Published:Updated:

SA Vs Ind: `பும்ரானா ஃபயரு' பூம்பூம் சம்பவமும்; கீகன் பீட்டர்சனின் போராட்டமும்!

பும்ரா
News
பும்ரா

முதல் ஓவரிலேயே தனது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கைத் தொடங்கிய பும்ரா தொடர்ந்து டைட்டாகவே வீசி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் சொதப்பியிருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு முன்னிலையைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர்.

குறிப்பாக, பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். தென்னாப்பிரிக்கா சார்பில் கீகன் பீட்டர்சன் மட்டும் போராடி ஒரு அரைசதத்தை அடித்திருந்தார்.

முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. கடைசி சில ஓவர்களில் பேட்டிங்கை தொடங்கியிருந்த தென்னாப்பிரிக்க அணி 17-1 என முதல் நாளை முடித்திருந்தது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மற்றும் கடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றியை தட்டிப்பறித்த டீன் எல்கரின் விக்கெட்டை பும்ரா சீக்கிரமே வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை பும்ராவே வீசியிருந்தார். அந்த ஓவரிலேயே விக்கெட்டையும் வீழ்த்தி இரண்டாம் நாளை சிறப்பாக தொடங்கி வைத்தார். ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன் டெலிவரிக்களாக பும்ரா வீசி வந்தார். முதல் பந்தை டிஃபண்ட் செய்ய நினைத்த மார்க்ரம் எட்ஜ் ஆகியிருப்பார். ஆனால், அது ஸ்லிப்பிற்கு கேரி ஆகியிருக்காது. இதனால் அடுத்த பந்தை லீவ் செய்ய முயன்ற மார்க்ரம் போல்டை பறிகொடுத்து வெளியேறியிருப்பார். பந்தை லீவ் செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவரின் மனதில் இருந்ததே தவிர லெந்தையும் பவுன்ஸையும் கணிக்கத் தவறி பெவிலியனுக்கு நடையைக் கட்டியிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Bumrah
Bumrah
ICC
ஓப்பனர்கள் இருவரையுமே வீழ்த்தி இந்திய அணிக்கு பும்ரா பெரும் நம்பிக்கையைக் கொடுத்தார்.

நம்பர் 4 இல் கீகன் பீட்டர்சன் களமிறங்கினார். இந்தத் தொடரில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் வீரர்களில் கீகன் பீட்டர்சனும் ஒருவர். இவரின் டிஃபன்ஸ் டெக்னிக் பல ஜாம்பவான் வீரர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. இரண்டாம் நாளான நேற்றும் தனது திடகாத்திரமான டிஃபன்ஸை ஆதாரமாகக் கொண்டு மிகச்சிறப்பான ஒரு அரைசதத்தை அடித்திருந்தார். விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தபோது முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு விராட் கோலி ஆடியதை போல ஒரு இன்னிங்ஸைத் தென்னாப்பிரிக்க அணிக்கு கீகன் பீட்டர்சன் ஆடியிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கீகன் பீட்டர்சன்
கீகன் பீட்டர்சன்
Cricket South Africa
தேவையில்லாமல் பேட்டை விடாமல் பந்துகளை லீவ் செய்து நின்று நிதானமாக ஆடுவதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படை. ஆனால், கீகன் பீட்டர்சனை பொறுத்தவரைக்கும் பெரும்பாலான பந்துகளை ஆடியிருந்தார். பந்துகளை லீவ் செய்ய வேண்டும் என்பது அவரின் பிரதான நோக்கமாகவே இருந்திருக்கவில்லை.

டாப் ஆர்டரில் இறங்கி பும்ரா, ஷமி, சிராஜ் மாதிரியான பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் அத்தனை பந்துகளும் தன்னுடைய பேட்டில் பட வேண்டும் என நினைப்பதே ஒரு அரிதான விஷயம்தான். தன்னுடைய டிஃபன்ஸின்மீது பெரும் நம்பிக்கைக் கொண்ட வீரர்களாலேயே இப்படி சிந்திக்க முடியும். கீகன் பீட்டர்சனுக்குத் தன்னுடைய டிஃபன்ஸ்மீது மலையளவு நம்பிக்கை இருக்கிறது. க்ரீஸிற்குள் வந்து 44-வது பந்திலேயே பீட்டர்சன் தனது முதல் பவுண்டரியை அடித்திருந்தார். அதற்கு முந்தைய 43 பந்துகளில் வெறும் 6 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அந்த 43 பந்துகளில் பெரிதாக ஷாட் எதுவுமே ஆட முயற்சிக்கவில்லை. முழுக்க முழுக்க டிஃபன்ஸ் மட்டுமே செய்திருந்தார். கால்களில் பெரிதாக டிரிகர் மூவ்மென்ட்ட எதுவும் இல்லாமல் பேட்டையும் தரையில் போட்டு அடித்துத் துவைக்காமல் மெதுவான அசைவுகளோடு திடாகத்திரமாக அவர் டிஃபன்ஸ் ஆடும் முறையைப் பார்க்கும்போது, இரையை வேட்டையாடும் மிருகங்களின் அசைவுக்கு ஒத்ததாகவே அவை தெரிகிறது.

