Published:Updated:

`இதோடு முடிந்துவிட்டதாக அஞ்சினேன்; யாரிடமும் சொல்ல முடியவில்லை!'- மன அழுத்தம் குறித்த கோலியின் பிளாஷ்பேக்

``மன அழுத்தம் குறித்து பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற கவலையான சூழ்நிலையில் மேக்ஸ்வெல் வெளிப்படையாக பேசியிருப்பது வரவேற்கத்தக்கது..." - விராட் கோலி

கோலி
கோலி

தனது அதிரடி ஆட்டத்துக்குப் பெயர்போனவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல். இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடி வந்தவர், திடீரென தொடரிலிருந்து விலகினார். மன அழுத்தம் பிரச்னை காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சில காலம் அவர் விடுப்பு எடுத்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேக்ஸ்வெலின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Maxwell
Maxwell

மன உளைச்சல் சம்பந்தமான பிரச்னைகளைப் பற்றி வெளிப்படையாக பேசி, கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு அறிவித்திருக்கும் மேக்ஸ்வெலுக்கு விராட் கோலி தனது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

`நட்ராஜ் ஷாட்' கபில்தேவுக்கு அன்று நாம் செய்தது துரோகம்... ஏனென்றால்?!  #KapilDev #NatrajShot

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, நாளை இந்தூரில் நடக்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதையடுத்து போட்டி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் கோலி, ``2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்தபோது மன அழுத்தம் பிரச்னையால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது இருந்த மனநிலையில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதாக அஞ்சினேன். என் பிரச்னைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடியவில்லை, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. 

virat kohli
virat kohli

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மன அழுத்தம் குறித்து பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற கவலையான சூழ்நிலையில் மேக்ஸ்வெல் வெளிப்படையாக பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.

மன அழுத்தம் பிரச்னைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை நெகட்டிவ்வாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை மதிக்க வேண்டும். பிரச்னைகளுக்கான தீர்வை எதிர்நோக்கி செயல்பட வேண்டியது அவசியம்" என்றார்.

பவர்ப்ளே பெளலர் தீபக் சஹாரை டெத் பெளலராக மாற்றியது யார்... எப்படி? #DeepakChahar