Published:Updated:

"வயதில் சிறியவர்கள், ஆனால் அனுபவத்தில் அல்ல!"- தற்போதைய இந்திய அணி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியின் இளம் வீரர்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

"வயதில் சிறியவர்கள், ஆனால் அனுபவத்தில் அல்ல!"- தற்போதைய இந்திய அணி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியின் இளம் வீரர்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

Published:Updated:
ஹர்திக் பாண்டியா

டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

அதன்படி நேற்று வெலிங்டனில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற இருந்த நிலையில் மழையின் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. இந்த டி20 தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை கேப்டனாக ஹர்திக் பாண்டியா வழிநடத்திச் செல்கிறார்.  

இந்திய அணி
இந்திய அணி

இந்நிலையில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ஹர்திக்  பாண்டியா இளம் வீரர்கள் குறித்துப் பேசியிருக்கிறார். "இவர்கள் வயதில் சிறியவர்களாக இருக்கலாம். ஆனால் அனுபவத்தில்  அல்ல. இவர்கள் அனைவரும் நிறைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். சிலர் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். 

இந்தச் சுற்றுப்பயணம் புதிய தோழர்கள், அதிக தெளிவு, மற்றும் திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு. இதில் தங்களை நிரூபிப்பதன் மூலம் இளம் வீரர்கள் நிரந்தர வாய்ப்பைப் பெறலாம். இந்திய வீரர்கள் அனைவரும் இந்தத் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளனர்" என்றவர், டி20 உலகக்கோப்பை தோல்வி குறித்துப் பேசுகையில், "அது முடிந்துவிட்டது. நான் அதைக் கடந்து வந்துவிட்டேன். ஏமாற்றம் இருக்கும், ஆனால் எங்களால் திரும்பிச் சென்று சில விஷயங்களை மாற்ற முடியாது. நாங்கள் இப்போது இந்தத் தொடரை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.