Published:Updated:

`தோனி ஆட்டமிழந்தபோது அழுகையை அடக்க முடியவில்லை!’ - உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்த சஹால்

Dhoni, Chahal

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் தோனி ஆட்டமிழந்தபோது தம்மால் அழுகையை அடக்க முடியவில்லை என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஷ்வேந்திர சஹால் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

`தோனி ஆட்டமிழந்தபோது அழுகையை அடக்க முடியவில்லை!’ - உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்த சஹால்

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் தோனி ஆட்டமிழந்தபோது தம்மால் அழுகையை அடக்க முடியவில்லை என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஷ்வேந்திர சஹால் தெரிவித்திருக்கிறார்.

Dhoni, Chahal

இங்கிலாந்தில் சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பைத் தொடரின் லீக் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அசத்தியது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, நியூசிலாந்துக்கெதிரான அந்தப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Dhoni
Dhoni

நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி, ஒருகட்டத்தில் 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கைகோத்த தோனி - ஜடேஜா ஜோடி 7வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்து நம்பிக்கையளித்தது. ஆனால், 49வது ஓவரில் தோனி 50 ரன்கள் சேர்த்தநிலையில் ரன் அவுட் ஆகவே, இந்திய அணியின் நம்பிக்கை தகர்ந்தது. தோனி ஆட்டமிழந்த பின்னர் சஹால் களமிறங்கினார்.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி குறித்து சஹால் தற்போது பகிர்ந்துகொண்டார். இந்திய டுடே நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சஹால், ``எனது முதல் உலகக் கோப்பைத் தொடர் அது. தோனி அவுட்டானபோது, நான் பேட்டிங் செய்யக் களமிறங்கினேன். நான் எனது அழுகையை அடக்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். அந்தச் சூழலில் மிகவும் மன அழுத்தமாக உணர்ந்தேன்’’ என்றார்.

Chahal
Chahal

உலகக் கோப்பைத் தொடர் குறித்து பேசிய சஹால், ``ஒன்பது போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினோம். ஆனால், திடீரென தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டோம். மழை பொழிவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. தொடரில் முதன்முதலாக அந்தப் போட்டியின்போது, விரைவிலேயே மைதானத்தை விட்டு ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டும் என நாங்கள் விரும்பினோம்’’ என்றார்.

உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் ஒரே ஒருநாள் போட்டியில் மட்டுமே சஹால் விளையாடியிருக்கிறார். அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கெதிரான டி20 தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து பேசிய சஹால், ``உங்கள் பணி, கடினமாக உழைத்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே. அணித் தேர்வு குறித்து கவலைப்படுவது உங்கள் வேலை இல்லை. ஐபிஎல் தொடருக்குப் பின்னர் நானும், குல்தீப் யாதவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணியை மேலும் வலுப்படுத்தியது. அணியில் இடம்பெற கடுமையான போட்டி நிலவுவது நல்ல அறிகுறி. அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கிரிக்கெட்டை விட்டு விலகி நிற்க முடியாது.

Chahal
Chahal

ஐந்து முதல் 6 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனது லட்சியம் என்பது உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே. இன்றைய சூழலில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை டி20 தொடரை நாங்கள் வெல்லும்பட்சத்தில், தேவையில்லாத விமர்சனங்கள் எல்லாம் முடிவுக்கு வரும்’’ என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் சஹால்.