Published:Updated:

`இந்திய தொடரில் விளையாட ஆசைப்படுவது ஏன்?' - கோலியைக் குறிப்பிடும் ட்ரென்ட் போல்ட்

போல்ட் - கோலி
போல்ட் - கோலி

ஸ்விங் பந்துகளால் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் போல்ட், இந்த டெஸ்ட் தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்ற, அதற்கு அடுத்து தொடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்று பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தத் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

`இந்திய தொடரில் விளையாட ஆசைப்படுவது ஏன்?' - கோலியைக் குறிப்பிடும் ட்ரென்ட் போல்ட்

டெஸ்ட் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்கவுள்ளது. டி20, ஒருநாள் தொடர்களில் காயம் காரணமாக விளையாடாத ட்ரென்ட் போல்ட், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குகிறார். தனது ஸ்விங் பந்துகளால் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் போல்ட், இந்த டெஸ்ட் தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறார். இதற்காகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ள போல்ட், இந்திய தொடரில் தான் பங்கேற்க விரும்புவதன் காரணத்தை வெளியிட்டுள்ளார்.

``தனிப்பட்ட முறையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் காண விரும்புவதற்குக் காரணம், கோலி போன்ற தரமான வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து, அதன் மூலம் என்னை நானே பரிசோதிக்க விரும்புகிறேன். அதனால் தாமதிக்காமல் அணிக்குத் திரும்ப விரும்புகிறேன். எனினும் கோலி தரமான, அபாயகரமான வீரர். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

விராட் கோலி
விராட் கோலி

வெலிங்டன் மைதானத்தில் விளையாடுவதை எப்போது விரும்புவோம். 5 நாள் ஆட்டமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. கடந்த 6 வாரங்கள் கிடைத்த ஓய்வில் இருந்து வெளிவரவே முயற்சி செய்கிறேன்" என்றார். கடந்த உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டரை போல்ட் காலி செய்ய, நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடந்த டிசம்பர் மாதம் பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்து வந்தார். நியூசிலாந்தின் ஸ்விங் ஆடுகளங்களில் போல்ட் நிச்சயம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்.

அடுத்த கட்டுரைக்கு