Published:Updated:

Happy Birthday Ashwin | பிட்சின் தன்மைக்கு அப்பாற்பட்ட வீரன், துணிச்சலும் நம்பிக்கையுமே இவன் ஆயுதம்!

Ravichandran Ashwin

'Don't be a minimum guy' என ஃபேமிலி மேன் சீரிஸில் ஒரு சீனியர் மேனேஜர் மனோஜ் பாஜ்பாய்க்குக் குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பாரே... அதே மாதிரியான ஒரு கேரக்டர் அஷ்வினுக்குள்ளும் உண்டு.

Happy Birthday Ashwin | பிட்சின் தன்மைக்கு அப்பாற்பட்ட வீரன், துணிச்சலும் நம்பிக்கையுமே இவன் ஆயுதம்!

'Don't be a minimum guy' என ஃபேமிலி மேன் சீரிஸில் ஒரு சீனியர் மேனேஜர் மனோஜ் பாஜ்பாய்க்குக் குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பாரே... அதே மாதிரியான ஒரு கேரக்டர் அஷ்வினுக்குள்ளும் உண்டு.

Published:Updated:
Ravichandran Ashwin

எந்த ஒரு மனிதருக்கும் மனபலம் என்பது ரொம்ப முக்கியமானது. குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய மனோதிடமும் துணிச்சலும் அதிகம் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் கிரிக்கெட் வீரர் அஷ்வினை மிகச்சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

சமகால கிரிக்கெட்டர்கள் யாருடன் ஒப்பிட்டாலும் அஷ்வினின் மனோதிடமும் துணிச்சலும் அவர்களைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும்.
Ashwin
Ashwin
BCCI

கரியரின் ஆரம்பக்கட்டத்தில், சூறாவளியாய் மிரட்டும் கெய்லுக்கு எதிராக ஐ.பி.எல் போட்டிகளில் இளம் வீரராக முதல் ஓவரை தைரியமாக வீசியதிலிருந்து அவரின் மனோதிடத்திற்கான உதாரணங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் கடைசி ஓவரை வீச வந்தது இன்னொரு உதாரணம். சில மாதங்களுக்கு முன்பு அஷ்வினின் யூடியூப் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் எந்த வீரருக்கு பந்துவீசும் போது பயப்படுவீர்கள்?’ என கேள்விக் கேட்டிருப்பார். அதற்கு அஷ்வின் ‘நான் எந்த வீரருக்கும் பயப்பட்டதில்லை. தில்லுக்கு துட்டாக இறங்கி வீசி விடுவேன்’ எனக் கூறியிருப்பார். இதுதான் அஷ்வின். அவரை எந்த வீரரும் எந்தச் சூழ்நிலையும் பயமுறுத்தாது. எதுவாக இருந்தாலும் சமாளித்துவிடுவோம் என்கிற பெரும் நம்பிக்கை எப்போதும் அவரிடம் இருக்கும்.

2010 ஐ.பி.எல் தொடரின்போது சி.எஸ்.கே தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தது. அரையிறுதிக்கே தகுதிப்பெறாது என்கிற சூழல்தான் இருந்தது. அச்சமயத்தில் பத்ரிநாத்திடம் ‘எனக்கென்னவோ இந்த தடவை நாம ஃபைனல்ஸ்க்கு போயி கப் அடிப்போம்னு தோணுது’ என அஷ்வின் கூறியிருக்கிறார். அந்தச் சமயத்தில் அது மிகப்பெரிய காமெடியாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால், அஷ்வின் சொன்னது போலவே அந்த ஆண்டு கோப்பையை வென்றது சூப்பர் கிங்ஸ்.

அந்த சீசன் சென்னைக்காக முரளிதரனுக்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்து அஷ்வினும் அசத்தியிருந்தார்.

`Don't be a minimum guy' என ஃபேமிலி மேன் சீரிஸில் ஒரு சீனியர் மேனேஜர் மனோஜ் பாஜ்பாய்க்குக் குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பாரே... அதே மாதிரியான ஒரு கேரக்டர் அஷ்வினுக்குள்ளும் உண்டு.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறக்கவே முடியாத சிட்னி டெஸ்ட்டில் தடுமாறிக்கொண்டிந்த இந்திய அணி ஒன்றரை செஷனுக்கு நின்று தடுப்பாட்டம் ஆடினால் மட்டுமே போட்டியை ட்ரா செய்ய முடியும் என்ற சூழல் நிலவியது. அஷ்வின் பயங்கரமான முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அன்றைய நாள் காலையில் பெட்டில் இருந்து எழுந்தரிக்கவே முடியாமல் மனைவியின் துணையோடு கை தாங்கலாகவே எழுந்து போராடி மைதானத்திற்கு வந்திருக்கிறார். மைதானத்திலும் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு இருக்கையில் அமர்ந்தவர் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தார். அவரால் முடியவில்லை. ஆனால், இந்தியா தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அஷ்வின் இறங்கியே ஆக வேண்டும். ஸ்டார்க், ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் என சமகாலத்தின் ஆபத்தான வேகப்பந்து வீச்சாளர்கள் மூவரும் வெற்றிக்கான வெறியோடு காத்திருந்தனர். எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்த போதும், அணிக்காக இதை செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தார் அஷ்வின்.

