Published:Updated:

ஐபிஎல் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்; ரயில் நிலையத்தில் இனி போட்டிகளும் பார்க்கலாம்!

சென்னை மெட்ரோ மற்றும் சிஎஸ்கே அணியின் நிர்வாகத்தினர்

ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் இலவச மெட்ரோ பயணம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐபிஎல் போட்டிகள் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Published:Updated:

ஐபிஎல் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்; ரயில் நிலையத்தில் இனி போட்டிகளும் பார்க்கலாம்!

ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் இலவச மெட்ரோ பயணம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐபிஎல் போட்டிகள் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ மற்றும் சிஎஸ்கே அணியின் நிர்வாகத்தினர்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 31-ம் தேதி பெரும் கொண்டாட்டத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதில் ஒரு போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதுதவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 6 போட்டிகள் இங்கு நடைபெற இதுவரை திட்டமிடப்பட்டுள்ளன.

போட்டிகள் விவரம்
போட்டிகள் விவரம்

இதற்கான டிக்கெட் விலைகள் வழக்கத்தை விடவும் அதிகமென்ற விமர்சனங்கள் எழுந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகள் வாங்குவதற்குக் காத்திருக்கின்றனர். மேலும், சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளைக் கொண்டாடித் தீர்க்கக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ மற்றும் சிஎஸ்கே அணியின் நிர்வாகத்தினர் இணைந்து ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் இலவச மெட்ரோ பயணம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐபிஎல் போட்டிகள் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைக் காணவருபவர்கள் தங்களின் ஐபிஎல் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இலவசமாக அரசினர் தோட்டம் வரை மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். பின்னர், அங்கிருந்து மெட்ரோவின் பேருந்து சேவை மூலம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கிற்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, போட்டிகள் பார்த்துவிட்டு திரும்புபவர்களுக்கெனப் பிரத்யேகமாக மெட்ரோவின் சேவை வழக்கதை விடவும் 90 நிமிடங்களுக்குக் கூடிதலாக நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இநக்ச் சிறப்பு சேவைகள் சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாளில் மட்டும்தான். இலவச மெட்ரோ சேவைகள் ஐபிஎல் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பெற முடியும்.

அறிவிப்பு
அறிவிப்பு

இதுமட்டுமன்றி முதற்கட்டமாக நந்தனம், வடபழனி, விம்கோ நகர், திருமங்கலம், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் ராமசந்திரன் சென்ட்ரல் போன்ற மெட்ரோ நிலையங்களில் பெரிய LED திரை மூலம் ஏப்ரல் 3ம் தேதி முதல் நடைபெறும் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ஒளிபரப்பப்படவுள்ளது. இதற்கு ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.