Published:Updated:

GT v CSK : 84 டாட் பந்துகள்; 42,000 மரக்கன்றுகள்; பிசிசிஐ-யின் புதிய முயற்சி என்ன?

தோனி, ஹர்திக் பாண்டியா

ஐபிஎல்லின் இந்த பிளே ஆப் சுற்றுகளின் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.

Published:Updated:

GT v CSK : 84 டாட் பந்துகள்; 42,000 மரக்கன்றுகள்; பிசிசிஐ-யின் புதிய முயற்சி என்ன?

ஐபிஎல்லின் இந்த பிளே ஆப் சுற்றுகளின் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.

தோனி, ஹர்திக் பாண்டியா
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்  ஐபிஎல்லின் இந்த பிளே ஆப் சுற்றுகளின் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.

பிசிசிஐ- யின் இந்த முயற்சியை  பலரும் வரவேற்று இருக்கின்றனர்.  நேற்று நடைபெற்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு  இடையிலான போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் எல்.இ.டி ஸ்கிரீனில் பச்சை மரத்தின் எமோஜியும் காட்டப்பட்டிருந்தது.

CSK VS GT
CSK VS GT

இந்நிலையில் நேற்றையப் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியுள்ளது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 34 டாட்  ஆடியிருந்தார்கள். அதேபோல் குஜராத் அணி 50 டாட் ஆடியிருந்தார்கள். இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 84 டாட்  ஆடியிருக்கிறார்கள்.  ஒரு டாட்  பந்துக்கு 500 மரக்கன்றுகள் என்றால்  84 டாட்டிற்கு 42,000 மரக்கன்றுகளை பிசிசிஐ நட வேண்டும்.

பிசிசிஐ- யின் இந்த புதிய முயற்சி குறித்து தங்களது கருத்துக்களைக் கமெண்டில் பதிவிடுங்கள்!