Published:Updated:

மெக்கல்லம், வாட்சன், ஹெய்டன் யாருமே இல்லை... CSK ஆல்டைம் லெவனில் இடம்பிடிப்பது யார்?

Chennai Super Kings

அனைத்து அணிகளின் ஆல்டைம் லெவனையும் பார்த்துவிட்டோம், கடைசியாக இருப்பது சூப்பர் கிங்ஸ் மட்டும்தானே! இந்தியாவின் ஃபேவரைட் ஐ.பி.எல் அணியின் ஆல்டைம் லெவன் எப்படி இருக்கும்?

மெக்கல்லம், வாட்சன், ஹெய்டன் யாருமே இல்லை... CSK ஆல்டைம் லெவனில் இடம்பிடிப்பது யார்?

அனைத்து அணிகளின் ஆல்டைம் லெவனையும் பார்த்துவிட்டோம், கடைசியாக இருப்பது சூப்பர் கிங்ஸ் மட்டும்தானே! இந்தியாவின் ஃபேவரைட் ஐ.பி.எல் அணியின் ஆல்டைம் லெவன் எப்படி இருக்கும்?

Published:Updated:
Chennai Super Kings

மற்ற அணிகளில் ஒரு சில பொசிஷன்களுக்கு சரியான வீரர்களே அமையாத நிலமையெல்லாம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சென்னையைப் பொறுத்தவரை அப்படியான சூழ்நிலை இல்லை. அந்த அணியின் வீரர்களைப் பட்டியலிட்டால் அது நட்சத்திர அணிவகுப்பாகத்தான் இருக்கிறது. எந்த 4 வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்வது, அத்தனை 100 ஓப்பனர்களில் யாரைத் தேர்வு செய்வது, ஆல்ரவுண்டர்களில் சரியான சாய்ஸ் யார்… இதையெல்லாம் தேர்வு செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதனால் உங்களின் ஃபேவரிட் வீரர்கள் சிலர் மிஸ் ஆகலாம். `இவங்கள எப்படி நீங்க எடுக்காம விடலாம்’ என்று கேள்வி கேட்கலாம். நியாயம்தான். என்ன செய்வது…11 பேரைத்தானே எடுக்க முடியும்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில் தவிர்க்க முடியாத வீரர்களை எடுத்துவிடுவோம். தோனி… காரணம் சொல்லத் தேவையில்லை. மற்ற அணிகளெல்லாம் ஐகான் வீரரோடு இந்தத் தொடரை தொடங்கியபோது, ஐகான் இல்லாத சென்னைக்கு அடையாளமாக மாறினார் இந்த ஜார்கண்ட் ஜாம்பவான். அணியின் நம்பர் 1 சாய்ஸ் நிச்சயம் இவர்தேனே! இரண்டாவதாக, அணியின் இன்னொரு தூண் சுரேஷ் ரெய்னா. தோனிக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவர். அணியின் தளபதி. ஆரஞ்ச் கேப் வென்றதில்லை என்றாலும், ஒவ்வொரு சீஸனிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் மிஸ்டர் ஐ.பி.எல்! கடந்த சில சீஸன்களாக வேகம் குறைந்துவிட்டதென்றாலும், இன்னும் அவர் அசைக்க முடியாத வீரர்தான்!

Dwayne Bravo
Dwayne Bravo

பிராவோ… சூப்பர் கிங்ஸின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். 89 போட்டிகளில் 104 விக்கெட்டுகள், இரண்டு பர்ப்பிள் கேப்… எண்ணிலடங்காத மேட்ச் வின்னிங் ஸ்பெல்கள். ஒவ்வொரு முறை தோனிக்கு விக்கெட் தேவைப்படும்போதும் அதற்கான பதிலாக இருந்திருக்கிறார். அணிக்குத் தன் அனுபவத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல், ரசிகர்களை எப்போதும் கொண்டாட வைத்துக்கொண்டே இருந்திருக்கிறார் இந்த டிரினிடாட் வீரர். அதனால் சி.எஸ்.கே-வின் முதல் வெளிநாட்டு வீரர் இவர்தான்.

ஆல்பி மோர்கல், சென்னையின் மிகமுக்கிய வீரராக உருவெடுப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மிரட்டல் சிக்ஸர்கள், அட்டகாசமான பௌலிங் என 6 ஆண்டுகள் சூப்பர் கிங்ஸின் மிகமுக்கிய வீரராகத் திகழ்ந்தார் ஆல்பி. தன் கடைசி சீஸன் தவிர்த்து மற்ற 5 சீஸன்களிலும் குறைந்தபட்சம் 10 விக்கெட்டுகளாவது வீழ்த்தினார். இதையெல்லாம்கூட அனைவரும் மறந்துவிடலாம். ஆனால், கோலியை என்கவுன்டர் செய்த ஆல்பியின் அந்த ஒரு ஓவரை யாரால் மறக்க முடியும்?!

Albie Morkel
Albie Morkel

அணியின் பிரதான ஸ்பின்னராக அஷ்வின். பவர்பிளே, மிடில் ஓவர், டெத் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் அங்கு தன் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். விக்கெட் எடுப்பது மட்டுமல்லாமல் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசி பல போட்டிகளில் வெற்றி தேடித் தந்திருக்கிறார். சென்னைக்காக 90 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அஷ்வின் நிச்சயம் தவிர்க்க முடியாத ஒரு வீரர்.

பிட்ஸ் அண்ட் பீசஸாகச் சென்னைக்குப் பங்களித்துக்கொண்டே இருக்கும் சர் ஜடேஜாதான் அடுத்த வீரர். ஒவ்வொரு சீஸனிலும் 10+ விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். பேட்டிங்கிலும் தேவையான போதெல்லாம் முக்கியமான இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார். ஃபீல்டிங்... சொல்லவே தேவையில்லை. சென்னைக்கான தன் கடைசி 3 சீஸன்களில் மட்டும் 33 கேட்ச்கள் பிடித்து அசத்தியிருக்கிறார் ஜட்டு.

Mike Hussey, M.S.Dhoni
Mike Hussey, M.S.Dhoni

அடுத்த 5 இடங்களைத் தேர்வு செய்வதுதான் மிக மிகக் கடினம். ஓப்பனர்களாக யாரைத் தேர்வு செய்வது? ஹெய்டன், ஹஸ்ஸி, விஜய், மெக்கல்லம், டுவைன் ஸ்மித், வாட்சன் என ஒவ்வொரு ஓப்பனருமே வேற லெவல் ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். அவர்களில் இருவரை மட்டும் தேர்வு செய்வது சாதாரண விஷயம் இல்லையே! நம்பர்களை வைத்தும் இவர்களை ஒப்பிட்டு விட முடியாது. அந்த அளவுக்கு அணிக்கு முக்கியமான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதிக சீஸன்கள் சென்னைக்குப் பங்களித்த அடிப்படையில் விஜய், ஹஸ்ஸி இருவரையும் ஓப்பனர்களாகத் தேர்வு செய்வோம்.

எந்த வகையிலும் இருவரின் செயல்பாடுகளையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஹஸ்ஸி, அசத்தல் சதத்தோடு சென்னையின் ஐ.பி.எல் பயணத்தைத் தொடக்கி வைத்தார். விஜய் தன் பங்குக்குப் பல முக்கிய இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார். ஃபைனலில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார். இருவருமே தொடர்ந்து கன்சிஸ்டென்டாக ஆடியிருக்கிறார்கள்.

Doug Bollinger
Doug Bollinger

இன்னும் ஒரு பேட்டிங் ஸ்பாட், இரண்டு பௌலிங் ஸ்பாட்கள் இருக்கின்றன. அதில் ஒரு ஓவர்சீஸ் இடம் வேறு. ஒரு பௌலிங் ஸ்பாட் தீபக் சஹாருக்கு! ஆச்சர்யாமாகவோ அதிர்ச்சியாகவோ இருக்கலாம். ஆனால், சென்னையின் மிகமுக்கிய வீரராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார். கடந்த சீஸனில் 22 விக்கெட்டுகள்! பவர்பிளேவில் விக்கெட் எடுப்பது, சிக்கனமாகப் பந்துவீசுவது, ஒரு எண்டில் நெருக்கடி ஏற்படுத்துவது எனப் பந்துவீச்சின் ஒவ்வொரு கலையையும் அழகாகச் செய்துகொண்டிருக்கிறார். மன்ப்ரீத் கோனியில் தொடங்கி நெஹ்ரா வரை பல இந்திய வேகப்பந்துவீச்சாளர்களைக் கண்ட சென்னை அணியின் மிகச் சிறந்த வீரர் என நிச்சயம் சஹாரைச் சொல்லலாம்!

கடைசி இரண்டு இடங்களுக்கு நான்கு வீரர்கள். பத்ரிநாத், டுப்ளெஸ்ஸி, பொலிஞ்சர், மோஹித் ஷர்மா என நால்வரில் இருவர். பத்ரி - பொலிஞ்சர் காம்போ. அல்லது ஃபாஃப் - மோஹித். இரண்டு காம்போக்களில் ஒன்று. இந்த இடத்தில் பொலிஞ்சர் பற்றிப் பேச வேண்டும். பல நட்சத்திரங்கள் ஆடிய சென்னை அணியில் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இரண்டு சீஸன்களில் அப்படியொரு முத்திரை பதித்திருக்கிறார் அந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர். 2010, 2011 சீஸன்களில் சேப்பாக்கம் மைதானத்தில் அமர்ந்திருந்தவர்களுக்குத் தெரியும் அவர் ஏற்படுத்திய தாக்கம். விக்கெட்டுகள் எடுத்தது ஒருபுறம். ஆனால், ரசிகர்களின் ஆஸ்தான ஃபேவரிட்டாக மாறினார் பொலிஞ்சர்.

Chennai Super Kings
Chennai Super Kings

ஃபாஃப் தொடர்ந்து கன்சிஸ்டென்டாக ஆடிக்கொண்டிருந்தாலும், மிகப்பெரிய சீஸன்கள் இல்லை. பத்ரிக்கும் அதேதான் என்றாலும், லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி 350 ரன்கள் அடித்திருப்பதெல்லாம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். மோஹித், பர்ப்பிள் கேப் வென்றிருக்கிறார். நிச்சயம் சென்னையின் ஆல்டைம் லெவனில் இடம்பிடிக்கத் தகுதியானவர்தான். ஆனால், மோஹித் - ஃபாஃப் காம்போவைவிட பத்ரி - பொலிஞ்சர் காம்போவின் தாக்கம் ஜாஸ்தி. அதுமட்டுமல்லாமல் அவர்கள் இருவருமே ரசிகர்களின் ஆதரவு பெற்றவர்கள். அதனால், கடைசி இரண்டு இடங்களும் அவர்களுக்குத்தான்.