Published:Updated:

"அவரை மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டாம்!"- சாஹா விவகாரத்தில் அதிரடி முடிவு எடுக்கிறதா பிசிசிஐ?

ரித்திமான் சாஹா

கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹாவை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி தரச் சொல்லி வற்புறுத்தியது தொடர்பான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை 'மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டாம்' என்றுக் கூறியுள்ளது பிசிசிஐ கமிட்டி.

"அவரை மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டாம்!"- சாஹா விவகாரத்தில் அதிரடி முடிவு எடுக்கிறதா பிசிசிஐ?

கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹாவை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி தரச் சொல்லி வற்புறுத்தியது தொடர்பான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை 'மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டாம்' என்றுக் கூறியுள்ளது பிசிசிஐ கமிட்டி.

Published:Updated:
ரித்திமான் சாஹா

அண்மையில் நடந்த இலங்கை டெஸ்ட் சீரிஸில் இந்திய வீரர்களின் பட்டியலில் விக்கெட் கீப்பிங் பேட்டர் ரித்திமான் சாஹா உள்ளிட்ட பல சீனியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது பேசுபொருளானது. இது தொடர்பாக பேசிய சாஹா, பயிற்சியாளர் டிராவிட், பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகியோர் இனி வரும் அனைத்து தொடர்களிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியதாகவும் தன்னை ரஞ்சித் தொடரில் கலந்து கொள்ளச் சொல்லி சேத்தன் சர்மா கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரிதாகப் பேசப்பட்ட நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி தரச் சொல்லி தன்னை வற்புறுத்தியதாக சாஹா குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ‘இந்திய கிரிக்கெட்டிற்கு இத்தனை வருடங்கள் பங்காற்றிய வீரரை ஒரு மதிப்புமிக்க பத்திரிகையாளர் நடத்தும் விதம் இதுதான்’ என்று தன் ஆதங்கத்தை ட்விட் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார். அந்தப் பத்திரிகையாளர் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் தன் ட்வீட்டில் இணைத்திருந்தார். இதற்கு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், "இதன் உண்மைத்தன்மை குறித்தும் சாஹா மிரட்டப்பட்டரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று பேர் கொண்ட பிசிசிஐ கமிட்டி, இதில் சம்பந்தப்பட்ட போரியா மஜும்தார் (Boria Majumdar) என்ற பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இது பற்றிக் கூறிய பிசிசிஐ கமிட்டி, "ஹோம் மேட்ச்களுக்கு போரியா மஜும்தார்க்கு மீடியா அங்கீகாரம் வழங்கப்படாது. அவரை மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து மாநில பிரிவுகளுக்கும் தெரிவிப்போம். அவரை தடுப்புப்பட்டியலில் (blacklist) சேர்க்க ஐசிசிக்குக் கடிதம் எழுதுவோம். கிரிக்கெட் வீரர்கள் அவருடன் எந்தவிதமான பேட்டியிலும் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளது. இந்தத் தடை 2 வருடங்கள் வரை நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism