Published:Updated:

Chetan sharma & BCCI - `உள்ளே - வெளியே' பந்தாட்டம்; புலனாய்வால் ராஜினாமா! இதுவரை நடந்ததென்ன?

BCCI, Chetan Sharma

சேத்தன் சர்மா நிர்வாகியாக பிசிசிஐக்குள் வந்த பிறகு தொடர்ந்து பந்தாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார். பிசிசிஐக்குள் சேத்தன் சர்மாவின் இருப்பையும் விலகலையும் ஒரு காலக்கோட்டின் வழியாக பார்ப்போம்.

Published:Updated:

Chetan sharma & BCCI - `உள்ளே - வெளியே' பந்தாட்டம்; புலனாய்வால் ராஜினாமா! இதுவரை நடந்ததென்ன?

சேத்தன் சர்மா நிர்வாகியாக பிசிசிஐக்குள் வந்த பிறகு தொடர்ந்து பந்தாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார். பிசிசிஐக்குள் சேத்தன் சர்மாவின் இருப்பையும் விலகலையும் ஒரு காலக்கோட்டின் வழியாக பார்ப்போம்.

BCCI, Chetan Sharma
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புலனாய்வு செய்தி உண்டாக்கிய சர்ச்சையினாலயே சேத்தன் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கிறார். சேத்தன் சர்மா நிர்வாகியாக பிசிசிஐக்குள் வந்த பிறகு தொடர்ந்து பந்தாடப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.
Chetan Sharma
Chetan Sharma
Chetan Sharma

பிசிசிஐக்குள் சேத்தன் சர்மாவின் இருப்பையும் விலகலையும் ஒரு காலக்கோட்டின் வழி பார்ப்போம்.

டிசம்பர் 24, 2020:

அப்போது வரை இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சுனில் ஜோஷியின் பதவிக்காலம் முடிந்த பிறகு சேத்தன் சர்மா இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். சேத்தன் சர்மா தலைமையேற்ற அந்த காலம் ரொம்பவே முக்கியமானது. அப்போதுதான் கொரோனா பாதிப்பையெல்லாம் கடந்து புத்தியல்பு சூழலில் இந்திய அணி மீண்டும் கிரிக்கெட் ஆடத் தொடங்கியிருந்தது.

பிசிசிஐ
பிசிசிஐ

நவம்பர் 18, 2022:

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவிய நிலையில் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை மொத்தமாக கலைத்தது பிசிசிஐ. சேத்தன் சர்மா, ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி, தேபஷிஸ் என தேர்வுக்குழு உறுப்பினர்கள் அத்தனை பேரும் தங்கள் பதவியை இழந்தனர்.

ஜனவரி 7, 2023:

சேத்தன் சர்மாவை பதவியிலிருந்து நீக்கிய பிசிசிஐ அடுத்த இரண்டே மாதத்திற்குள் மீண்டும் சேத்தன் சர்மாவையே தேர்வுக்குழுவின் தலைவராக நியமித்தது. பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனை குழுவின் பரிந்துரைப்படி 600 விண்ணப்பதாரர்களிலிருந்து சேத்தன் சர்மா தேர்வு செய்யப்பட்டு தேர்வுக்குழுவின் தலைவரானார். சலீல் அங்கோலா, சிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, ஷரத் ஆகியோர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

பிப்ரவரி 14, 2023:

தனியார் தொலைக்காட்சி ஒன்று சேத்தன் சர்மா குறித்த புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. வீரர்களின் உடற் தகுதி, வீரர்களுக்கிடையேயான முரண்கள், வீரர்களுக்கும் பிசிசிஐக்கும் இடையேயான உரசல்கள் என பல திரைமறைவு விஷயங்களையும் பற்றி சேத்தன் சர்மாவே பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

சேத்தன் சர்மா
சேத்தன் சர்மா

பிப்ரவரி 17, 2023:

தனியார் தொலைக்காட்சி புலனாய்வு செய்தி சர்ச்சையால் சேத்தன் சர்மா எப்போது வேண்டுமானாலும் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், சேத்தன் சர்மா தாமாகவே முன் வந்து தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். இரண்டாவது முறையாக பதவியேற்று வெறும் ஒன்றரை மாதத்திற்குள்ளேயே சேத்தன் சர்மா பதவியிலிருந்து இறங்கியிருக்கிறார்.ஒரு நிர்வாகியாக சேத்தன் சர்மாவுக்கு பிசிசிஐயுடனான பயணம் திருப்திகரமானதாகவே அமையவில்லை. தொடர்ந்து பந்தாடப்பட்டுக் கொண்டேதான் இருந்திருக்கிறார். சேத்தன் சர்மா விஷயத்தில் பிசிசிஐ என்ன விளக்கம் கொடுக்க போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.