தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் தொடர்பான வீடியோவில் BCCI-ன் தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா பேசிய பல விஷயங்கள் சர்ச்சையைக் கிளப்பியது.
அந்த வீடியோவில், `விராட் கோலிக்கும் அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் இடையே உள்ள பிரச்னை குறித்தும் வீரர்கள் ஊக்க மருந்தைப் பயன்படுத்தி வாய்ப்பைப் பெறுகின்றனர். காயத்தில் இருந்து மீண்ட பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியதாகவும், ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதில் அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு விருப்பமில்லை என்பது குறித்தும்
பேசியிருந்தார்.
இவை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியது. இதனைத் தொடர்ந்து BCCI அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது சேத்தன் சர்மா தனது தேர்வு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை BCCI செயலாளர் ஜெய் ஷாவுக்கு அனுப்பியுள்ளார்.