Published:Updated:

வெளியேறிய சிட்னி... சேலஞ்சர் சுற்றுக்கு தகுதிபெற்ற பிரிஸ்பேன்... இறுதிக் கட்டத்தில் பிக்பேஷ் லீக்!

பிரிஸ்பேன், #BBL
பிரிஸ்பேன், #BBL

மோர்னே மோர்கலின் ஓவரில் இவர் அடித்த ஒரு சிக்சர் 101 மீட்டருக்கு மேல் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. கடைசி இரண்டு ஓவர்களில் பவர் சர்ஜையும் எடுத்து 21 ரன்கள் சேர்த்தார் பென் கட்டிங்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் சுற்றுகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் நேற்று பிக்பேஷ் லீகில் நாக் அவுட் போட்டி நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்த சிட்னி தண்டர்ஸ் அணியும் எலிமினேட்டரில் வென்ற பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணியும் இதில் மோதின. இந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட்ஸ் வெற்றி பெற்று சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. #BBL

பேட் ஃபிௐௐளிப் முறையில் வென்ற பிரிஸ்பேன் அணியின் கேப்டன் க்ரிஸ் லின் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். எலிமினேட்டரிலும் பிரிஸ்பேன் அணி சேஸ் செய்துதான் வெற்றி பெற்றிருந்தது. அதனால் லின் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

சிட்னி தண்டர்ஸின் சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸும், கவாஜாவும் ஓப்பனர்களாக களமிறங்கினர். பிரிஸ்பேன் அணி சார்பில் பார்ட்லெட் முதல் ஓவரை வீசினார். பிட்ச் கொஞ்சம் ஸ்விங்குக்கு ஒத்துழைத்ததால் பந்தில் மூவ்மென்ட் இருந்தது. இதனால் கவாஜா க்ரீஸை விட்டு இறங்கி இறங்கி வந்து ஆடிக்கொண்டிருந்தார். முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே போனது. பார்ட்லெட் சிறப்பாக வீசிய போதும் அவருக்கு தொடர்ந்து ஓவர்கள் கொடுக்கப்படவில்லை. எலிமினேட்டரிலும் இப்படித்தான் அவருக்கு முதல் ஓவரை மட்டும் கொடுத்துவிட்டு 10 ஓவர் முடிந்தவுடன் X Factor-ஐ பயன்படுத்தி மோர்னே மோர்கலை உள்ளே அழைத்துக் கொண்டார்கள். இந்த போட்டியிலும் அதே கதைதான்.

கவாஜா மற்றும் ஹேல்ஸ் இருவருமே முழுமையான டச்சிலேயே இல்லை. பவர்ப்ளேயில் இருவரும் ஆளுக்கொரு பவுண்டரி அடித்தார்கள் அவ்வளவுதான். பவர்ப்ளேயின் கடைசிப்பந்தில் ஸ்டெக்கிடியின் ஷார்ட் பாலில் மிட் ஆனில் தூக்கியடித்து கேட்ச் ஆனார் ஹேல்ஸ். பவர்ப்ளே முடிவில் சிட்னி அணி 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

#BBL
#BBL

இதன்பிறகு கூட்டணி சேர்ந்த காலம் ஃபெர்குசன் மற்றும் கவாஜா ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அடித்து ஆடிக்கொண்டிருந்தனர். ஒரு சில ஓவர்கள் நிலைத்து நின்ற இவர்களை 9-வது ஓவரில் லாபுஷேன் பிரித்துவிட்டார். லாபுஷேனின் டெலிவரியில் இறங்கி வந்து ஸ்டம்பிங் ஆகி 28 ரன்னில் வெளியேறினார் கவாஜா. லாபுஷேன் ஒரு ஆல்ரவுண்டராக இந்த சீசனில் மிரட்டி வருகிறார். இதுவரை 15 ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கும் அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஃப்ளைட்டட் டெலிவரிக்களாக வீசி பேட்ஸ்மேன்களை ஷாட்டுக்கு இழுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க வைக்கிறார்.

