவரை சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக் போல வெளிநாட்டு மண்ணில் முரளி விஜய் ஒரு  மிகசிறந்த தொடக்க வீரர். கவாஸ்கர், வீரேந்தர் சேவாக்கிற்கு பிறகு தொடக்க டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்களுக்கு மேல் பதிவு செய்த ஒரே இந்திய வீரர் இவர்தான். இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் சிறந்த டெஸ்ட் வீரராக செயல்பட்டவர்.

ஆனால் அவருக்கு அதற்கான உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை. அவரை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை. அதே நிலைமைதான் புஜாராவுக்கும். முரளி விஜய்யை போன்று புஜாராவையும் நாம் யாரும் அதிகம் கொண்டாடுவதில்லை. நிறைய பேட்ஸ்மேன்கள் வெற்றிகரமாக செயல்படும் போது சிலவற்றை தங்களது ஆட்டத்தில் இணைத்துக் கொள்வார்கள். அதே போல் சிலர் சுமாராக செயல்படும் போது சிலவற்றைத் தவிர்த்து விடுவார்கள்.

புஜாரா
புஜாரா

ஆனால் புஜாரா தொடர்ந்து தனது அணுகு முறையில் நம்பிக்கை வைத்து சிறப்பாக செயல்படுவார். அவரிடம் நீங்கள் மாற்றத்தை செய்யுமாறு பேசி சமாளிக்க முடியாது. அவருக்கு தமிழில் நான் மிருகம் என்று பட்டப்பெயர் வைத்துள்ளேன். தனது இலக்கில் மட்டும் முழு மனதுடன் வேட்டையாட கவனத்தை வைத்திருப்பது போல புஜாரா தன்னுடைய முழு கவனத்தை எப்போதும் பேட்டிங்கில் வைத்திருப்பார்” என்று புஜாரா குறித்துப் பேசியிருக்கிறார்.