Published:Updated:

அப்போ கங்குலிக்கு நடந்தது இப்ப கோலிக்கும் நடந்திருக்கு... 2002 வெர்சஸ் 2020 நியூசிலாந்து தேஜாவூஸ்!

கோலி - கங்குலி
கோலி - கங்குலி

அதாவது, நிகழ்காலத்தில் நடக்கும் ஒன்று ஏற்கெனவே நம் வாழ்வில் நடந்துவிட்டதுபோல நம் மனதில் தோன்றும். நம் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இதேபோல ஒரு தேஜா வூ தற்போது நடந்திருக்கிறது.

``இப்போ நடக்கிறது எல்லாம் ஏற்கெனவே நடந்த மாறி இருக்கே” என்று நம்மில் பலர் சொல்ல கேட்டிருப்போம். இதற்கு தேஜா வூ என்ற பெயர். அதாவது, நிகழ்காலத்தில் நடக்கும் ஒன்று ஏற்கெனவே நம் வாழ்வில் நடந்துவிட்டது போல நம் மனதில் தோன்றும். நம் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இதேபோல ஒரு தேஜா வூ தற்போது நடந்திருக்கிறது.

கோலி - கங்குலி
கோலி - கங்குலி

சென்ற வருடம் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஐசிசி அறிவித்ததும் அதன் தொடக்கத்திலிருந்தே இந்திய அணியின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் , தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் என தான் எதிர்த்து விளையாடிய அனைத்துத் தொடர்களையும் ஒயிட்வாஷ் செய்து வந்தது கோலி தலைமையிலான இந்திய அணி. ``நம்ம வீரர்களுக்கு எல்லாம் சுத்திப் போடுங்கப்பா” என்று சொல்லும் அளவுக்கு அணியில் அனைவரின் பங்களிப்புமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. தற்போது யார் கண் பட்டது என்று தெரியவில்லை, நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. மேலும், இந்திய அணியின் இந்தத் திடீர் ஃபார்ம் அவுட் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இப்போது இந்திய அணிக்கும் தேஜா வூக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறீர்களா? இருக்கிறது. 2002-ம் ஆண்டு சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி இதே போன்று நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மிகமோசமான தோல்வியைச் சந்தித்து. அந்தத் தொடரில் இந்திய அணி தோற்றதற்கும் தற்போது தோற்றதற்கும் ஆச்சர்யப்படுத்தும் பல ஒற்றுமைகள் உண்டு.

1. 2002-ல் நடந்த தொடரும் தற்போதைய தொடரைப்போல இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்தான். இரண்டு தொடர்களிலும் ஒயிட்வாஷ் ஆனது இந்திய அணி.

2. இரு போட்டிகளிலும் கேப்டன் கோலி டாஸை இழந்து, இந்திய அணி முதலில் பேட் செய்து குறைவான ஸ்கோரை எடுத்ததுபோல, அப்போதும் கங்குலி இரு முறையும் டாஸை தோற்றார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து சொற்பமான ஸ்கோரையே அடித்தது.

3. 2002-ம் ஆண்டு இந்திய அணி முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. அதே போல தற்போதைய இந்திய அணி முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றிருக்கிறது.

4. இந்தத் தொடரில் விராட் கோலி மிக மோசமான ஃபார்மில் இருந்ததுபோல அன்றைய கேப்டன் கங்குலியும் ஃபாரம் அவுட்டில்தான் இருந்தார். இரு போட்டிகளும் சேர்த்து 7.25 என்ற சராசரியுடன் கங்குலி அடித்த மொத்த ரன்கள் 29. கோலி 9.5 என்ற சராசரியுடன் 38 ரன்கள் அடித்துள்ளார்.

கோலி - கங்குலி
கோலி - கங்குலி

5. 2002 தொடரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் மார்க் ரிச்சர்ட்சனின் 89. நடந்து முடிந்த தொடரிலும் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 89 ரன்கள் அடித்துள்ளார்.

6. தற்போது முடிந்த தொடரில் இந்திய அணி 18.5 ரன்களுக்கு ஒருமுறை விக்கெட்டை இழந்தது. அதேபோல அன்றும் 13.37 ரன்களுக்கு ஒரு முறை விக்கெட்டை இழந்தது இந்திய அணி.

7. ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன் செஞ்சுரி அடிக்காமல் இருப்பது இது இரண்டாவது முறை. (அதிகபட்ச ரன் – மயாங்க் அகர்வால்- 58). இதற்கு முன் 2002-ல் நடந்த நியூசிலாந்து தொடரில் ராகுல் திராவிட் அதிகபட்சமாக 76 ரன்கள் அடித்திருந்தார். இடைப்பட்ட காலங்களில் சுமார் 60 டெஸ்ட் தொடர்களை விளையாடியுள்ளது இந்திய அணி.

8. இத்தொடரில் அறிமுகமான ஆல்ரவுண்டர் கைல் ஜாமிசனின் உயரம் 6.8 அடி. இதே போலதான் 2002 தொடரில் அறிமுகம் ஆனார் ஆல்ரவுண்டர் ஜேக்கப் ஓரம். அவரின் உயரம் 6.6 அடி. இருவரும் தங்களின் அணிக்கு மிக சிறப்பான பங்களிப்பை அத்தொடர்களில் வழங்கினர்.

இவ்வளவு ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது நியூஸிலாந்து அணிக்கு எதிரான அப்போதைய தொடரும் இப்போதைய தொடரும். எது எப்படியோ இந்திய அணியின் இந்தத் தேஜா வூ வரப்போகும் தொடர்களில் தொடராமல் இருந்தால் சரிதான்.

அடுத்த கட்டுரைக்கு