Published:Updated:

`இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?!’ - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தைச் சாடும் வார்னே

ஷேன் வார்னே

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டேவிட் ஹஸிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதை ஷேன் வார்னே கடுமையாகச் சாடியுள்ளார்.

Published:Updated:

`இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?!’ - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தைச் சாடும் வார்னே

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டேவிட் ஹஸிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதை ஷேன் வார்னே கடுமையாகச் சாடியுள்ளார்.

ஷேன் வார்னே

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் தொடரான பிக்பாஷ் லீக் (Big Bash League) குறித்து டி.வி-யில் விளையாட்டாக பேசிய டேவிட் ஹஸ்ஸிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளது.

பிக்பாஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளராக டேவிட் ஹஸ்ஸி உள்ளார். கடந்த புதன்கிழமையன்று அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை எதிர்த்து மெல்போர்ன் அணி விளையாடியது. போட்டி நேரலையில் ஒளிபரப்பானபோது ஹஸ்ஸியுடன் வர்ணணையாளர்கள் உரையாடினர். அப்போது, `பிட்ச்-ன் தன்மையை அறிவதற்காகச் செல்லும்போது காலில் ஸ்பைக்ஸ் அணிந்திருந்தேன்' என விளையாட்டாக ஹஸி கூறினார்.

மெல்போர்ன் ஸ்டார்ஸ்
மெல்போர்ன் ஸ்டார்ஸ்

இதையடுத்து நடத்தை விதியை மீறியதாக டேவிட் ஹஸிக்கு 2000 டாலர் அபராதம் விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட் விதிகளின்படி போட்டி தொடங்குவதற்கு முன்பு அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் பிட்ச்-யை பார்வையிடலாம். அப்போது, காலில் ஸ்பைக்ஸ் கொண்ட ஷூக்களை அணிந்திருக்கக் கூடாது

உண்மையில் அந்தப் போட்டியின்போது மைதானத்தைப் பார்வையிடச் சென்ற ஹ,ஸி காலில் ஸ்பைக்ஸ் அணிந்திருக்கவில்லை. அவர் டி.வி-யில் நகைச்சுவையாக கூறியதையடுத்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் விதி 2.23-ஐ மீறியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டேவிட் ஹஸ்ஸி
டேவிட் ஹஸ்ஸி

இதுகுறித்துப் பேசியுள்ள டேவிட் ஹஸ்ஸி, ``அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது நான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். வர்ணணையாளர்களுடன் பேசும்போது ஒரு நகைச்சுவையாக இந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.

கிரிகெட் விதிகளுக்கு எதிராக எந்த உள்நோக்கத்தோடு நான் அந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. என்னுடைய கருத்துகள் எங்கள் ஆதரவாளர்களுக்கும், ரசிகர்களுக்கு ஒளிபரப்பப்படுவதை உணர்கிறேன். ஒருவேளை இது கிரிக்கெட் உணர்வைக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் இதற்காக வருந்துகிறேன் மன்னிப்புக் கேட்கிறேன்” என்றார்.

ஷேன் வார்னே
ஷேன் வார்னே

டேவிட் ஹஸ்ஸிக்கு அபராதம் விதித்ததை வர்ணணையாளரும் முன்னாள் வீரருமான ஷேன் வார்னே கடுமையாக விமர்சித்துள்ளார். ``இது கேலிக்குரியது. போட்டியின்போது வீரர்களுடன், பயிற்சியாளர்களுடன் பேசுவது எங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு. அவர்கள் எங்களுடன் பேசுவது கொஞ்சம் நகைச்சுவையாகவும் வேடிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் அதுபோன்ற உரையாடல்களை நிறுத்த முயற்சி செய்யாதீர்கள். 2,000 டாலர் அபராதம் எல்லாம் கொஞ்சம் ஓவர். அபராதத்தை திரும்பப்பெறுங்கள்” என வார்னே கண்டனம் தெரிவித்திருக்கிறார்.