Published:Updated:

IPL 2023-ல் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு; பிசிசிஐயின் புதிய திட்டம் கைகொடுக்குமா?

IPL Auction 2023

2022-லும் இந்திய அணியின் தோல்விகள் தொடர்ந்தன. ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என அடுத்தடுத்து அடி வாங்கியது. இப்போதுதான் பிசிசிஐக்கு வீரர்களின் பணிச்சுமை குறித்துச் சிந்திக்கும் எண்ணம் வந்திருக்கிறது.

IPL 2023-ல் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு; பிசிசிஐயின் புதிய திட்டம் கைகொடுக்குமா?

2022-லும் இந்திய அணியின் தோல்விகள் தொடர்ந்தன. ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என அடுத்தடுத்து அடி வாங்கியது. இப்போதுதான் பிசிசிஐக்கு வீரர்களின் பணிச்சுமை குறித்துச் சிந்திக்கும் எண்ணம் வந்திருக்கிறது.

Published:Updated:
IPL Auction 2023
பிசிசிஐ தங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்தறியும் கூட்டத்தைச் சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறது. இதில், மிக முக்கியமாக ஐ.பி.எல் போட்டிகள் குறித்தும் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஐ.பி.எல் போட்டிகளில் ஆடும் முக்கிய வீரர்களின் உடற்திறன் தேசிய கிரிக்கெட் அகாடமியால் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான ஓய்வை வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Team India
Team India
BCCI

இந்திய அணி சமீபமாக முக்கியமான ஐ.சி.சி தொடர்களிலும் பன்னாட்டுத் தொடர்களிலும் கடுமையக்ச் சொதப்பி வருகிறது. இந்திய அணியின் சொதப்பல்களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், 'பணிச்சுமை' என்பதும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருப்பதால் அயர்ச்சியடைந்துவிடுகின்றனர். முன்னணி வீரர்கள் பலர், காயங்களில் சிக்கி முக்கியமான போட்டிகளில் பங்கேற்க முடியாமலும் போகிறது. கடந்த 2021 டி20 உலகக்கோப்பை, ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த ஒரு சில நாள்களில் நடைபெற்றிருந்தது. ஐ.பி.எல்-இல் அதே துபாயில் சிறப்பாக ஆடிய வீரர்கள் உலகக்கோப்பையில் கடுமையாகச் சொதப்பியது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. வீரர்கள் மெஷின் போல தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருப்பதுதான் பிரச்னை என்று பேசப்பட்டது.

இந்திய அணியின் நட்சத்திர பௌலரான பும்ரா, "தொடர்ச்சியாகப் போட்டிகளில் ஆடிக்கொண்டே இருப்பது ஒரு வித மனச்சோர்வை உண்டாக்குகிறது" என வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஆயினும் பிசிசிஐ, வீரர்களின் `பணிச்சுமை' குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை.

விளைவு, 2022-லும் தோல்விகள் தொடர்ந்தன. ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என இந்திய அணி அடுத்தடுத்து அடி வாங்கியது. இப்போதுதான் பிசிசிஐக்கு வீரர்களின் பணிச்சுமை குறித்துச் சிந்திக்கும் எண்ணம் வந்திருக்கிறது.

Bumrah
Bumrah
AP

இந்த 2023-ம் ஆண்டில் ஓடிஐ உலகக்கோப்பை இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கும் நிலையில், இந்த உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. இந்நிலையில், இந்த உலகக்கோப்பைக்காக உத்தேசமாக ஒரு 20 வீரர்களை பிசிசிஐ டிக் அடித்து வைத்திருக்கிறது. இந்த 20 வீரர்களும் வரவிருக்கிற ஐ.பி.எல் தொடரில் ஆடும்போது அவர்களின் உடற்திறனை பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணித்துக் கொண்டே இருக்கும். மேலும், இந்த 20 வீரர்களுக்கும் பணிச்சுமையைக் குறைத்து அவர்களுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படாமல் ஐ.பி.எல் அணிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். தேசிய அணியில் இடம்பிடிக்க வீரர்கள் யோ-யோ தேர்வில் கட்டாயம் தேர்ச்சியடைந்தே ஆகவேண்டும் என்ற விதிமுறையையும் பிசிசிஐ கொண்டு வந்துள்ளது.

Mumbai Indians
Mumbai Indians
ஐ.பி.எல்-இல் வீரர்களுக்கான பணிச்சுமையைக் குறைக்க பிசிசிஐ கொண்டு வந்திருக்கும் தீர்மானத்திற்கு ஐ.பி.எல் அணிகள் ஒத்துழைப்பு தருமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.