Published:Updated:

17 Years of MS Dhoni | இது ஒரு ஜீரோவில் தொடங்கிய சகாப்தம்!

MS Dhoni
News
MS Dhoni

சர்வதேச அரங்கில் மகேந்திர சிங் தோனி அறிமுகமாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

டிசம்பர் 23, 2004. இந்திய தேசத்தின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்ட்டிலிருந்து எண்ணிலடங்கா கனவுகளுடன் இந்திய கிரிக்கெட் ஜெர்சியினை முதன்முறையாக நுகர்ந்து பார்க்கிறான் அந்த இளைஞன். முட்களும் தடைகளும் நிறைந்த இந்தப் பயணத்தில்தான் எத்தனை வலிகள், எத்தனை வேதனைகள். இவை அனைத்தையும் மீறி கண்களில் மிளிர்கிறது இந்திய அணிக்காகக் களமிறங்கப்போகும் பெருமிதம்!


ஆனால் தன் கனவுகள் அனைத்தையும் சுக்கு நூறாக்குவது போல முதல் சர்வதேச இன்னிங்சிஸிலேயே ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்புகிறான் அந்த இளைஞன். அதுவும் ரன் அவுட்டால்! இப்போது டைம் மெஷின் துணையுடன் கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபார்வார்ட் செய்து கொள்வோம். 2019-ம் ஆண்டு. இதேபோல மற்றுமொரு ரன்-அவுட். ஆனால் இம்முறையோ அவ்வீரனின் ஒற்றை விக்கெட்டோடு சேர்த்து சுமார் 130 கோடி கனவுகளும் சேர்த்து சுக்கு நூறாகி போகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அந்த போர் வீரனை அறிமுகப்படுத்த இத்தனை விளக்கங்கள் தேவை இல்லை. சரி, இன்று தான் தோனியின் பிறந்த நாள் இல்லையே, பிறகு இதென்ன பதிவு என்று யோசிக்கிறீர்களா? சர்வதேச அரங்கில் மகேந்திர சிங் தோனி அறிமுகமாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
MS Dhoni
MS Dhoni

தோனியின் பேட்டிங் திறன், கீப்பிங் திறன், அதற்கு வலிமை சேர்க்குமாறு அவர் இத்தனை ஆண்டுகள் சேர்த்து வைத்த ரன்கள் மற்றும் எண்கள் பற்றி ஆயிரமாயிரம் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதையெல்லாம் தாண்டி தோனி ஏன் முக்கியமானவர்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மும்பை, பெங்களூரு, டெல்லி என பெருநகரங்களில் இருந்தே மட்டுமே பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்குள் காலங்காலமாக படையெடுப்பது வழக்கம். இந்நிலையில், ராஞ்சியில் இருந்து காளானாய் முளைத்து இன்று ஆலமரமாய் விரிந்துள்ள தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமானவர். முடிவை பற்றி துளியும் யோசிக்காமல் அப்போதைய செயலில் மட்டும் ஒருவரால் அக்கறைக் காட்ட முடியுமா? முடியும் என்கிறார் தோனி. இது பற்றி முழுமையாக அறிய மேலுள்ள வீடியோவைக் காணுங்கள்.