முழுமையாக பேட்டிங் ஆடி ‘பெரிய ஸ்கோரை அடித்துவிட்டுதான் வருவேன்’ என ட்ரெஸ்ஸிங் ரூமில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அந்த எத்தனிப்பு... அந்த பிரயத்தனம் அதுதான் அஷ்வின். முறுக்கி கொண்டிருந்த ஆஸ்திரேலிய வேகங்கள், வருத்திக் கொண்டிருந்த உடல் வலி அது எதுவுமே அஷ்வினை பயமுறுத்தவில்லை. அதன்பிறகு நடந்தது வரலாறு!

எப்பேற்பட்ட சிக்கலான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, வெற்றிக்கான போராட்டத்தில் எந்த நொடியிலும் எதிராளியின் விஸ்வரூபத்தை பார்த்து பதற்றமடைந்துவிடக்கூடாது. முழுமையாக நம்முடைய திறனில் மட்டுமே நம்பிக்கை வைத்தால் போதும் என்பதற்கு இந்தச் சம்பவங்கள் சிறந்த உதாரணங்கள். 

தோனி கேப்டன் பதவியிலிருந்து இறங்கிய பிறகு சில ஆண்டுகளாகவே அஷ்வினுக்குத் தேசிய கிரிக்கெட்டில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. வெளிநாட்டுப் போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். ஜுனியரான குல்தீப் யாதவ் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஒயிட் பால் கிரிக்கெட்டில் மொத்தமாக ஓரங்கட்டப்பட்டிருந்தார். ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியில் கேப்டனாகச் செயல்பட்டிருந்தார். ஒருகட்டத்தில் கேப்டனையே பஞ்சாப் அணி வெளியேற்றியது. இப்படி ஒரு கட்டத்தில் அஷ்வினின் கிரிக்கெட் கரியரில் தேக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், அத்தனையும் தாண்டி முழு நம்பிக்கையோடு கிரிக்கெட்டைத் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்.

'அஷ்வின் இனிமேல் அவ்வளவுதான்' என்று சொன்னவர்களுக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்கினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னுடைய திறமை மற்றும் மனோதிடத்தின் உச்சத்தை வெளிக்காட்டினார். ஸ்மித் உட்பட ஆஸ்திரேலியாவின் முக்கிய பேட்ஸ்மேன்களைக் கட்டம் கட்டி வெளியேற்றினார். சிட்னியில் விஹாரியுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடினார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் செய்ய முடியாததை அஷ்வின் செய்து காட்ட எத்தனித்திருந்தார். இங்கிலாந்தின் பிட்ச், வானிலை, மழை மேகங்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட வீரராகத் தன்னை நிறுவினார்.

Ravichandran Ashwin
Ravichandran Ashwin

'அணியில் ஒரு ஸ்பின்னருக்குதான் இடம் எனில் முதல் ஆப்சனாக நான்தான் இருக்க வேண்டும்’ என ஒரு பெரிய ஸ்டேட்மென்ட்டை அணி நிர்வாகத்திற்குச் செய்தியாக்கியிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்து இனிமேல் ஓய்வு பெறும் வரை அவரின் இடத்தில் கை வைக்க முடியாது என்கிற நிலைக்கு உயர்ந்திருந்தார். மீண்டும் ஒரு பின்னடைவு. இங்கிலாந்து தொடரில் நல்ல ஃபார்மிலிருந்த போதும் நான்கு போட்டிகளிலும் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். அவர் சோர்ந்துவிடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது சீறிப்பாய வேண்டும் என்கிற தீர்க்கத்தோடு சாந்தமாக அமர்ந்திருந்தார்.

இந்த நான்கு போட்டிகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வினின் பெயரும் இடம்பெற்றிருந்தது. யாரும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒயிட்பால் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார். அதுவும் நேரடியாக உலகக்கோப்பையில்! 2021 மட்டுமல்ல. 2022 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதிலும் அஷ்வினின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஒயிட் பால் கிரிக்கெட்டில் அஷ்வினுக்கெல்லாம் இனி இடமில்லை எனும் நிலையிலிருந்து கம்பேக் கொடுத்து தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்திருக்கிறார். இதுவே ஒரு பெரும் சாதனைதான். ஆனால், அஷ்வின் இதோடு ஓய்ந்துவிடமாட்டார். இன்னும் இன்னும் போராடுவார். இன்னும் இன்னும் உயரங்களை எட்ட முற்படுவார்.

Ashwin
Ashwin
BCCI
அஷ்வினுக்குள் ஊறியிருக்கும் துணிச்சலும், பெரும் நம்பிக்கையுமே அவரின் பலமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய பாடமும் இதுவே! Every tunnel has light at the end of it! Happy Birthday Ashwin!