10 ஓவர்கள் முடிவில் சிட்னி அணி 68 ரன்களை எடுத்திருந்தது. X Factor ஆக உள்ளே வந்த மோர்னே மோர்கல் வீசிய முதல் ஓவரிலேயே ஃபெர்குசனை ஒரு ஷார்ட் பாலில் வீழ்த்தினார். இதன்பிறகு உள்ளே வந்த சாம் பில்லிங்ஸ் பவுண்டரியும் சிக்சருமாக அடித்து ரன்னை உயர்த்தினார். இவருக்கு மோர்னே மோர்கல் ஓவரிலேயே ஸ்கொயர் லெகில் கிரிகோரி ஒரு கேட்ச்சையும் கோட்டை விட்டிருந்தார்.

பில்லிங்ஸ் 34 ரன்னில் வெளியேறிய பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. ஆனால், பென் கட்டிங் ஒரு எண்ட்டில் நின்று கொண்டு அதிரடியில் மிரட்டினார். மோர்னே மோர்கலின் ஓவரில் இவர் அடித்த ஒரு சிக்சர் 101 மீட்டருக்கு மேல் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. கடைசி இரண்டு ஓவர்களில் பவர் சர்ஜையும் எடுத்து 21 ரன்கள் சேர்த்தார் பென் கட்டிங். ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர்கள் விளாசியிருந்த பென் கட்டிங் 34 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். சிட்னி அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்களை சேர்த்தது.

பிரிஸ்பேன் அணி வெற்றி பெற 159 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணியின் சார்பாக லின்னும் டென்லியும் களமிறங்கினர். பிரிஸ்பேன் அணியின் பௌலர்களுக்கும் ஸ்விங் கைகொடுத்தது. முதல் ஓவரில் ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் லின் திணறினார். இரண்டாவது ஓவரில் டென்லி, டேனியல் சாம்ஸிடம் போல்டானார். நம்பர் 3-ல் லாபுஷேன் வந்தார். டொகேட் வீசிய 3-வது ஓவரில் லின் பவுண்டரியையும் சிக்சரையும் அடித்துவிட்டு ஒரு ஷார்ட் பாலில் மிட் ஆஃபில் தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பவர்ப்ளேக்குள்ளாகவே பிரிஸ்பேன் அணி தனது இரண்டு ஓப்பனர்களையும் இழந்தது. இதன்பிறகு கூட்டணி சேர்ந்த லாபுஷேன் மற்றும் ஹெசல்ட் கூட்டணி விக்கெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து ரிஸ்க் எடுக்காமல் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்து ஆட தொடங்கியது. டேனியல் சாம்ஸ் வீசிய 12வது ஓவரில்தான் இந்த கூட்டணி பிரிந்தது. அதுவும் ரன் அவுட்டில். லாபுஷேன் டீப் லெகில் அடித்துவிட்டு இரண்டு ரன்னுக்கு முயற்சித்து ரன் அவுட் ஆனார். லாபுஷேன் 32 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஹெசல்ட்டுடன் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பியர்சன் கூட்டணி போட்டார்.

#BBL
#BBL

லாபுஷேன் அவுட் ஆன உடனே ஹெசல்ட் கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். தன்வீர் சங்காவின் ஓவரில் இரண்டு பெரிய சிக்சர்களை பறக்கவிட்டார். பவர் சர்ஜில் 27 ரன்கள் வந்தது. இவ்வாறாக, பிரிஸ்பேன் அணி வெற்றி இலக்கை நெருங்கியது. கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு புல் ஷாட் ஆடி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார் ஹெசல்ட். ஹெசல்ட் 74 ரன்களிலும், பியர்சன் 43 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹெசல்ட்டுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற பிரிஸ்பேன் அணி அடுத்த சேலஞ்சர் சுற்றுக்கு தகுதிபெற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு