Published:Updated:

கறுப்பு - வெள்ளை அரசியலா, ஜென்ட்டில்மேன் ஆட்டமா... இங்கிலாந்தை வீழ்த்துமா கரீபியன்?! #ENGvsWI

#ENGvsWI
#ENGvsWI ( twitter.com/ICC )

வெஸ்ட் இண்டீஸிடம் எல்லாமே இருக்கிறது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக ஸ்டோக்ஸ் காட்டிய அந்த கமிட்மென்ட்டும் வெறியும் விண்டீஸ்களிடமும் வெளிப்படுமாயின் இந்தப் போட்டி நிச்சயம் அனல் பறக்கும். #ENGvsWI

க்ளைமாக்ஸை எட்டியிருக்கிறது இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர். 1-1 என சமநிலையில் இருக்கும் டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் மூன்றாவது போட்டி மான்செஸ்டரில் இப்போது தொடங்கியிருக்கிறது. டாஸ் வென்ற விண்டீஸ் பவுலிங்கைத் தேர்வு செய்திருக்கிறது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தி தொடரை கைப்பற்ற கரீபியன்களுக்கு இது ஓர் அற்புதமான வாய்ப்பு. முதல் போட்டியின் மோசமான தோல்விக்குப் பிறகு அடுத்த போட்டியில் இங்கிலாந்தின் கம்பீரமான எழுச்சியைப் பார்க்கும்போது இந்தப் போட்டி கரீபியன்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதாகத் தெரியவில்லை.

#ENGvsWI
#ENGvsWI
twitter.com/ICC

இரண்டாவது போட்டி நடைபெற்ற அதே ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில்தான் இந்தப் போட்டியும் நடைபெறுகிறது. அந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் பிட்ச் பெரிதாக பௌலிங்குக்கு ஒத்துவரவில்லை. இருந்தும் அதைச் சமாளிக்கும் வகையில் சரியான திட்டமிடலுடன் களமிறங்கி கலக்கியது இங்கிலாந்தின் பௌலிங் படை. வெஸ்ட் இண்டீஸ், அணியாக ஒரு பிளானிங் இல்லாமல் தனித்தனியாகத் தங்கள் திறனுக்கேற்றவாறு செயல்பட்டதுதான் சொதப்பலாக முடிந்தது.

பேட்டிங்கிலும் இன்னும் கொஞ்சம் பொறுமையோடு விளையாட ஆரம்பித்தால் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அடித்ததைப் போன்ற ஒரு பெரிய ஸ்கோரை விண்டீஸ்களாலும் அடிக்க முடியும். புரூக்ஸ், பிராத்வெய்ட், பிளாக்வுட், சேஸ் இந்த நால்வரில் குறைந்தபட்சம் இருவராது அரைசதத்தைத் தாண்டி ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடியே ஆக வேண்டும். அதேபோல இந்தத் தொடரில் இன்னும் சோபிக்காமல் இருக்கும் கேம்ப்பெல், ஹோப் இருவரும் இந்தப் போட்டியில் க்ளிக்கானால் இங்கிலாந்து பேட்டிங்குக்கு நிச்சயம் சவால் அளிக்கலாம். அங்கேயும் டாம் சிப்லே, ஸ்டோக்ஸ் இருவரின் நிலையான ஆட்டம்தான் அணியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. ஜோஸ் பட்லர் எப்போதும்போல இந்தத் தொடரிலும் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கிறார். ரெட்பால் கிரிக்கெட்டுக்கு அடாப்ட் ஆக முடியாமல் சிக்கித்தவிக்கும் பட்லரை இந்தப் போட்டியிலும் பெரிதாக நம்ப முடியாது. அதனால் ஸ்டோக்ஸ், சிப்லே இருவருடன் சேர்ந்து கேப்டன் ரூட்டும் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடியே ஆக வேண்டும்.

West Indies Team
West Indies Team
Windies Cricket

பேட்டிங் லைனைவிட பௌலிங்கில் எந்த காம்பினேஷனில் செல்வது என்பதில்தான் இங்கிலாந்துக்கு பெரிய குழப்பம் இருந்திருக்கும். ஸ்டோக்ஸ்க்கு வேறு சிறிய அளவில் காயம் இருப்பதால் அவர் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசுவது கொஞ்சம் சந்தேகம்தான். ஆறு வேகப்பந்து வீச்சாளர்களில் ஆண்டர்சன், ஆர்ச்சர், பிராட், கிறிஸ் வோக்ஸ் என நால்வரை பிளேயிங் லெவனில் எடுத்திருக்கிறார்கள். இந்த லைன் அப் விண்டீஸ்களுக்கு தலைவலி கொடுக்கலாம். நடந்து முடிந்த இரண்டு போட்டியிலுமே வெஸ்ட் இண்டீஸ் சேஸ்தான் செய்துள்ளது. இந்தப் போட்டியிலும் அதையே செய்யவிருக்கிறது. ஏனென்றால், முதலில் பேட்டிங் ஆடினால் விண்டீஸ் நியூ பாலில் ஆண்டர்சன்-பிராட் இணையைச் சந்திக்க வேண்டியிருக்கும். இது அவர்களின் டாப் ஆர்டரை குலைக்கும் வாய்ப்பு அதிகம். அதேபோல், பந்து கொஞ்சம் தேய்ந்த பிறகு ஆர்ச்சருடன் இன்னொரு பவுலர் இணைந்து ஒரு நல்ல ப்ளானிங்கோடு வந்து இரண்டாவது போட்டியை போன்றே விண்டீஸ்களை ஆல் அவுட் ஆக்கிவிடலாம்.

வெஸ்ட் இண்டீஸிடம் எல்லாமே இருக்கிறது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக ஸ்டோக்ஸ் காட்டிய அந்த கமிட்மென்ட்டும் வெறியும் விண்டீஸ்களிடமும் வெளிப்படுமாயின் இந்தப் போட்டி நிச்சயம் அனல் பறக்கும். முதல் இரண்டு போட்டிகளுமே மழை காரணமாகவோ வெளிச்சம் காரணமாகவோ வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஐந்துநாளும் எல்லா செஷனும் மழையின் குறுக்கீடில்லாமல் நடக்குமாயின் கடுமையானப் போட்டி காத்திருக்கிறது.

Jason Holder, Joe Root
Jason Holder, Joe Root
Windies Cricket
மேட்ச்சை மாற்றிய அந்த மூன்று ஓவர்கள்... ஸ்டோக்ஸிடம் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்! #ENGvsWI #RaiseTheBat

உலகளவில் எப்போதெல்லாம் ஒடுக்குமுறைகள் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் கிரிக்கெட் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறது விண்டீஸ். ஒடுக்குமுறை அரசியலுக்கு எதிராக இந்த முறையும் பதிலடி கொடுப்பார்களா கரீபியர்கள்!? இல்லை, எப்போதும் நாங்கள்தான் எனப் பல்லாண்டு பெருமையை மீண்டும் தக்க வைத்துக்கொள்ளுமா இங்கிலாந்து!? மொத்தத்தில் ரசிகர்கள் ஒரு தரமான கிரிக்கெட் போரை காண்பதற்குத் தயார்!

அடுத்த கட்டுரைக்கு