Published:Updated:

சென்னையில் ஜேஸன் ராய்... பஞ்சாபில் டேவிட் மாலன்... ஆர்சிபியில் யார்?! #IPLAuctions2021

டேவிட் மாலன்

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி இந்தமுறை ஏலத்துக்கு 35 கோடியோடு களமிறங்குகிறது. 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 பேரை அவர்கள் அணிக்குள் எடுக்கவேண்டியிருக்கிறது.

Published:Updated:

சென்னையில் ஜேஸன் ராய்... பஞ்சாபில் டேவிட் மாலன்... ஆர்சிபியில் யார்?! #IPLAuctions2021

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி இந்தமுறை ஏலத்துக்கு 35 கோடியோடு களமிறங்குகிறது. 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 பேரை அவர்கள் அணிக்குள் எடுக்கவேண்டியிருக்கிறது.

டேவிட் மாலன்

ஐபிஎல் 2021 ஏலத்துக்கான நாள் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. நாளை மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை வாங்குவது என்பதை ஐபிஎல் அணிகள் கிட்டத்தட்ட இறுதிசெய்துவிட்டன.

53 கோடி ரூபாயோடு 9 வீரர்களை வாங்கயிருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. அதிகப் பணம் இருப்பதால் இவர்கள் பெரிய வெளிநாட்டு வீரர்களை வாங்க முடிவெடுத்திருக்கிறார்கள். டி20 ஸ்பெஷல் பேட்ஸ்மேனான டேவிட் மாலனை என்ன தொகைப் போனாலும் பஞ்சாப் எடுக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதேப்போல் ஷகிப் அல் ஹஸனையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வாங்கக்கூடும்.

ஷேன் வாட்ஸனின் இடத்தை இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேஸன் ராயைக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் நிரப்ப திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஜேஸன் ராய் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்துமுடிந்த பிக்பேஷ் லீகிலும் சிறப்பாகவே விளையாடினார்.

ஜேசன் ராய்
ஜேசன் ராய்
AP

ஒருவேளை ஜேஸன் ராய் அதிகத்தொகைக்குப்போனால் மொயின் அலியை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிபோடும் என எதிர்பார்க்கலாம்.

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி இந்தமுறை ஏலத்தில் 35 கோடியோடு களமிறங்குகிறது. 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 பேரை அவர்கள் அணிக்குள் எடுக்கவேண்டியிருக்கிறது. ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ், மொயின் அலி என முக்கியமான வெளிநாட்டு வீரர்களை அவர்கள் கழற்றிவிட்டுவிட்டார்கள். அதனால் இந்தமுறை அவர்களுக்குத் தேவை அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர். அந்த ஸ்லாட்டில் கிளென் மேக்ஸ்வெல்லை அந்த அணி ஏலத்தில் எடுக்க இறுதிசெய்துவைத்திருப்பதாகத் தெரிகிறது.

இந்திய வீரர்களுக்கான டிமாண்டும் இந்தமுறை அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நடந்துமுடிந்த சையது முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடிய பல இந்திய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் நல்ல தொகைக்கு வாங்கப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். கேரளாவின் முகமது அசாருதின் இந்திய வீரர்களில் அதிகத் தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.