Published:Updated:

`இப்படி ஒரு அவுட்டைப் பார்த்ததே இல்லை!' - மேட் ரென்ஷா கேட்சால் சர்ச்சையாகும் கிரிக்கெட் விதிமுறை

ரென் ஷா

``இது, கிரிக்கெட்டின் விதிகள் குறித்த புதிய விவாதங்களை ஏற்படுத்தும்” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது

Published:Updated:

`இப்படி ஒரு அவுட்டைப் பார்த்ததே இல்லை!' - மேட் ரென்ஷா கேட்சால் சர்ச்சையாகும் கிரிக்கெட் விதிமுறை

``இது, கிரிக்கெட்டின் விதிகள் குறித்த புதிய விவாதங்களை ஏற்படுத்தும்” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது

ரென் ஷா

ஆஸ்திரேலிய டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மோதிய போட்டி காப்பா மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய மேத்யூ வேட் சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற்றப்பட்டது, ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் போட்டியில் மேத்யூ வேட், 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 பந்துகளில் 61 ரன்கள் அடித்து களத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். பென் கட்டிங் வீசிய 15-வது ஓவரில் மேத்யூ வேட் அடித்த லாங்ஆன் திசையில் எல்லைக் கோட்டைத் தாண்டியது. அப்போது பவுண்டரி லைன் அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த மேட் ரென்ஷா, எல்லைக்கோட்டைத் தாண்டி தாவிச்சென்று பந்தைப் பிடித்தார். காலை தரையில் ஊன்றுமுன்னர் மைதானத்துக்குள் பந்தை வீச அவர் முயன்ற நிலையில், அது பலனளிக்கவில்லை. இந்த நிலையில், பந்தை தூக்கிப்போட்டுவிட்டு பின்னர் மீண்டும் குதித்தவாறு பந்தை எல்லைக்கோட்டுக்குள் தள்ளினார். அதை மற்றொரு வீரரான பேன்டன் பிடித்தார். இது அவுட் கொடுக்கப்படவே, மேத்யூ வேட் வெளியேறினார். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள், `கிரிக்கெட் விதிமுறைகளில் இதுபோன்று வீரர்கள் ஆட்டமிழக்கச்செய்ய வழி இருக்கிறதா' என குரல்களை எழுப்பினர்.

இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் ட்விட்டரில், ``மேட் ரென்ஷாவின் அற்புதமான இந்த முயற்சிக்குப் பிறகு, மேத்யூ வேட் வெளியேற வேண்டும். இது, கிரிக்கெட்டின் விதிகள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தும்” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தனர்.

பந்தை பவுண்ட்ரிக்குள் தட்டிவிடும் வீரர்
பந்தை பவுண்ட்ரிக்குள் தட்டிவிடும் வீரர்

கடந்த 2013-ம் ஆண்டு திருத்தப்பட்ட எம்.சி.சி விதிகளின்படி இதை அவுட்டாகவே கருத முடியும்.`ஒரு ஃபீல்டர் பந்தை முதல் முறையாகத் தொடும்போது, அவரது கால் பவுண்டரி எல்லைக்குள்ளே தரையைத் தொடாமல் இருந்திருந்தால், அவர் பவுண்டரிக்கு வெளியே நின்றதாகத்தான் கருதப்படும்' என்கிறது எம்.சி.சி-யின் கிரிக்கெட் விதி 19.5. அதிகம் வெளியில் தெரியாத எம்.சி.சி-யின் இந்த விதியால் இப்போது புதிய விவாதம் கிளம்பியிருக்கிறது.