Published:Updated:

``தோல்வி குறித்து ஆராய நேரமில்லை!” - கேள்விகள் இன்றி மே.இ பறக்கும் இந்திய அணி?

பிரேம் குமார் எஸ்.கே.

இந்திய அணியும் நாடு திரும்பியது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தோல்வி தொடர்பாக எந்த ஆராய்ச்சியும் நடைபெறவில்லை!

இந்திய அணி
இந்திய அணி ( AP )

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்திய அணி கோப்பை வெல்லும் என பல நாட்டு முன்னாள் வீரர்கள் கணித்திருந்த நிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோல்வியைச் சந்தித்து வெளியேறியது.

வில்லியம்சன் - கோலி
வில்லியம்சன் - கோலி
AP

இதைத் தொடர்ந்து இந்திய அணி தேர்வு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. தேர்வுக் குழுத் தலைவரும் அணித் தேர்வு தொடர்பாக தனது விளக்கத்தை தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க இந்திய வீரர்கள் நாடு திரும்பியதும் அவர்களிடம் தோல்விக்கான காரணம் தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாயின.

இந்திய அணியும் நாடு திரும்பியது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தோல்வி தொடர்பாக எந்த ஆராய்ச்சியும் நடைபெறவில்லை. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவின் தலைவர் வினோத் ராய் வீரர்களிடம் கேள்விகளை முன்வைக்க நேரமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ரசிகர்கள்
இந்திய ரசிகர்கள்
AP

நேற்று நடைபெற்ற நிர்வாகக் குழுவின் கூட்டம் முடிந்தப் பின்னர் பேசிய வினோத் ராய், ``உலகக் கோப்பைத் தொடரில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக விசாரணை நடத்த எங்கே நேரம் இருக்கிறது? வரும் 29-ம் தேதி இந்திய வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் நாட்டுக்குப் புறப்படுகின்றனர்.

``தோனியை விமர்சித்திருக்கிறேன்; ஆனா இப்போ Hat's off!” - கம்பீர்

வழக்கமாக உதவி பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் மேலாளர் ஆகியோரிடம் இருந்து வர வேண்டிய அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றார். நாளை மறுநாள் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சுற்றுப் பயணத்துக்காக புறப்படவுள்ளது.