இந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்கள் இதுவரை ஆன்லைன் மற்றும் நேரடியான முறையில் கவுன்ட்டர்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதுவரை நடந்த போட்டிகளில் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே தேர்வாகியுள்ளது. இந்நிலையில் பிளேஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனையாகவுள்ளது. அந்த வகையில், குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் மே 23 மற்றும் மே 24 தேதிகளில் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இப்போட்டிகளுக்கான டிக்கெட்களைப் பெற கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆன்லைன் முறையில் இன்று (மே 18ம் தேதி) இந்திய நேரப்படி மதியம் 12:00 மணிக்கு PayTM மற்றும் PayTM இன்சைடரில் விற்பனையாகவுள்ளது. இதில், RuPay கார்டு வைத்திருப்பவர்களுக்கு டிக்கெட்டுகளை புக் செய்வதற்கான முன்னுரிமை தரப்படுவதாகக் கூறப்படுகிறது.