பேட் மற்றும் கால்கள் கொஞ்சம் நிதானமாக நகர கண்கள் மட்டும் மானை வேட்டையாடும் புலிக்கு ஒப்பாக அத்தனை கூர்மையாக பந்தை கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த டிஃபன்ஸ்தான் அவரின் தனித்துவமான விஷயமாக ரசிக்கப்படுகிறது.
கீகன் பீட்டர்சன்
கீகன் பீட்டர்சன்
ICC

நைட் வாட்ச்மேனான மகாராஜா கொஞ்சம் பவுண்டரிகள் அடிக்க ரிஸ்க் எடுத்த சமயத்தில் டிஃபன்ஸிவ்வாக சென்ற கீகன், வாண்-டர்-டஸனின் வருகைக்குப் பிறகு அட்டாக்கிங்காக ஆட ஆரம்பித்தார். Front Foot இல் டிஃபன்ஸ் ஆடி ஈர்த்தவர், Back Foot இல் ஆஃப் சைடில் ஷாட்களை ஆடி வசீகரித்தார். அஶ்வின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப்பெல்லாம் அடித்து அட்டகாசப்படுத்தினார்.தென்னாப்பிரிக்க அணி ஓரளவுக்கு ரன்கள் சேர்த்ததற்கு பீட்டர்சனே மிக முக்கிய காரணமாக இருந்தார். அந்த பீட்டர்சனையே வீழ்த்தி இரண்டாம் நாளை தனதாக்கிக் கொண்டார் பூம்பூம் பும்ரா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Bumrah
Bumrah
Hotstar

முதல் ஓவரிலேயே தனது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கைத் தொடங்கிய பும்ரா தொடர்ந்து டைட்டாகவே வீசி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தார். ஓவர் தி விக்கெட்டில் வந்து மற்ற பௌலர்களை விட பந்தை ஒயிடாக ரிலீஸ் செய்யும் பும்ரா ஆங்கிள் இன் டெலிவரிக்களாக தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் இன்னொரு முனையில் ஷமி பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே திருப்பிக் கொண்டிருந்தார். பும்ராவின் லைன் & லெந்த் மற்றும் பிட்ச்சில் சீமை வலுவாக மோத வைத்து அவர் எடுத்த பவுன்ஸ் ஆகியவை பேட்ஸ்மேன்களை கடுமையாக திணற வைத்தது. Front Foot இல் சிறப்பாக டிஃபன்ஸ் ஆடிக்கொண்டிருந்த பீட்டர்சனை பும்ராவின் சூட்சுமத்தைக் கணிக்க முடியாமல் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். பீட்டர்சன் 72 ரன்களை எடுத்திருந்தார்.

Bumrah & Kohli
Bumrah & Kohli
ICC
தன்னுடன் காரசாரமாக வார்த்தைகளை பரிமாறிக் கொண்டிருந்த யான்சனின் விக்கெட்டிற்கு கொஞ்சம் கூடுதல் எனர்ஜியை வெளிக்காட்டி பும்ரா முனைந்தார். அதற்கான பலனுமே அவருக்கு கிடைத்தது. ஸ்டம்புகள் தெறிக்க பும்ராவிடமே தனது விக்கெட்டை யான்சன் பறிகொடுத்தார்.

கடைசியாக இங்கிடியின் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தி 5 விக்கெட் ஹாலை எடுத்தார். ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோரை தொடர்ந்து இந்த தொடரில் இந்திய பௌலர் ஒருவர் எடுத்த மூன்றாவது 5 விக்கெட் ஹால் இது.

பும்ரா மட்டுமில்லை ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருமே நன்றாக வீசியிருந்தனர். முதலிலிருந்தே சீராக ஒரு லைன் & லெந்தைப் பிடித்து வீசிக்கொண்டிருந்த ஷமி ஒரே ஓவரில் பவுமா மற்றும் வெரேனேவின் விக்கெட்டை வீழ்த்தி போட்டியை இந்தியா பக்கமாக திருப்பினார். நைட் வாட்ச்மேனாக வந்து ரன்கள் சேர்த்து அழுத்தம் கொடுத்த மகராஜ் மற்றும் வாண்-டர்-டஸனின் விக்கெட்டை உமேஷ் யாதவ் வீழ்த்தியிருந்தார். தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்திய அணி 13 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

நேற்றே இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஓப்பனர்களான கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவருமே சீக்கிரமாக அவுட் ஆகி விட புஜாராவும் கோலியும் க்ரீஸில் இருக்கின்றனர். இந்திய அணி 57-2 என்ற நிலையில் இருக்கிறது. 70 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கின்றனர்.

தொடரை வெல்ல வேண்டுமெனில் ஒரு பெரிய ஸ்கோரை இந்தியா டார்கெட்டாக செட் செய்ய வேண்டும். முதல் இன்னிங்ஸைப் போன்று 200+ ஸ்கோரிலேயே திருப்திப்பட்டுக் கொண்டால் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கடினமாகும். என்ன செய்யப்போகிறார்கள்?