இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் தொடர் ஐபிஎல். பலநூறு வீரர்கள் விளையாடி 14 சீசன்கள் கடந்து செல்லும் இந்த ஐபிஎல்-ன் ஆல்-டைம் 11 எப்படி இருக்கும் என யோசித்தோம். சி.எஸ்.கே-வின் ஆல்-டைம் 11-ஐ போல இது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காரணம், ஒவ்வொரு இடத்திற்கும் பல்வேறு வீரர்களிடையே பலத்த போட்டி கடுமையாக நிலவுகிறது.

சரி, இரண்டு ஒப்பனர்களில் ஒருவரான வெளிநாட்டு வீரரை தேர்ந்தெடுத்து விடுவோம். இதற்கான ரேஸில் இருப்பது கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன், டேவிட் வார்னர். இதில் கெய்ல் மற்றும் வார்னரே முன்னிலையில் உள்ளனர். இதனால் வாட்சன் எந்தவகையிலும் குறைந்தவர் இல்லை. ராஜஸ்தான் அணி ஜெயித்த அந்த ஒற்றை கோப்பைக்கான காரணமே இந்த ஒற்றை வீரர்தான். ஆனால் மற்ற இரு வீரர்களின் எண்களையும் அவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் கணக்கில் கொண்டால் வாட்சன் சற்றே பின் தங்குகிறார்.
சரி, வார்னரா? கெய்லா? - இது ஒரு கடினமான கேள்விதான். இருவரும் தங்கள் அணிகளுக்கு விவரிக்க முடியாத அளவிற்குப் பங்காற்றியுள்ளனர். வார்னர் அரைசதத்தில் அரைசதம் அடித்துள்ளார் என்றால் கெய்ல் எந்த ஒரு உலகத்தரம் வாய்ந்த பௌலரையும் ஆட்டம் காண வைத்துவிடுவார். அவரின் அந்த 175 ரன்கள் இன்னிங்ஸ் இன்னும் நம் கண் முன்னே நிற்கிறதல்லவா! இதில் எதை கணக்கில் எடுத்துக்கொள்வது?

இறுதி முடிவாக கிறிஸ் கெய்லே அணியில் இடம் பெறுகிறார். காரணம், இவரை விட எண்களில் வார்னரே சிறந்து விளங்கினாலும் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் அரங்கில் கெய்ல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்பது அளப்பரியது. ஐபிஎல் அவருக்கு அளித்ததை தாண்டி அவர் ஐபிஎல்-ஐ அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார் என்றே சொல்லலாம். அதனால் கிறிஸ் கெய்ல் அணியின் முதல் வீரராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மற்றுமொரு ஓப்பனிங் ஸ்லாட்டில் ஆடப்போவது விராட் கோலியா, ரோஹித் ஷர்மாவா? பேட்டிங் யூனிட்டில் இடம்பெற்றுள்ள மற்ற வீரர்கள் யார் என்பதை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.