Published:Updated:

HBD Herschelle Gibbs: சர்ச்சைகளும் சாதனைகளும் கலந்து செய்த 90'ஸ் கிட்ஸின் ஆதர்ச நாயகன்!

Herschelle Gibbs

அத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் கிப்ஸ் ஏன் 90'ஸ் கிட்ஸ் கொண்டாடிய ஒரு ஹீரோவாக இருந்தார்?

HBD Herschelle Gibbs: சர்ச்சைகளும் சாதனைகளும் கலந்து செய்த 90'ஸ் கிட்ஸின் ஆதர்ச நாயகன்!

அத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் கிப்ஸ் ஏன் 90'ஸ் கிட்ஸ் கொண்டாடிய ஒரு ஹீரோவாக இருந்தார்?

Published:Updated:
Herschelle Gibbs

இப்போதைய வீரர்கள் போன்று கிப்ஸுக்கு எம்.ஜி.ஆர் வேடம் போட தெரியாது. நிஜத்தில் எப்படியோ பிட்ச்சிலும் அப்படித்தான். புரிந்துக்கொள்ள முடியாத புதிராகவே இருந்தார். க்ரோனியிடம் பேரம் பேசி 20 ரன்களுக்குள் அவுட் ஆகி விடுகிறேன் என சூதாட்டத்திற்கு ஒப்புக்கொள்வார். ஆனால், க்ரீஸுக்குள் சென்று அதை மறந்துவிட்டு அதிரடியாக ஆடி அரைசதம் அடிப்பார். சூதாட்ட புகார் எழுந்த போது தானாக முன்வந்து தானும் தவறு செய்ததாக தண்டனையை பெற்றுக் கொண்டார். குடித்துவிட்டு கார் ஓட்டி இம்சை கொடுத்தார். பாகிஸ்தான் வீரர்கள் மீது இனவெறியோடு வசைபாடி அபராதம் கட்டினார். கேப்டன் ஸ்மித்திற்கும் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கும் கிப்ஸை சமாளிப்பதே பெரிய வேலையாக இருந்தது. சமயங்களில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் குறித்தே வெளிப்படையான விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார்.

ஸ்மித் மற்றும் மிக்கி ஆர்தருக்கு கிப்ஸ் மீது பயங்கர அதிருப்தி இருந்தாலும் அணியில் அவரின் இடத்தின் மீது கை வைக்கவே இல்லை. பூனை கருப்பா வெள்ளையா என்பதை விட அது எலியை பிடிக்குமா என்பதே முக்கியம் என்பதை இருவருமே நன்கு உணர்ந்திருந்தனர். கிப்ஸ் களத்திற்கு வெளியே எவ்வளவு வேகமாக பாய்கிறாரோ அதே வேகத்தில் களத்திற்குள்ளும் பாய்ந்தார். இதனால், 2008 வரைக்குமே தென்னாப்பிரிக்க அணியின் மிக முக்கிய வீரர்களுள் ஒருவராக இருந்தார்.

அத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் கிப்ஸ் ஏன் 90'ஸ் கிட்ஸ் கொண்டாடிய ஒரு ஹீரோவாக இருந்தார்? இந்த வீடியோவில் காணுங்கள்.